Featured Posts

அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 3

தமிழோவியத்தில் கடந்த இருவாரங்களாக வஹீ (வேத வெளிப்பாடு) பற்றிய தவறான புரிந்து கொள்ளுதல்களின் பெயரால் முஸ்லிம்கள் மீதான சிந்தனைத் தாக்குதல்களையும் அத்தாக்குதல்களின் பின்னனியையும் அலசினோம். இந்த வாரம் வெளியான “அடிப்படையும் அடிப்படைவாதமும்” என்ற தொடரை தமிழ்மணம் வாசகர்களுக்கு மறுபதிவு செய்கிறேன்.

இத்தொடருக்கான பின்னூட்டங்களை இங்கு காணலாம்.

அ) அடிப்படையும் அடிப்படைவாதமும்

அடிப்படைவாதம் (Fundamentalism – The interpretation of every word in the Bible as literal truth அல்லது Strict Adherence to the religious doctrine). அதாவது மதக்கொள்கைகளை சொல்லப்பட்ட அடிப்படையிலிருந்து விலகாமல் கடைபிடித்தல். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை “அடிப்படைவாதம்” என்ற சொற்பிரயோகம். கிறிஸ்தவத்தை தீவிரமாக பின்பற்றுபவர்களைக் குறிக்கவே பயன் பட்டது. இன்று அடிப்படைவாதம் என்றால் இஸ்லாத்தோடும் முஸ்லிம்களோடும் தொடர்பு படுத்தப்படுகிறது. காரணம் இஸ்லாம் தவிர ஏனைய மதக் கொள்கைகள் அடிப்படையை விட்டு விலகி விட்டன என்ற ஒற்றைக் காரணமே.

ஆ) தேடல்களும், கலாசாரங்களுக்கிடையேயான மோதல்களும்:

கலாச்சாரங்களுக்கிடையான நம்பிக்கை மோதல்கள்தான் மோதல்களிலேயே மோசமான மோதல். உலகில் மனித இனம் தோன்றியது முதல் மனிதன் பல்வேறு நம்பிக்கைகளை இரண்டு வகையான தேடல்களின் அடிப்படையில் மனிதன் கடந்து வந்துள்ளான். அத்தகைய தேடல்களில் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமிடையேயான போராட்டமே இன்றைய பிரச்னைகளுக்கு காரணமாகும்.

முதலாவதாக வயிற்றுப்பசி மற்றும் உடற்பசி போன்ற புறத்தேடல்கள். மற்றவை அறிவு, ஆன்மீகம் போன்ற அகத்தேடல்கள். புறத்தேடல்களான வயிற்றுப்பசி மற்றும் உடற்பசி போன்றவற்றில் மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் ஏறத்தாழ பொதுவான அம்சங்களே உள்ளன. அகத்தேடல் மூலமே மனிதன் மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபட்டு சிறப்புறுகிறான்.

ஒவ்வொரு உயிருக்கும் வயிற்றுப்பசியும் உடல்பசியும் வாழ்க்கைக்கான அவசியங்கள். இவையின்றி எந்த உயிரினமும் இல்லை. தான் உணவாகி விடக்கூடாது. அதே சமயம் தனக்கு உணவு கிடைக்க வேண்டும். இந்தத் தற்காப்பு உணர்வு அனைத்து உயிர்களுக்குமுள்ள பொதுவான அம்சம்.

அகத்தேடல்களின் அவசியம் மனிதன் தன் நிலையை ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு மாற்றிக் கொள்ள அவசியமாக உள்ளது. புறத்தேடல்கள் ஒரு நிலையில் முடிவுக்கு வந்துவிடும். அகத்தேடல்களுக்கு முடிவு என்பதே இல்லை. இந்த தொடர்ச்சியான தேடல்தான் மனிதனின் வாழ்க்கையை நடத்திச் செல்கிறது.

இ) ஆன்மீகத் தேடல்களும் மதங்களும்:

புறத்தேடல்களால் திருப்தியடையாத மனித மனம் அகத்தேடல்களை நோக்கிச் செல்கிறது. அத்தகைய தேடல்களுக்கு ஒரு அமைப்பு முறை அவசியமாகிறது. அவ்வாறு தேடிய அகத்தேடல்களின் தொடர்ச்சிதான் மதங்களின் தோற்றமும் பிறப்பும். மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்த வந்ததாக சொல்லப்படுகின்றன. பல்வேறு காலங்களில் அறிமுகமான மதக்கொள்கைகள் அந்தந்த காலகட்ட மக்களுக்குத் தேவையான வாழ்க்கைத் தத்துவங்களை போதித்தன.அவற்றைப் புரிந்து கொள்ளுதலில் ஏற்பட்ட வித்தியாசம் ஒரு மத நம்பிக்கையை மற்ற மத நம்பிக்கையிலிருந்து வேறுபடுத்தியது.

ஒரு ந

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *