இஸ்லாம் மார்க்கம் மற்ற மதங்களைப் போல், ஒப்புக்கு இறை வழிபாட்டையும் நல்லவை-கெட்டவைகளையும் சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், மனித வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் தலையிட்டு உடலையும் உள்ளத்தையும் பதப்படுத்தி ஈருலகிலும் வாழ்க்கையும் வெற்றியாக்கிட வழி சொல்லுகிறது.
கடமையான தொழுகைகள்:
முஸ்லிம்களின் தொழுகை என்னும் இறைவழிபாடுகள் உளு என்னும் உடல் சுத்தியிலிருந்து தொடங்குகிறது. தொழுகையில் தக்பீர் (உச்சரிப்பு), கியாம் (நிலை) ருகூஃ (குனிதல்), ஸஜ்தா (தலைவணங்குதல்), ஜல்சா (இருப்பு), தஸ்லீம் (தொழுகையை முடித்தல்). இவற்றை ஒவ்வொரு நாளும் ஐந்து கட்டாயத் தொழுகைகளிலும், உபரித் தொழுகைகளிலும் மேலும் ரமலான் மாதத்தில் இரவுத்தொழுகையான் தராவிஹ் தொழுகையிலும் செய்து வருகிறோம்.
“தொழுகைக்காக நின்றால் நன்றாக உளூச் செய்து கொள்! பின்னர் கிப்லாபை நோக்கி நின்று, ‘அல்லாஹு அக்பர்’ என்று தக்பீர் கூறிக் கொள்! பின் (மெதுவாக) ருகூவு செய்! பின்னர் எழுந்து நேராக உனக்குத் திருப்தி ஏற்படும் வகையில் நிதானமாக நின்று கொள்! பின்னர் தலையை உயர்த்தி நன்றாக அமர்ந்து கொள்! பின்னர் திருப்தியாக ஸஜ்தா செய்து கொள்! பின்னர் இதேபோன்று உனக்குத் திருப்தி ஏற்படும் வரையில் தொழுகை முழுவதும் (ஒவ்வொரு ரக்அத்திலும்) செய்து கொள்!”
என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, நஸாயீ மற்றும் இப்னு மாஜா.
ஒவ்வொரு தொழுகையிலும் இவற்றை பலமுறை செய்ய வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு ஐந்து வேளை கட்டாயத்தொழுகைகளுக்கு (2+4+4+3+4= 17 தடவைகள்) உடலை மேற்கண்டவாறு வளைத்து நிமிர்வதால் சுமார் 85 முறை மேற்கண்ட செயல்களைச் செய்ய வேண்டும்.
சாதாரணமாக உடற்பயிற்சி செய்வதில் கிடைக்கும் முறைந்த பட்ச பலன்களை முஸ்லிம்கள் ஒவ்வொரு நாளும் பெறுகிறார்கள். இவ்வாறு தொழப்படும் தொழுகைகளால் உடலின் இயங்கு சதைப்பகுதிகள் சமமான ஒரே சீராக இயங்குகின்றன.
இந்த அசாதாரன அனிச்சை செயல்களால் உடலின் ஊட்டச்சத்து இருப்பு அபரிமிதமாக உட்கொள்ளப் படுவதால் எலும்புகளில் ஆக்ஸிஜன் குறைந்து மூட்டுக்களுக்குத் தேவையான நாளங்களுக்கு இடையே இரத்த ஓட்டம் சமச்சீரடைகிறது. இதன் மூலம் இதயத்திற்குத் தேவையான இரத்தம் தங்கு தடையின்றி கிடைக்கிறது. இந்த தற்காலிக இரத்த ஓட்ட வேகம் இதயத்திற்குத் தேவையான இரத்தத்தை அதிகப்படுத்தி, இதயத் தசைகளை வலுவாக்குகின்றன.
உபரித்தொழுகைகள் (தராவிஹ்)
”நான் நபி(ஸல்) அவர்களின் உபரித் தொழுகையைப் பற்றி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்கள் என்னுடைய இல்லத்தில் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்துகளை தொழுவார்கள். பின்னர் பள்ளிவாசலுக்கு சென்று மக்களுக்கு லுஹர் தொழுகை நடத்துவார்கள். தொழுகை முடிந்த பின்பு என் இல்லத்திற்கு வந்து இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள்.
(அவ்வாறே) மக்ரிப் தொழவைக்காக பள்ளிவாசலுக்கு புறப்பட்டுச் செல்வார்கள். தொழுகை முடிந்த பின்பு என் இல்லத்திற்கு வந்து இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள் பின்னர், இஷா தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்வார்கள் தொழுகை முடித்த பின்பு என் இல்லத்திற்கு வந்து இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள்.
மேலும், நபி(ஸல்) அவர்கள் இரவில் ஒன்பது ரக்அத்துகள் தொழுவார்கள். அவற்றில் வித்
//இஸ்லாம் மார்க்கம் மற்ற மதங்களைப் போல், ஒப்புக்கு இறை வழிபாட்டையும் நல்லவை-கெட்டவைகளையும் சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல்//
அதாவது அனைத்து மதங்களை விட இஸ்லாம் மேலானது.அப்படியா ?
“ஒப்புக்கு” என்றால்? போகிற போக்கில் “மற்ற மதங்களை” விமர்சிக்கக் கூடாது. பிறகு உமக்கும் வலைப்பதிவுகளில் உலாவும் இந்து வெறியர்களுக்கும் என்ன வேறுபாடு? தனது மதத்தில் பிடிப்பு கொண்ட எவருக்கும் நடுநிலைமை என்கிற ஒன்று இருக்க வாய்ப்பே இல்லையோ?
விளக்கம் அருமை.
நன்றி.
//அதாவது அனைத்து மதங்களை விட இஸ்லாம் மேலானது.அப்படியா ? //
சமுத்ரா நல்லவரா? கெட்டவரா?
//தனது மதத்தில் பிடிப்பு கொண்ட எவருக்கும் நடுநிலைமை என்கிற ஒன்று இருக்க வாய்ப்பே இல்லையோ?//
அவரவர் மதத்தின்/மார்க்கத்தின்/கொள்கையின் நல்ல பக்கங்களைச் சொல்வதில் தவறில்லை என்பது என்நிலை.உங்கள் பெயரைப் பார்த்தால், சொல்வது அறிவுரையாகப் படவில்லை.
//விளக்கம் அருமை//
பாராட்டுக்கு நன்றி.