Featured Posts

கோட்சேயும் சில (அ)நியாயங்களும்

திரு.டோண்டு ராகவன் அவர்கள் “காந்தியும், கோட்சேயும்” என்ற தலைப்பில் திரு.மலர் மன்னன் என்ற காவிச் சிந்தனையாளரின் கட்டுரையை மறுபதிவு செய்திருந்தார்கள்.

கட்டுரையின் சாராம்சம் நாதுராம் கோட்சே, மகாத்மா காந்தியை படுகொலை செய்ததற்கு, காந்தியாரின் முஸ்லிம்களின் மீதான பரிவே காரணம் என்று சொல்லி இருந்ததோடு கோட்சேக்கு எவ்வித இயக்கப் பின்னனியும் இல்லை என்றும், காந்தியாரை சுட்டுக் கொல்லும்போது மற்றவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் என்றும் இன்னும் சில விநோதமான காரணங்களையும் சொல்லி கட்டுரை வடித்திருந்தார்.

மூன்று மாநிலங்களின் போலீசுடன் கடந்த இருபது வருடங்களாக திருடன்- போலீஸ் விளையாட்டு விளையாடிய சந்தனக் கொள்ளையன் வீரப்பனுக்கும், அமெரிக்காவின் கண்ணில் விரலை விட்ட உசாமா பின்லாதினுக்கும் அவர்கள் சார்ந்த சமூகத்தில் சில அனுதாபிகள் இருக்கும் போது, நாதுராம் கோட்சேயின் சமூகம் மட்டும் விதிவிலக்கா என்ன?

கட்டுரையாளரும் அதனை மறுபதிவு செய்த திரு.டோண்டு ராகவன் அவர்களும் கோட்சேயின் செயலை நியாயப்படுத்தி இருந்தால், அவர்களின் இனப்பாசத்தால் செய்கிறார்கள் என்று சமாதானமடையலாம்.

இந்தியாவின் சுதந்திரப் போரில் முக்கிய பங்கு வகித்த, ஆங்கிலேயருக்கு எதிராக போராட வேண்டும் என்ற உந்துதால் அவர்களின் ஆங்கிலம் கற்பதை ஹராம் (தடுக்கப்பட்டது) என்ற பத்வா வழங்கி இன்றும் ஒரு சில இடஒதுக்கீடுகளுக்காக வீதியில் போராடிக் கொண்டிருக்கும் இந்திய முஸ்லிம்களையும், இனிமேல் சுதந்திரப்போராட்டங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று அடிமை சாசணம் எழுதிக் கொடுத்ததோடு, சுதந்திரப் போராளிகளைக் காட்டிக் கொடுக்கவும் துணிந்த சாவர்க்கர், வாஜ்பாய் வகையறாவைச் சார்ந்த திரு.மலர் மன்னனுக்கு இந்திய முஸ்லிம்களையோ அல்லது கேரள மாப்பிள்ளைமார் சமூகத்தையோ விமர்சிக்க அருகதை இல்லை.

காந்தியாரை படுகொலை செய்த படுபாதகனுக்கு பரிவு காட்டுவதோடு நில்லாமல் அவன் (கோட்சே) RSS அல்லது அதன் முன்னோடி இயக்கங்களான இந்து மகாசபை, ஜனசங்கம் ஆகியவற்றில் தொடர்பில்லை என்ற முழு பூசணியை கட்டுச் சோற்றில் மறைக்கும் வரலாற்று புரட்டுச் செய்துள்ளனர்.

மொஹலாயர்களும் ஆரியர்களும் இந்தியாவிற்கு வந்த அந்நிய மனிதர்கள் என்ற வரலாற்றுச் செய்தியைக் கூட “மொஹலாயர் படையெடுப்பு” என்றும் “ஆரியர் வருகை” என்றும் ஒரே நிகழ்வுக்கு இருவேறு பதங்களை உபயோகித்து வரலாற்றை எழுதும் நடுநிலையாளர்கள்! அல்லவா இவர்கள்?

1993 இல் நாதுராம் கோட்சேயின் “Why I Assassinated Mahatma Gandhi” என்ற புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய கோபால் கோட்சேயிடம் FRONTLINE பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில்

All the [Godse] brothers were in the RSS. Nathuram, Dattatreya, myself and
Govind. You can say we grew up in the RSS rather than in our home. It was like a
family to us. Nathuram had become a baudhik karyavah [intellectual worker] in
the RSS. He has said in his statement that he left the RSS. He said it because
[Madhav Sadashiv] Golwalkar and the RSS were in a lot of trouble after the
murder of Gandhi. But he did not leave the RSS.”
[See issue of 28 January 1994] என்றார். ”

கோட்சே சகோதரர்களாகிய நாங்கள் நாதுராம், தத்தரேயா, நான் மற்றும் கோவிந்த் ஆகியோர் RSS இல் இருந்தோம்; அது (RSS) எங்களுக்கு குடும்பம் மாதிரி இருந்தது. நாதுராம் பவுதிக் கார்யவாஹ் (சிந்தனையாளர்) ஆக இருந்தார். கோட்சேயின் வாக்குமூலத்தில் RSS ஐ விட்டு விலகியதாகச் சொன்னது மாதப் சதாசிவ ல்வார்க்கரும் மற்ற கொலையாளிகளும் கடும் நெருக்கடியில் இருந்ததால்தான்; ஆனால் கடைசிவரை RSS இல்தான் இருந்தார்” (பார்க்க ஃப்ரண்ட் லைன் 28-01-1994).

மேலும் காந்தியாரை கோட்சே சுட்ட போது ஆர்.எஸ்.எஸ்ஸில் இல்லை; இந்து மகா சபையில்தான் உறுப்பினராக இருந்தார்” என்று ஒன்றைக் கிளப்பி ஆர்.எஸ்.எஸ்ஐக் காப்பாற்றப் பார்க்கிற
ார்கள்.

அப்படியே பார்த்தாலும் ஆர்.எஸ்.எஸ் வேறு அல்ல – இந்து மகா சபையும் வேறு அல்ல! பஜ்ரங்தள் வேறு; விசுவ ஹிந்து பரிஷத் வேறு என்று சொல் அளவில் சொல்லலாமே தவிர, உண்மையில் இவை இரண்டும் சங்பரிவார் என்கிற தலைப்புக்குள் வரவில்லையா? 1930-களில் இந்து மகா சபையுடன் ஆர்.எஸ்.எஸ் உறவுகள் சுமூகமாக இல்லை. ஆனால் சில ஆண்டுகளில் பரஸ்பரம் பலன் அளிக்கிற முறையில் மாறின. மகாசபையின் இளைஞர் அணியாக தாருன் இந்து சபாவை நிறுவிய பாபுராவ் சவார்க்கர் 1931-ஆம் ஆண்டில் அந்த ஸ்தாபனத்தை ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இணைத்தார்.

திரு.டோண்டு அவர்களின் நியாயங்களும் கண்ணோட்டங்களும் விசித்திரமாக உள்ளன. அதாவது காந்தியை சுட்டவன் RSS ஐச் சார்ந்தவனாக இருந்திருப்பின் பள்ளி பாடப்புத்தகங்களில் அப்படி சொல்லப்படவில்லையே? என்று அப்பாவித்தனமாக கேட்டிருந்தார்.

தமிழக அரசு இந்தக் கல்வியாண்டில் பிளஸ் டூ வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் “சுதந்திரத்துக்குப் பின் இந்தியா” என்ற தலைப்பில் பாடம் ஒன்றை சேர்த்துள்ளது. 157வது பக்கத்தில் உள்ள இந்தப் பாடத்தில் காந்தியைக் கொன்றவர் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளதையும் இதனை தமிழக ஆர்எஸ்எஸ் தலைவர் மாரிமுத்து மறுத்து வழக்கு தாக்கல் செய்துள்ளதையும் திரு.டோண்டு அவர்கள் அறியவில்லையா?

பாதகன் கோட்சே காந்தியின் சுதந்திரபோராட்ட பங்களிப்பை போற்றத் தவறவில்லை என்றும் காந்தியார் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தான் என்றும் சொல்லும் இவர்கள், காந்தியார் ஓர் அரக்கன் என்றும், அவரைக் கொன்ற கோட்சே கடவுள் என்றும் விளம்பரப்படுத்தும் நாடகத்தை (மை நாதுராம் கோட்சே போல்தே!) சில ஆண்டுகளுக்கு முன்புவரை டில்லியிலும் மும்பை யிலும் நடத்திடக் கூச்சப்படாதவர்கள் எதற்காக கோட்சேயை ஆர்.எஸ்.எஸ்.காரன் அல்லன் என்று சொல்ல முயற்சிக்கிறார்கள் என்பது புரியவில்லை.

மேலும் கோட்சே காந்தியைக் கொல்வதில் மட்டுமே குறியாக இருந்தான், அருகில் இருந்தவர்களைக் கொல்லவில்லை” என்ற வாதம், எப்படி கோட்சேயின் செயலை நியாயப்படுத்தும் என்று தெரியவில்லை. மேலும் கோட்சேயின் பேட்டியில்

“We did not want this man (Gandhi) to live. We did not want this man to die a natural death, even if 10 lives were to be lost for that purpose”

அதாவது இந்த மனிதரை (காந்தியை) நாங்கள் வெருக்கிறோம். இவருக்கு இயற்கை மரணம் சம்பவிப்பதை நாங்கள் விரும்பவில்லை. இதற்காக பத்து உயிர்கள் பலியானாலும் கவலை இல்லை” என்றதையும் வசதியாக மறந்து விட்டனர்.

திரு.டோண்டு அவர்களின் எழுத்தில் அவ்வப்போது சர்ச்சைகள் இடம் பெறுவதும் அதனை பூசி மெழுகுவதும் அடிக்கடி நிகழ்வதுதான் என்ற போதிலும் உலகமே மகாத்மா என்று அறிந்து இந்தியாவிற்கு அஹிம்சா முத்திரையை பரப்பிய அண்ணல் காந்தியவர்களின் படுகொலையை நியாயப்படுத்தும் பதிவை தன் பதிவில் பதித்தன் நோக்கத்தையும் அவரின் பதிவில் சுட்டியுள்ளேன்.

காந்தி கொல்லப்பட்ட தருவாயில் “ஹே ராம்!” என்று சொன்னாரா? என்பது பற்றியும் கேரள மாப்பிள்ளமார் சமூகத்தின் வரலாற்றையும், இந்திய முஸ்லிம்களின் சுதந்திரப் போரில் பங்களிப்பையும் பிறகு பார்ப்போம்.

20 comments

  1. நல்லடியார்

    திரு.டோண்டு அவர்களின் குறிப்பிட்ட பதிவிற்கான சுட்டி தற்போது இயங்கவில்லை. எனினும் அவர்களின் வலைப்பூவிலிருந்து இயங்குகிறது.

  2. ராமதாஸ் ஐயர்

    காந்தி ஒரு பார்ப்பனர். அவரை சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு பார்ப்பனர். அதுவும் பார்ப்பன சார்பாக இயங்கி வந்த கட்சியின் உறுப்பினர்.

    இப்படி கொல்லப்பட்டவரும் இந்து, கொன்றவரும் இந்து. இந்து என்று சொல்வதைவிட பார்ப்பனர் என்பதே பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

    ஆனால் இங்கு கட்டுரையாளரும் டோண்டுவும் இச்சம்பவத்தினை இஸ்லாத்தோடு தொடர்பு படுத்தி பேசுவது வெட்கக் கேடு.

    காந்தி அவர்களுக்கு இஸ்லாத்தின்மீது பரிவு இருந்தது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. ஆயிரம் டோண்டு வந்தாலும், ஈராயிரம் மலர்மன்னன் வந்தாலும் அது உண்மை.

  3. ராமதாஸ் ஐயர்

    நல்லடியார்,

    டோண்டு போன்ற பார்ப்பன மிருகங்களுக்கு பதில் சொல்வதை விட இன்னும் வேறு ஏதாவது உருப்படியான விஷயங்களை நீங்கள் எழுதலாமே?!

    ஆலோசனைதான்!

  4. அழகப்பன்

    இந்த நிகழ்வின் உண்மை முகத்தை அவர்களும் அறியாதவர்களல்லர். ஆனால் தங்களுடைய நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, அவ்வப்போது இதுபோன்ற கருத்துக்களை சிலர் எழுதுகின்றனர். இவருக்கு மறுப்பாக நாராயணன் எழுதிய கட்டுரைக்கு இவர் மறுப்போ அல்லது பின்னூட்ட வழி விளக்கமோ கொடுக்கவில்லை.
    http://urpudathathu.blogspot.com/2006/01/blog-post_16.html

    சம்பவம் நடந்து குறைந்த நாட்களுக்குள்ளேயே, அதிலும் சாட்சிகளில் சிலர் உயிருடன் இருக்கும்போதே இப்படி எழுதும் கும்பல், வரலாற்றை எழுதினால் எப்படி இருக்கும். ஆரியர் வருகை என்னும், முகலாயர் படையெடுப்பு என்றும்தான் இருக்கும். இந்த ஆரியர் வருகை கதையையும் மாற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இதற்காக மேலை நாட்டைச் சார்ந்த சிலரையும் தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டுவிட்டனர். ஆனால் இந்தியாவின் பூர்வீக குடிகளில் சிலர் விழிப்புடன் கண்கானித்து வருகின்றனர். இல்லையேல் மத்தியில் இவர்களின் ஆட்சி இருக்கும்போதே இந்த வேலையை முடித்திருப்பார்கள்.

  5. அப்பாவி

    //இந்தியாவின் சுதந்திரப் போரில் முக்கிய பங்கு வகித்த, ஆங்கிலேயருக்கு எதிராக போராட வேண்டும் என்ற உந்துதால் அவர்களின் ஆங்கிலம் கற்பதை ஹராம் (தடுக்கப்பட்டது) என்ற பத்வா வழங்கி இன்றும் ஒரு சில இடஒதுக்கீடுகளுக்காக வீதியில் போராடிக் கொண்டிருக்கும் இந்திய முஸ்லிம்களையும், இனிமேல் சுதந்திரப்போராட்டங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று அடிமை சாசணம் எழுதிக் கொடுத்ததோடு, சுதந்திரப் போராளிகளைக் காட்டிக் கொடுக்கவும் துணிந்த சாவர்க்கர், வாஜ்பாய் வகையறாவைச் சார்ந்த திரு.மலர் மன்னனுக்கு இந்திய முஸ்லிம்களையோ அல்லது கேரள மாப்பிள்ளைமார் சமூகத்தையோ விமர்சிக்க அருகதை இல்லை.//

    அடேங்கப்பா!!! சரியான சூடு!!

  6. நல்லடியார்

    //டோண்டு போன்ற பார்ப்பன மிருகங்களுக்கு பதில் சொல்வதை விட இன்னும் வேறு ஏதாவது உருப்படியான விஷயங்களை நீங்கள் எழுதலாமே?!//

    டோண்டு ராகவன் எங்கள் புதுக்கல்லூரியில் படித்தவர் என்றும் சில சர்ச்சைக்குறிய விவாதங்கள் தவிர்த்து வெகுளியாக எழுதி வருபவர் என்பதும் நான் அறிவேன். அந்தவகையில் திரு.டோண்டு அவர்கள் மீது எனக்கு கொஞ்சம் மதிப்புண்டு.

  7. இறை நேசன்

    //இந்த ஆரியர் வருகை கதையையும் மாற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இதற்காக மேலை நாட்டைச் சார்ந்த சிலரையும் தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டுவிட்டனர்//

    டோண்டு அவர்களின் பதிவில் அவருடைய ஒரு பின்னூட்டம்.

    “மத்திய ஆசியாவிலிருந்து கால்நடைகளை மேய்த்தவாறு இந்தியாவை ஆக்கிரமித்த பார்ப்பனர்களுக்கும் நம் இந்தியா அடைக்கல பூமியாகவே இருந்திருக்கிறது என்பதை கட்டுரையாளர் வெகு சாமர்த்தியமாக மறைத்திருக்கிறார்.”
    இது உண்மை, உண்மையில்லை என்றெல்லாம் இப்போது சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. வெள்ளையர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி இது. அதற்குள் நான் இங்கு போக விரும்பவில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ஆக அது உண்மையில்லை என்று சிறிய அளவில் முனங்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு 50 வருடத்திற்குப் பிறகு நிலைமை எப்படி இருக்கும்? ம்… வந்தேறி ஆரியர்களின் இப்பணி தொடர்ந்தால் 50 வருடத்திற்கு பிறகு இந்திய வரலாற்று புத்தகங்களில் அடங்கியிருக்கும் விஷயங்களை நினைத்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது.

    ஆமாம், இந்தியாவில் வந்தேறிகளாக வந்த அனைவரும் (பரங்கியர், முகலாயர்..) வந்த வழியே திரும்ப போய் விட்டனர். அதில் முதன் முதலாக வந்த இந்த ஆரியர்கள் மட்டும் போகாமல் இருப்பதேன். மற்றுமொரு வழியனுப்பு விழா(!) நடத்தினால் தான் போவார்களோ?,

  8. இறை நேசன்

    சில சர்ச்சைக்குறிய விவாதங்கள் தவிர்த்து வெகுளியாக எழுதி வருபவர் என்பதும் நான் அறிவேன். அந்தவகையில் திரு.டோண்டு அவர்கள் மீது எனக்கு கொஞ்சம் மதிப்புண்டு.

    பெண்கள் கற்பு நிலை குறித்து எழுதியதையா குறிப்பிடுகிறீர்கள்.

    நல்லடியார் கண்ணோட்டபடி நோண்டு அவர்களின் சில வெகுளித்தனங்கள்:

    * தற்சமயம் பெண்கள் தங்கள் இச்சைகளை வெளிப்படுத்துவதில் அதிகம் தயங்குவதில்லை.

    * உடல் இச்சையை அபாயமின்றி எவ்வாறு பெண்கள் பூர்த்தி செய்து கொள்வது?அடுத்த பதிவில் பார்ப்போம்.

    * இப்படி அப்படி என்று இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியாமல் எச்சரிக்கையுடன் நட்ந்து கொண்டால் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம்.

    * குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.

    * ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.

    * ஆனால் ஒன்று. எந்த செயலுக்கும் எதிர்வினை வரும். ஆகவே அதற்கெல்லாம் துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fire-தான்.

    கூறினால் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். நல்லாடியார் அவர்களே! இவைகளா உங்களுக்கு வெகுளித்தனமாகத் தெரிகிறது. உங்களின் நண்பர் என்பதற்காக பிடிக்கும் என்று வேண்டுமானால் சொல்லி விட்டு போங்கள். அவருடைய எழுத்துக்களை -வெகுளித்தனமானவை என்று கூறி சப்பைகட்டு கட்டும் வேலையெல்லாம் இங்கு வேண்டாம்.

    அன்புடன்

    இறைநேசன்.

  9. sivagnanamji(#16342789)

    hats off mr irainesan

  10. //ஆக அது உண்மையில்லை என்று சிறிய அளவில் முனங்க ஆரம்பித்து விட்டார்கள்//

    ஹா!

    சரி, இப்படி அங்கு இருந்து வந்தனர், இங்கு இருந்து வந்தனர் என்று கூறுவது எல்லாம் எதை அதாரமாக கொண்டு?

    அட, உங்களுக்கு இதையெல்லாம் சொல்லி கொடுத்த பி.பி.சி கூட மாறிவிட்டது.

  11. “டோண்டு ராகவன் எங்கள் புதுக்கல்லூரியில் படித்தவர் என்றும் சில சர்ச்சைக்குறிய விவாதங்கள் தவிர்த்து வெகுளியாக எழுதி வருபவர் என்பதும் நான் அறிவேன். அந்தவகையில் திரு.டோண்டு அவர்கள் மீது எனக்கு கொஞ்சம் மதிப்புண்டு.”
    அதே கன்ஸிடெரேஷன் எனக்கும் உண்டு. அதுதான் புதுக்கல்லூரியின் மகிமை. உங்களிடமோ சலாஹுத்தீனுடனோ என்னாலும் கட் அண்ட் ரைட்டாகப் பேசமுடியதுதான். அதே போல முகம்மது நபி அவர்களை நான் எங்கும் தவறாகப் பேசவில்லை என்பதையும் பார்த்திருப்பீர்கள். சீறாப்புராணம் படித்ததன் பலன்.

    உங்கள் அன்புக்கு நன்றி. சென்னைக்கு நீங்கள் வந்தால் சந்திப்போம். புதுக்கல்லூரி பற்றிப் பேசலாம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  12. கூற மறந்து விட்டேன். நான் மேலே இட்டப் பின்னூட்டம் என்னுடைய இந்தத் தனிப்பதிவிலும் நகலிடப்பட்டுள்ளது. பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html#comments

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  13. அழகப்பன்

    நல்லடியாருக்கும் தமக்கும் உள்ள ஒற்றுமையைப் பற்றி இந்த பதிவு போடப்படவில்லை என்று டோண்டு ஐயாவுக்கு தெரியாது போலும். பதிவைப் பற்றி ஒன்றும் கூறாமல்… ஹி… ஹிஹி…

  14. அப்பாவி

    //அழகப்பன் said…
    நல்லடியாருக்கும் தமக்கும் உள்ள ஒற்றுமையைப் பற்றி இந்த பதிவு போடப்படவில்லை என்று டோண்டு ஐயாவுக்கு தெரியாது போலும். பதிவைப் பற்றி ஒன்றும் கூறாமல்… ஹி… ஹிஹி… //

    ஆனாலும் இந்த அழகப்பனுக்கு குசும்பு கொஞ்சம் ஓவர்தான்..

  15. ஜும்பலக்கா

    //சரி, இப்படி அங்கு இருந்து வந்தனர், இங்கு இருந்து வந்தனர் என்று கூறுவது எல்லாம் எதை அதாரமாக கொண்டு?//

    Mr.Samudhra,

    Have you ever asked such question to those who declaring themselves as born from head of Brahmma etc…

  16. //Mr.Samudhra,

    Have you ever asked such question to those who declaring themselves as born from head of Brahmma etc… //

    Ofcourse I have.
    BTW Be courageous and write in your own name.

  17. நண்பன்

    முகலாயப் படையெடுப்பும், ஆர்யர்களின் வருகையும் – ரொம்ப அழகான தலைப்பு!

    உண்மையில், மொகலாயர்களை டெல்லியில் இருந்து போய் வாருங்கள் என கூறி அழைப்பு வைத்து வரவழைத்தனர். தங்களுக்கிடையே இருக்கும் உட்பூசல்களைத் தீர்த்துக் கொள்ள உதவி கேட்டு அழைப்பு வைத்து வருவித்தார்கள். பின்னர் வந்தவர்கள் போகவில்லை என்பது உண்மை தான்.

    ஆனால், ஆர்யர்கள் – அவர்களை யாரும் அழைப்பு வைத்து வருவிக்கவில்லை. தானாக மேய்ச்சல் நிலங்களைத் தேடி வந்தார்கள். இதற்கான ஆதாரங்களைக் கூறி பல கட்டுரைகள் வந்து விட்டன. பாக்கிஸ்தானுக்குப் போவோம் சமுத்ராக்களுடன் என்று எழுதிய கட்டுரையில் கூட இதைப் பற்றி எழுதியிருந்தேன். மனுவையும் நோவாவையும் சம்பந்தப்படுத்தி எழுதிய சமுத்ரா பின்னர் ஒரு trivia போல எழுதினேன் என்று மழுப்பிக் கொண்டு போனார். அதிலே ஆர்யர்கள் வந்து குடியேறியவர்கள் என்று தெளிவாக எடுத்துச் சொல்லியாகி விட்டது. அ.மார்க்ஸ் எழுதிய வரலாற்றுக் கட்டுரை கூட முத்துகுமரன் எடுத்து வைத்து விட்டார். எத்தனை தான் சொன்னாலும் மீண்டும் மீண்டும் பொய் சொல்லத் துணியும் இவர்களை ஒதுக்கி வைப்பது தான் உத்தமம். ஏனென்றால், இவர்கள் இயங்குவதே பொய்ப்பிரச்சாரத்தை செய்யத் தானே!!!

  18. வெங்காயம்

    திரு டோண்டுவின் பதிவைப் பார்த்தேன். அவரின் பதிவில் பின்னூட்ட மனமின்றி இப்பதிவில் எமது பின்னூட்டம்..

    //போர்க்களத்தில் எதிரெதிர் தரப்பு சிப்பாய்கள் ஒருவரையொருவர் எதிர்கொள்கையில், ஒருவரை இன்னொருவர் கொன்றும் போடுகிறபோது, அதில் ஒருவர் நிராயுதபாணியாகவே இருந்தாலும் கூட அது ஒரு கொலைக் குற்றமாகக் கருதப்படுவதில்லையே, ஏன்?//

    கொலை நடந்தபோது காந்தி போர்க்களத்தில் ஒன்றும் இல்லை. வழிபாட்டு தலத்தில்தான் இருந்தார். இரு தரப்பினருமே நாங்கள் போர் தொடுக்கப் போகிறோம் என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை. வெளிப்படையாக அறிவித்துவிட்டு போர் நடத்தினால்தான் அங்கு போர் குறித்த நடைமுறைகள் பற்றிய பேச்சு எழவேண்டும். வெளிப்படையாக அறிவிக்க மாட்டார்களாம். சுட்டுக் கொள்வார்களாம். ஆனால் பின்பு இது போர் நடைமுறை என்று கூறுவார்களாம்.

    போர் அறிவிப்பை – காந்தியைக் கொல்லப்போகிறோம் என்ற அறிவிப்பைச் செய்திருந்தாலும், குறைந்த பட்சம் எதிரியான காந்தியாரிடம் மட்டுமாவது தெரிவித்திருந்தார்கள் என்று நாம் அனுமானித்தால் கூட சங்பரிவாரின் ஆணைப்படியே கோட்சே செயல்பட்டார் என்ற உண்மையை ஒத்துக்கொண்டுவிட்டார். சங்பரிபாரத்துக்கும் நாட்டு நலனில் அக்கறையுடையோருக்கும் இடையே நடைபெற்ற போரில் சங் பரிவாரத்தின் சிப்பாயான கோட்சே, எதிர்தரப்பு சிப்பாயான காந்தியாரைக் கொன்றார். இது தவறு இல்லை என்று கூறுகிறார்.

    //ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த பாரிஸ்டர் ஆங்கிலேய தர்பாரின் சூழ்ச்சிக்குப் பலியாகி, முகமதியரின் ஆதரவையும் தமக்குத் தேடிக்கொள்ளும் முயற்சியில் இறங்கிவிட்டார். //

    காந்தியாரை தேசத்துரோகியாக்க முயலும் இவர்கள் காந்தியாரை முட்டாளாக ஆக்கிவிட்டார்கள். காந்தியாருக்கு அவரின் தனிப்பட்ட செல்வாக்கு கூட தெரியாது. ஆங்கிலேயர்களின் புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே செயல்பட்டார். அதனாலேயே தம்மை முஸ்லிம்களின் ஆதரவாளர்களாகவும் அவர் காட்டத்தொடங்கினார் என்று கதை அளக்கிறார்கள்.

    //இதற்கெல்லாம் மூல காரணம் காந்தியே என ஆத்திரமுற்றுத் தாமும் காந்திஜியைக் கொலை செய்ய முடிவு செய்து எறிகுண்டு சகிதம் அலைந்து பின்னர் கோட்ஸேயுடன் சேர்ந்து கொண்டவர். எனவே இது கூட்டுச் சதியல்ல; ஒத்த சிந்தனையுள்ளவர்களின் ஒருங்கிணைப்பேயாகும். //

    ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்து செய்யும் திட்டத்தை கூட்டு திட்டம் என்று கூறுவோம். அதுவே சதியாக இருந்தால் கூட்டு சதி என்று கூறுவோம். கோட்சே காந்தியாரைக் கொல்ல தனியாக அலைந்தார். பின்னர் பருவாவும் இணைந்தனர். இருவரும் சேர்ந்து திட்டமிட்டு காரியத்தைச் செய்து முடிக்கின்றனர். இதன் பெயர் கூட்டு சதி இல்லையாம். இதுதான் ம.ம. (மர மண்டை என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல)வின் ஆராய்ச்சி.

  19. புலிப்பாண்டி

    /இப்போது உள்ளது போல (சக்திவாய்ந்த வெடிகுண்டுகள்) வசதிகள் இருந்திருந்தால் கோட்சேயும் இப்பொழுது தீவிரவாதிகள்
    செய்வது போலவே செய்து பலரை கொன்றிருப்பார்..
    # posted by Ravi : January 20, 2006 10:28 AM
    “இப்போது உள்ளது போல (சக்திவாய்ந்த வெடிகுண்டுகள்) வசதிகள் இருந்திருந்தால் கோட்சேயும் இப்பொழுது தீவிரவாதிகள்
    செய்வது போலவே செய்து பலரை கொன்றிருப்பார்..”
    மிகவும் நாசம் விளைவிக்கும் கையெறி குண்டுகள் அக்காலத்திலும் உண்டு ஸ்வாமி. எதையோ கூற வேண்டுமென்பதற்காக சொல்லாதீர்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்
    # posted by dondu(#4800161) : January 20, 2006 11:25 AM //

    அடப்பாவிகளா!!!!!

    வரலாற்றை மாற்றும் வாய்ப்பு கிடைத்தால் இந்த வந்தேரி ஆரியர்கள் எதுவும் செய்வார்கள். நாட்டுத் துப்பாக்கியை வைத்துக் கொண்டு தனக்கு பிடிக்காத ஒருவரை குறிவைத்து சுட்டதால் கோட்சே நியாயமானவனாம். நாட்டுத் துப்பாக்கியை வைத்துக் கொண்டு யானையை மட்டும் சுட்ட வீரப்பன் கோட்சேயை விட நேர்மையானவன் என்று டோண்டு சொல்வாரா?

  20. //காந்தி ஒரு பார்ப்பனர். அவரை சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு பார்ப்பனர். அதுவும் பார்ப்பன சார்பாக இயங்கி வந்த கட்சியின் உறுப்பினர்.//

    காந்தி பார்ப்பனர் அல்ல. சுட்டு கொன்றவன் பார்ப்பனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *