Featured Posts

வாழும் கோட்சேக்கள்

//மலையாளம் தவிர வேறு மொழியெதுவும் தெரியாத முகமதியரான மாப்பிள்ளமார்கள்// – மலர் மன்னன்

மாப்பிள்ளமார் என்று அறியப்படும் கேரள மலபாரி முஸ்லிம்கள் எகிப்துடனும், ரஷ்யாவுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள். தொலை தூரதேசங்களுடன் வணிக உறவு கொண்டிருந்த மாப்பிள்ளமார்கள், மலையாளம் மட்டுமே அறிந்திருந்தார்கள் என்பது மலர் மன்னனின் அறியாமையா? அல்லது வரலாற்றைத் திரிக்கும் அவசரத்தில் தன்னையும் அறியாமல் அவ்வாறு குறிப்பிட்டாரா? என்று தெரியவில்லை.

அரேபியர்களுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பால் இஸ்லாத்தில் இணைந்த மலபாரிகளுடானான அரேபியர் உறவு ரோம சாம்ராஜியத்தின் எழுச்சிக்கும் முன்பிருந்தே உள்ள உறவாகும். ஆகையால் மாப்பிள்ளமார்களின் வரலாறு அரேபியர்களின் இந்திய வருகைக்கு முந்தையது.

இதை கேரள கடற்கரை வழியாக சீனாவுக்குச் சென்ற அரபிய வணிகர்களுக்கும் சாவுல், கல்யான் சுபரா ஆகியோருக்கான செட்டில்மெண்ட் பத்திரங்கள் பம்பாய் மாகாண பூகோல ஆவணங்களின் மூலம் தெளிவாகிறது. (Sayed Mohideen Shah, Islam in Kerala. The Muslim Educational Association, Trichur, 1975.p.2)

மேலும் கி.மு. 378 இல் பரயில் பெட்ட பன்னிறு குலத்தில் வாழ்ந்த உப்புக் குட்டன் மாப்பிள்ளயின் வரலாற்றிலும், (Ulloor S. Parameswara Ayyer, Kerala Sahitya Charitram, Trivandrum 1957. Vol. 1. Pp 80-81) மற்றொரு சரித்திரமான ஊவாயி கதையில் கோழிக்கோட்டின் பெண் தெய்வம், ஜனக மாப்பிள்ளயின் பக்தியை மெச்சி தரிசனம் தந்ததாகவும் சொல்லப்படுகிறது. (P.K. Mohammad Kunhi, Muslimingalum Kerala Samskaravum Kerala Sahitya Academy, Trichur, 1982.p.22.)

வரலாற்றாசிரியர் ஃபிரான்சிஸ் டே (5. Francis Day, The Land of the Perumals, Gantz Bros., Madras, 1863,p. 365) மேற்குக் கடற்கரைக்கு வந்த முஸ்லிம்களுக்கும் அரபிய வர்த்தகர்களுக்கும் இடையிலான உறவு கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வலுவாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

//இப்படி வந்த அராபிய வியாபாரிகள், அதிக காலம் பெண் வாசனை இல்லாமல் இருக்க மாட்டாமல் உள்ளூர் ஹிந்து மலையாளப் பெண்களுடன் சம்பந்தம் வைத்துக் கொண்டார்கள். //

இந்தியாவில் சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் இருந்த இந்துக்கள் தங்களுக்கு சமூக அந்தஸ்தைக் கொடுக்கும் அந்நியக் கொள்கையை ஆரத்தழுவிக் கொண்டதை எந்த ஆரியரால்தான் சகிக்க முடியும்?
மலபார் பிரதேசங்களில் கடந்த 19 ஆம் நூற்றாண்டுவரை ஜாதிய ஆதிக்கம் கொழுந்துவிட்டு எரிந்ததால்தானே “மடையர்களின் வீடு” என்று சுவாமி விவேகானந்தர் விளித்தார்.

“Is there anywhere in the world a folly which I have witnessed in Malabar? A poor Paraya cannot walk through the streets where the caste Hindus walk…. The people of Malabar are mad and their houses are mad houses. What judgement will you reach, other than that the different races of India will treat them with abhorrence and aversion until they reformed themselves and enriched their knowledge. Those people who observe such satanic and obnoxious customs are shameless” (Sahitya Sarvaswam, Vol, III, pp. 186-187; Bhaskaranunni, Pathompatham Nuttandile Keralam, Kerala Sahitya Academy, Trichur, 1988.p. 159)

உயர் ஜாதி நம்பூதிரியின் அருகில் நாயர் ஆறு காலடி தூரமும், அம்பட்டன் பதினாறு காலடித் தூரமும், திய்யன் முப்பதாறு காலடிதூரமும், புலையன் தொன்னூற்றாறு காலடிதூரமும் விலகி இருக்க வேண்டும் என்ற வேத கோட்பாடுகளிலிருந்து விலகித்தானே ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த அரேபியர் மதம் ஏற்றனர்.

இந்த அவலநிலையை மதத்தின் பெயரால் ஆண்டாண்டுகாலமாக அரங்கேற்றி வருபவர்கள் எந்தக் கரையில் ஒதுங்கிய அந்நியர்கள் என்று விளக்குவாரா மலர் மன்னன்?

//இப்படியாகக் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான முகமதியரின் கலவரத்தைத் தொடங்கிவைத்த புண்ணியம் காந்தியையே சாரும். //

சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம்களுக்கு எதிரான சமீப குஜராத் இனச் சுத்திகரிப்புவரை செய்து கொண்டிருக்கும் வாழ்க்கை நெறியான இந்துத்துவாவை பேணும் புன்னியத்தை தொடங்கிவைத்தவர்கள் கோல்வார்க்கரும், சாவர்க்கரும் அல்லவா?

//நேருவிலிருந்து காங்கிரஸ் தல
ைவர்கள் அனைவரும் இனி ஆள்வதற்கு வழி பார்ப்போம் என்று பிரிவினைக்கு ஒப்புதல் தந்துவிட்டார்கள்//

எனில் கோட்சேயின் குறியிலிருந்து இவர்களை தடுத்தது எது?

//இந்நிலையில் ஹிந்துக்களுக்கு நிச்சயமாக நேரவிருந்த அசம்பாவிததைத் தவிர்க்க நாதுராம் வினாயக கோட்ஸேவுக்கு ஒரு வழிதான் தெரிந்தது. அந்த வழியை அவர் மேற்கொண்டார்….இது கூட்டுச் சதியல்ல; ஒத்த சிந்தனையுள்ளவர்களின் ஒருங்கிணைப்பேயாகும்//

பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸை எரித்துக் கொன்ற சங்பரிவார குண்டர்களையும், கன்னியாஸ்திரிகளைக் கற்பழித்த பரிவாரங்களையும் “உணர்ச்சி வசப்பட்ட தேசபக்தர்கள்” என்றதற்கும் இதற்கும் அதிகம் வித்தியாசமில்லை. என்பதை தவிர சொல்வதற்கு வேறொன்றுமில்லை.

கட்டுரையாளர் மலர் மன்னன் காந்தியை இந்துக்களின் விரோதியாகவும், அவரைக் கொன்ற பாதகனின் நியாயங்களின் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, காந்தியைச் சுட்டுக் கொன்றதை நியாயப் படுத்தவில்லை என்று சொல்வதும், கோட்சேக்கு இந்துத்துவ அமைப்புகளுடன் தொடர்பு இருக்கவில்லை. இது தனி நபர் சதிதான் என்பதும் யாரை ஏமாற்ற?

(அருகில்லுள்ள புகைப்படத்தில் சாவர்க்கருடன் இருக்கும் கோட்சே)

காந்தியாரை பாதகர்கள் சுமார் ஐந்து முறை கொல்ல முயன்றனர். அதில் சில முறை விடிகுண்டு வீசியும் கொல்ல முயன்ற நாம் வாழும் நூற்றாண்டுகளில் நடந்த வரலாற்று உண்மையை மறைத்து சாதாரண துப்பாக்கியால், காந்தி என்ற தனிநபரை மட்டுமே குறிவைத்து சுட்டான் என்று சொல்லி, கோட்சேயின் மனிதாபிமானத்தை மெச்சிக் கொள்ளும் இவர்கள் வாழும் கோட்சே என்றால் மிகையில்லை.

5 comments

  1. சமீபத்தில் ம.ம திண்ணையில் ‘ஞானஸ்நானம்’ செய்துவைத்துள்ளவற்றுள் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ் கொலையும் நரேந்திர மோடியின் வெறியாட்டங்களும் பாபர் மசூதி விவகாரமும் அடங்கும்.
    தமது குற்றங்களை நியாயப்படுத்த ‘சங்கத்தினர்’ எந்த எல்லைக்கும் செல்லத்தயங்க மாட்டார்கள் என்பதையே மீண்டுமொருமுறை ‘அபாண்டமான’ தனது கட்டுரையில் நிரூபித்துள்ளார்.

    அவர்களுடைய நியாயமெல்லாம் செயலை ப் பொறுத்து அல்ல. செய்தவர்களைப் பொறுத்தது.

  2. அழகப்பன்

    அருமையான வரலாற்று ஆதாரங்களைக் கொடுத்திருக்கிறீர்கள். என்ன செய்ய இவை எல்லாமே பொய்யானவை. மலர்மன்னனும் சங்பரிவாரமும் சொல்வதுதான் வரலாறு என்றல்லவா டோண்டு ஐயா கூறுகிறார். எனினும் இத்தகைய வரலாற்றுத் திரிபுகளை இப்படி உடனுக்குடன் சுட்டிக்காட்டுவது பின்வரும் சமுதாயத்திற்கு அவசியம்.

  3. இந்த “வாழும் கோட்சேக்களின்” வரலாற்று திரிபுகளை உடனுக்குடனான பதில் மூலம் அவர்களின் முகத்திரையை கிழிக்கும் உங்களைப் போன்றவர்கள் தமிழ் வலைதளம் தந்த அருட்கொடை!

    //பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸை எரித்துக் கொன்ற சங்பரிவார குண்டர்களையும், கன்னியாஸ்திரிகளைக் கற்பழித்த பரிவாரங்களையும் “உணர்ச்சி வசப்பட்ட தேசபக்தர்கள்” என்றதற்கும் இதற்கும் அதிகம் வித்தியாசமில்லை. என்பதை தவிர சொல்வதற்கு வேறொன்றுமில்லை.//

    இதைவிட சரியான சாட்டையடி உண்டா?

  4. இறை நேசன்

    (அருகில்லுள்ள புகைப்படத்தில் சாவர்க்கருடன் இருக்கும் கோட்சே)

    “அட அந்த படத்தில் இருப்பது சாவர்க்கர் என்று உங்களுக்கு யார் சொன்னது. ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி இது. அன்னியர்கள் எடுத்த போட்டோவை எப்படி நமது வரலாற்று ஆதாரமாக எடுக்க முடியும். எனவே அதில் இருப்பது சாவர்க்கர் அல்ல” என்று கூறினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

    அன்புடன் இறைநேசன்.

  5. நண்பன்

    பாராட்டுகள் நல்லடியார்.

    சரியான தகவல்களுடன் – ஆதாரங்களுடன் நீங்கள் கொடுத்த விளக்கத்திற்கு பாராட்டுகள்.

    பல சரித்திர உண்மைகளை உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்டாலும், நமது தேசத்தின் தலைமையைத் தாங்க துடிக்கும் சிலர் மட்டும் இன்னமும் அவற்றை மறுத்தேத் தான் வருகின்றனர். இதில் காங்கிரஸ் மற்றும் பல கட்சிகளும் அடங்குவர். உதாரணம் சமீபத்தில் அத்வானி சில உண்மைகளை வெளிப்படையாக ஒப்புக் கொண்ட பொழுது ஏற்பட்ட கூக்குரலும் – அத்வானியை தலைமையிலிருந்து இறங்கச் சொல்லி படுத்திய நிர்ப்பந்த்தங்களும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *