Featured Posts

காந்திஜியின் கடைசி வார்த்தைகள்

காந்தியின் காரியதரிசியாக பணியாற்றி பிறகு இலண்டனில் தொழில் செய்த திரு.வெங்கட் ராமன் கல்யாணம் அவர்கள் சுமார் நாண்கு ஆண்டுகள் காந்தியுடன் பணியாற்றியுள்ளார். காந்தி சுடப்பட்ட கடைசி நிமிடம் வரை அருகில் இருந்தவர், “காந்தி, கடைசியாக ஹே ராம்!” என்று சொல்லவில்லை என்றதாக மலர் மன்னன் தனது கட்டுரையில் சொல்லியுள்ளார்.

“காந்திஜி சுடப்பட்ட போது அவரது அருகில் இருந்தவர்களில் கல்யாணமும் ஒருவர். குண்டு பட்டதும் முதியவரான காந்தி சிறு முனகலுடன் கீழே சாய்ந்தார். அந்த முனகலைத்தான் பிற்பாடு “ஹே ராம்’ என்ற அழைப்பாகப் பதிவு செய்துவிட்டார்கள்! காந்திஜி “ஹே ராம்’ என்றெல்லாம் சொல்லவில்லை என்பதற்கு கல்யாணம் சாட்சி!”

உண்மையில் திரு.வெங்கட் ராமன் கல்யாணம் காந்தியுடனிருந்த கடைசி நிமிடம் நடந்த நிகழ்வைப் பற்றி ரீடிப்.காம் தளத்தின் நேர்முகத்தில்

“காந்தியின் படுகொலையின் போது அருகிலிருந்த சாட்சியங்களில் உயிருடன் இருக்கும் ஒரே சாட்சி நான் மட்டுமே. காந்தியார் சுடப்பட்டபோது நான் அவரின் பின்புறம் இருந்தேன். ஆறு அங்குல இடைவெளியில் கோட்சேயின் தோட்டாவிலிருந்து தப்பினேன். காந்தியாரின் படுகொலை கனநேரத்தில் நடந்து முடிந்தது.மக்கள் சொல்கிறார்கள், காந்தியின் கடைசி வார்த்தைகள் “ஹே ராம்! என்பதாக இருந்தது என்று; எனக்கு இது பற்றி தெரியவில்லை. மேலும் நான் எதையும் கேட்டதாகவும் நினைவில் இல்லை. நாங்கள் அதிர்ச்சியிலிருந்ததால் இருக்கலாம். எப்படித்தான் இப்படிப்பட்ட அற்புத மனிதரைக் கொல்ல ஒருவனுக்கு மனம் வந்ததோ? என்று தெரியவில்லை”

I am the only living witness to the incident today. I was just a few inches behind him when he was shot at. The bullet missed me by six inches. His death was instantaneous. People say, he said ‘Hey Ram’. I don’t know. I don’t remember having heard anything. Maybe all of us were shocked. I do not know how somebody could think of shooting a good man like him (http://in.rediff.com/news/2002/aug/15spec.htm)

மேலும் காந்தியை பிடிவாதக்காரராகவும், முஸ்லிம்களுடன் சமரசமாக இருந்தன் மூலம் இந்துக்களுக்கு துரோகம் செய்தவராகவும் சித்தரிக்க மலர் மன்னன் முயன்றுள்ளார் என்பது காந்தியை பற்றி, திரு. வெங்கட்ராமன் கல்யாணம் சொல்லாததையும் தன் இஷ்டப்படி சேர்த்து தன் காவிக்கட்டுரையை வடித்துள்ளார் என்பதற்கு அவரின் கட்டுரையின் சிலவரிகளே சாட்சி:

“முகமதியர் மனம் கவர்வதற்காக காந்தி வரம்பு மீறியே நடந்து கொண்டிருக்கிறார், பல சந்தர்ப்பங்களில்….காந்தியோ பிடிவாதக்கார மனிதர். தம் பேச்சைத் தான் மற்றவர்கள் கேட்கவேண்டுமேயன்றிப் பிறர் சொல்லைத் தாம் கேட்கத் தேவையில்லை என்று இருந்தே பழகிப் போனவர்.” – மலர் மன்னன்

ஆனால் திரு.கல்யாணம் அவர்களின் காந்தியைப் பற்றிய மதிப்பீடு, மலர் மன்னனின் கூற்றிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது.

“மற்றவர்கள் மிகப்பெரிய தவறே இழைத்திருந்தாலும், காந்தி தன் இயல்பு நிலை தவறியதில்லை” – கல்யாணம்

//தமது வாக்குமூலத்தில் கோட்ஸே விடுதலைப் போரில் காந்தியின் பங்களிப்பைப் பெரிதும் போற்றிப் பேசத் தவறவில்லை. அதற்காக காந்திக்கு அஞ்சலி செலுத்தவும் தயங்கவில்லை. //

காந்தியை சுட்டுக் கொன்றது பற்றி கோட்சேயிடம் கேட்கப்பட்டதற்கு “இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிவதென்பது என் பிணத்தின் மீதுதான் சாத்தியம் என்ற காந்தி, பாகிஸ்தான் பிரிந்த பிறகும் உயிருடன் இருந்தார். அதனால்தான் அவர் ஆசைப்பட்டபடி பிணமாக்கினேன்” என்று திமிராகக் சொன்னதும் பதிவாகியுள்ளது.

“இனியாகிலும் இவ்வாறான மேம்புல் மேய்தல் குறைந்த பட்சம் விவரம் மிக்க வாசகர்கள், வரலாற்றுப் பார்வை உள்ள பதிவாளர்களுக்கேனும் இருக்கலாகாது என்பதாலேயே மிக விரிவாக இது

4 comments

  1. காந்தியை சங் பரிவார் பின்னணியுடன் கோட்சே தீர்த்துக்கட்டியதற்கு காரணமாக ஆயிரம் பேர் ஆயிரம் ஆராய்ச்சி செய்தாலும்; ஆயிரம் வர்ணம் பூசி நியாயப்படுத்தலை செய்தாலும்; இனிவரும் காலத்தில் கொன்றது ஒன்றும் கோட்சேயில்லை என்றே கூச்சல் போட்டாலும் கூட, காரணம் ஒன்றே ஒன்று தான்.

    அது, காந்திஜி இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்டார். அது ‘அவங்களு’க்கு பிடிக்கவில்லை.

    ஏன் பிடிக்கவில்லை?

    இந்து முஸ்லிம் ஒற்றுமை வளருமானால் அது ‘அவங்க’ளுடைய சமூக மேலாதிக்கத்திற்கு இடைஞ்சல்.

    எப்படி இடைஞ்சல்?

    இந்த முஸ்லிம் வந்து ‘மனுஷாள் எல்லாம் ஒண்ணு தான்’ ங்கறான்

    சரி அதனால…?

    அவங்களோட ‘வர்ணாசிரமம்’ல ஒழிஞ்சு போகும்!
    அப்புறம்?
    “நாமெல்லாம் உயர்சாதி”ன்னு சொல்லிக்க அவங்களுக்கு வழியில்லாது போகும். அதான்.

  2. NO THIS IS WRONG ,STATEMENT WHO WRITEN MIGHT HAVE BEEN HATED FELLOW OF BRAHMIN.REALLY KOTSE SHOT GANDHI MIGHT BE HIS PERSONAL VIEW.DONOT MINGLE BRAHMINES IN THIS MATTER.NO BODY STILL HELP BRAHMINES,THEY THEMSELVES LIVING IN INDIA FROM THEIR OWN HARD EFFORTS.NEVER BRAHMINES HATES OTHERS,THEY THEMSELVES DOING SAADHANA TO ATTAIN MOKSHA ACCORDING TO THEIR SASTHRAAS.

  3. who tell the truth ?

  4. வள்ளலார் சொல்லியபடி காந்தி –அனைத்து மக்களும் சாதி,மத பேதம் இல்லாமல் வாழ வேண்டும் என்று ஒற்றுமையை உருவாக்கினார் .அதற்கு மத வெறியர்கள் கொடுத்த தண்டனை கொலை வெறி குண்டு பாய்ந்து உயிர் இழந்தார் .மறைந்தாலும் என்றும் மறவாமல் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் ”மகா ஆத்மா ”காந்தி –அவர் என்றும் மகா ஆத்மாதான் .சத்தியம்,உண்மை,கொல்லாமை ,சமரசம் ஆன்ம நேய ஒருமைப்பாடு என்றும் நிலைத்து நிற்கும் ,வள்ளலார் வழி சமரச சுத்த சன்மார்க்க சத்திய நெறியை யாகும். –அதை காந்தி கடைபிடித்தார் –அனைவரும் கடைபிடித்து உலகை காப்போம்.

    ஆன்மநேயன் ;–கதிர்வேலு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *