Featured Posts

கார்ட்டூன் விவகாரம்: இழிவுபடுத்தும் உரிமை?

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை கேவலமாகச் சித்தரித்து டென்மார்க் பத்திரிக்கை (Jyllands-Posten) கார்ட்டூன் வெளியிட்டதையும் அதனை நார்வே கிறிஸ்தவப் பத்திரிக்கை மறுபதிப்புச் செய்து மேலும் அவமதித்ததையும் எதிர்த்து உலக முஸ்லிம்கள் கொதித்தெழுந்துள்ளார்கள். இதன் பிரதிபலிப்பாக பெரும்பாலான முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் டென்மார்க் மற்றும் நார்வேயின் பொருட்களை புறக்கணிப்பு செய்வது என்று முடிவு செய்துள்ளன.

இஸ்லாம் உருவ வழிபாட்டையும் அதற்குக் காரணமாக இருக்கும் அநாவசிய சித்திரங்கள் தீட்டுவதையும் தடுக்கிறது. இறைவனைத்தவிர மற்றவற்றை வணங்குவதையும், மனிதர்களை கடவுளாக்குவதையும் இஸ்லாம் தடுக்கிறது. ஆகவே வழிபாட்டிற்கோ அல்லது தூதர்கள் மற்றும் அன்னாரின் நேசர்களுக்கோ உருவம் கொடுப்பதையும், அது மரியாதை நிமிர்த்தமாகவே இருந்தாலும், பிற்காலத்தில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான கடவுளுக்கு உருவம் இல்லை என்ற நம்பிக்கையை சிதைத்துவிடும் என்பதால் சிலை வடிப்பதையும், சித்திரங்கள் தீட்டுவதையும் இஸ்லாம் ஏற்கவில்லை.

முஹம்மது நபியின் சிறப்பைச் சொல்லும் விதமாக இருபது வருடங்களுக்கு முன் “தி மேசேஜ்” (The Message) என்ற ஆங்கிலப்படமும், சமீபத்தில் “முஹம்மது – இறுதித் தூதர்” (Mohammed: The Last Prophet) என்ற அனிமேசன் படமும் வெளிவந்தன. இவற்றில் முஹம்மது நபியின் உருவம் சித்தரிக்கப்படாது என்ற உறுதி மொழியுடன்தான் வெளியாகின.

டென்மார்க் பத்திரிக்கை முதலில் கார்ட்டூனை வெளியிட்டதை முஸ்லிம்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.இஸ்லாத்தைப் பற்றி அறியாதவர்களின் செயல் என்று கண்டு கொள்ளவில்லை. பிறகு இப்படங்களை நார்வே கிறிஸ்டியன் பத்திரிக்கை மறுபதிப்புச் செய்தும், வாசகர்களிடமிருந்து மேற்கொண்டு வரும் சிறந்த கார்ட்டூனுக்கு பரிசு என்றும் அறிவித்தது தான் முஸ்லிம்களை கொதிந்தெழச் செய்தது.

ஐரோப்பியன் யூனியனிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் நார்வே பிரதமரிடம் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்பியபோது, அவர்களைச் சந்திக்க மறுத்து விட்டதோடு “பேச்சுரிமை எந்த சமரசத்திற்கும் அப்பாற்பட்டது” என்று திமிராகச் சொல்லியுள்ளார்.

1948 இல் வெளியிடப்பட்ட ஐநாவின் மனித உரிமைப் பிரகடனம் பேச்சுரிமை (Freedom of Expression) பற்றி தெளிவாகச் சொல்கிறது.

அடுத்தவரின் உரிமையை பாதிக்காதவரைதான் அது தனிமனித உரிமை. மனித உரிமை என்ற பெயரில் துவேசம் கொல்வதை எந்த சட்டமும் அங்கீகரிக்கவில்லை. பெரும்பாலோர் உயிரைவிட அதிகமாக நேசிக்கும் ஒருவரை மனித உரிமை என்ற பெயரில் அவமதிக்க எவருக்கும் உரிமை இல்லை.

டென்மார்க் மற்றும் நார்வே நாடுகள் ஒன்றும் இஸ்லாமிய எதிர்ப்பில் திளைத்தவையல்ல. அரபு நாடுகளின் பெரும்பாலான உணவுப் பொருட்கள் டென்மார்க்கிலிருந்துதான் இறக்குமதி செய்யப் படுகின்றன. உலக நன்கொடையாளர்கள் பட்டியலில் நார்வே தனது உள்நாட்டு வருமானத்தில் சுமார் 0.94% ஐ நன்கொடையாகக் கொடுக்கின்றது. ஒப்பீட்டளவில் அமெரிக்காவின் 0.14% ஐ விட சுமார் ஐந்துமடங்கு அதிகம். சுமார் 55 மில்லியன் அமெரிக்க டாலர்களை பாலஸ்தீனர்களின் அமைதிக்காக செலவளித்துள்ளது.

டென்மார்க் சமீபத்தில் நடந்த பாலஸ்தீன நாடாளுமன்ற தேர்தலுக்கு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரும், இஸ்ரேலிய இராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களிலிருந்து பாலஸ்தீனர்களைக் காக்க $ 646,000 உதவியுள்ளது. மேலும் $390,000 ஐ ஹ

4 comments

  1. நல்லடியார்

    சகோ.இறைநேசன் பதிவில்,இவ்விகாரம் தொடர்பான என் பின்னூட்டம்:

    //அரசாங்கத்தை இதில் இழுக்க வேண்டியதில்லை என்று தோன்றுகிறது. (இழுப்பதற்கு வேறு காரணங்கள் உண்டா என்று எனக்குத் தெரியாது.) ஏனென்றால் ஏசுவை அவர்கள் இப்படி வரைந்தாலும அரசாங்கம் சும்மா இருக்க வேண்டியதுதான் என கேள்விப்படுகிறேன்//

    வாங்க ராகவன்,

    இக்கார்ட்டூன்கள் சென்றவருடம் செப்டம்பர் மாதம் டென்மார்க் நாளிதழில் பிரசுரமாகியபோது, இத்தகைய எதிர்ப்புகள் கிளம்பவில்லை. காரணம் 1) இஸ்லாத்தின் மீது தொடுக்கப்படும் வழக்கமான ஊடகத் தாக்குதல் 2) இஸ்லாத்தைப் பற்றிய அறியாமை என்ற வகையில் முஸ்லிம்களும் வெகுவாக பெரிது படுத்தவில்லை.

    சமீபத்தில் இதை நார்வே கிறிஸ்டியன் பத்திரிக்கை மறுபதிவு செய்து, வாசகர்களிடமிருந்து மேலும் கார்ட்டூன்கள் கேட்டு ஊக்கப்படுத்தியதால்தான் பிரச்சினையின் தீவிரம் உணர்ந்து, ஐ.ஒ.வில் உள்ள முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட அரசாங்கத்திடம் தங்கள் மனக்குமுறலை தெளிவுபடுத்த விரும்பினர். இவர்களை சந்திக்க மறுத்ததோடு, “கருத்துச் சுதந்திரம் என்பது சமரசத்திற்கு அப்பாற்பட்டது” என்பதே என் புத்தாண்டு செய்தி என்று பொறுப்பின்றி சொல்லி எரியும் நெருப்பில் எண்ணை வார்த்துள்ளார்.

    வளைகுடா போர்களால் அமெரிக்க-பிரிட்டானிய பொருட்கள் புறக்கணிக்கப் பட்டு, ஐரோப்பாவுடன் இணக்கமாக இருக்கும் சூழலில் ஒரு பத்திரிக்கை மதநல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிப்பதை கண்டிக்காமல், சப்பைக் கட்டிய சம்பந்தப்பட்ட நாட்டின் ஆட்சியாளர்கள் கண்டிக்கப் படவேண்டும்.

    சகோதரர் ஜோ,

    //அல்லாவின் இறைதூதர்களில் ஒருவரும் ,அல்லாவினால் விசேஷமாக ஆசீர்வதிக்கப்பட்டு மரியமினால் பெற்றெடுக்கப்பட்ட ஈசா நபியவர்கள் பற்றி எத்தனையோ திரைப்படங்கள் ,புத்தகங்கள் தாறு மாறாக வெளிவந்திருக்கின்றன .அவை பற்றியெல்லாம் முஸ்லீம் உலகம் கொதித்தெழுவதை விடுங்கள் ,குறைந்த படிசம் முணுமுணுப்பாவது வந்திருக்கிறதா ?

    இறுதி நாளில் அல்லாவின் தூதராக மீண்டும் வருவார் என நீங்கள் நம்பும் ஈஸா நபிக்கு இஸ்லாமிய உலகில் இவ்வளவு தான் முக்கியத்துவமா?//

    இயேசு என்கிற ஈஸா நபியை முஸ்லிம்கள் முஹம்மது நபிக்கு முந்தைய மூத்த தூதுவர் என்று மதிப்பதோடு, இறுதி நாளில் முஹம்மது நபியை பின்பற்றுபவராக/அல்லாஹ்வின் கட்டளையை ஏற்பவராக வருவார் என்றும் நம்புகிறோம்.

    இயேசுவையும் சரி இன்னபிற இறைத்தூதுவர்களையும் சரி, அவர்கள் சொல்லாததை சொல்வதும், செய்வதும் அவர்களை இழிவு படுத்துவதாக முஸ்லிம்கள் நம்புகின்றனர்.

    இயேசுவின் உருவத்தைக் கண்டவர் யாருமிலர். பிற்காலத்தில் இயேசுவின் சீடர் புனித பீட்டர் வரைந்த உத்தேசக் கோடுகளைக் கொண்டே இயேசுவின் உருவம் சித்தரிக்கப்படுகிறது.

    இயேசுவைப்பற்றிய ஊடகத் தாக்குதல்களை முஸ்லிம்கள் கண்டித்தால் சம்பந்தப்பட்ட கிறிஸ்தவர்களே சகித்துக் கொண்டிருக்கும்போது, முஸ்லிம்களுக்கு என்ன வந்தது? என்று ஊடகங்களால் முஸ்லிம்கள் மென்மேலும் சகிப்புத்தன்மையற்றவர்களாக சித்தரிக்கப் படுவார்கள் என்பதே எதார்த்தம். ஆகவேதான் முஹம்மது நபியை தவறாக சித்தரிப்பதை மட்டும் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள். முஹம்மது நபி மட்டுமல்ல மற்ற எந்த நபியையும் இழிவு படுத்தக் கூடாது என்பதுதான் இஸ்லாத்தின் நிலை.

    நண்பர்.சமுத்திரா,

    //பி.கு: நபிகளை படமாக வரைவது இஸ்லாமில் தடை செய்யபடவில்லை என்று எனது பாகிஸ்தானிய வக்கீல் நன்பர் என்னிடம் அடித்து சொல்கிறார்.உன்மையா?//

    முஹம்மது நபியின் காலத்தில் நேரில் பார்த்தவர்களில் எவரும் முஹம்மது நபியை வரைந்ததாகவோ அல்லது சிற்பமாக வடித்ததாகவோ எந்த ஆதார

  2. முசுலிம்களுக்கு பட்டை நாமம்
    ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தி இது. கேலிச்சித்திரம் வரைவது சரியா, தவறா இருக்கட்டும். பட்டி மன்றம் அப்புறமா போட்டுக்கலாம். ஆனால் கேலிச்சித்திரத்திற்குப்பின்னால் இருக்கும் சதி பற்றிய குறிப்பு இது. அதாவது
    முசுலிம்களுக்கு ஒரு அல் (தலை) கொய்துதா மாதிரி, ஐரோப்பிய நாடுகளிலும் ரைட்விங், லெப்ட்விங் எனப்படும் இனவாதக்குழுக்கள் எப்போதுமே கொஞ்சம் இருக்கும். அப்ப, அப்ப வந்து தலைகாட்டிவிட்டுப்போவார்கள். ஆனால் அவர்கள் இப்போ ஒரு மிகப்பெரிய உள்நோக்கோடு செய்திருக்கும் காரியம் தான் இந்த கேலிச்சித்திரம். அதாவது முசுலிம்கள் ஐரோப்பாவிற்குக் காலடி எடுத்து வைப்பதை நிறுத்துவதே அது. அந்த நோக்கத்தில் அவர்கள் பகுதி வெற்றி பெற்றுவிட்டார்கள் எனலாம். ஏனென்று சொன்னால் கீழ்க்கண்ட இணைப்பைப்பாருங்கள். இது ஏதோ சிறு பிள்ளைத்தனமாகச் செய்த செயல் அல்ல. அவ்வாறு கேலிச்சித்திரம் வெளியிட்டால், இசுலாமிய தேசங்களில் உள்ள நாயும் குரைக்கும், கோழியும் கூவும், புழுவும் பாம்பாகும் என்பது
    ஐரோப்பிய நாடுகளில் உள்ள பாக்டீரியாக்களுக்குக் கூடத் தெரிந்த ஒன்று. அப்படியிருக்க இப்படி ஒரு விசமத்தை எப்படி பத்திரிக்கை தர்மம் என்ற பெயரில் துணிந்து செய்தார்கள்? அது தான் உள்நோக்கம். இணைப்பு இதோ.

    http://www.nowpublic.com/node/29201

  3. நல்லடியார்,

    ஈரானில் இந்த மனிதரின் போராடத்தை பாருங்கள்.

    இந்தியாவில் ஏன் இப்படி போராட்டங்கள் நடைபெறுவதில்லை?

    ஹுசைனை போல போராடினால் யாரும் எதுவும் பேசமாட்டார்கள்.

    இஸ்லாமிய நாடான ஈரானில் ஓவியம் வரைந்து கொண்டு இருக்கிறார்….;)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *