Featured Posts

வல்லரசுகளின் பிடியில் பாலஸ்தீனம்

உலகமெங்கும் அலைக்கழிக்கப்பட்டு சுற்றித் திரிந்த யூதர்கள், சுமார் 2000 ஆண்டுகள் வரை கிறிஸ்தவரின் கொடுமைகளுக்கு ஆளாகி வந்துள்ளனர். ஜெர்மனியில் 1933 – 1945 காலப் பகுதியில் ஹிட்லரின் கொடுமைகளுக்கு ஆளான யூதர்களுள் சுமார் 60 லட்சம் பேர் சித்திரவதை செய்யப்பட்டு இறந்துள்ளனர். இது மட்டுமல்ல, உலகில் சிதறி வாழ்ந்த அவர்களுக்கு எம் நாட்டில் இடமளித்து வாழச் செய்வோம் என எந்த மேற்கத்திய நாடும் முன்வரவில்லை. இதற்கு யூதர்களின் இயற்கையான போக்கும் ஒரு காரணமே.

இவர்களது நிலை இப்படி தொடரும் போது கி.பி.1896 ல் தியோடர் ஹெர்ஸ்ல் (Theodor Herzl 1860-1904) என்றொரு நாடக எழுத்தாளர் யூத மக்களுக்கு ஒரு தாயகம் வேண்டும் என்பதை விவரித்து Der Judenstaat (யூத நாடு) என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதினார். கி.பி.1897 ல் முதலில் 6 யூத தனவந்தர்கள் இவரது நூலின் கருத்துக்களை ஆராய்ந்தனர். பின்னர் சுவிட்சர்லாந்தில் 29-31/8/1897 ல் கூடிய யூத அறிஞர்கள் மற்றும் தனவந்தர்கள் 204 பேர் தங்களுக்கு பலஸ்தீனில் ஒரு தாயகம் அமைய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

உலக யூத காங்கிரஸ் (The World Jewish Congress) என அழைத்துக் கொண்ட அவர்கள் இத்திட்டத்தை ஐந்து வருடத்தில் நிறைவேற்றுதவதாக முடிவெடுத்தனர். எப்படியும் 50 வருடங்களை மீறாத இதன் கால எல்லை என்பது அவர்களது திடமான முடிவு.

இதைத் தொடர்ந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பணம் வேண்டும். அதற்காக யூதர்களின் தேசிய நிதி (Jewish National Fund) என்றொரு நிதியத்தை ஆரம்பித்தனர். வட்டி வழியின் மூலமும் உடனடிக் காசு கொடுப்பதன் மூலமும் நிலம் வாங்கவென நில வங்கி (Land Bank) ஒன்றை ஆரம்பித்தனர். அதோடு தமக்கென ஹீப்று மொழியிலான தேசிய கீதமொன்றையும் உருவாக்கினர். தமிழில் நம்பிக்கை என்ற கருத்தை தரும் அதன் ஹீப்ரு பெயர் Hatikvah என்பதாகும். இவையனைத்தையும் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த தியோடர் ஹர்ஸ்ல் என்பவரே ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடாந்து உலக நாடுகளிலிருந்து பலஸ்தீன் நோக்கி யூதர்கள் வரலாயினர். அதன்படி 1917 ல் பலஸ்தீனின் சனத்தொகை முஸ்லிம்கள் 567,000, யூதர்கள் 70,000 மற்றும் கிறிஸ்தவர்கள் 63,000 என்றாயிற்று. அதே வேளை உலக மகா யுத்தம் முடிவுற்று 1917 ல் பலஸ்தீன் பிரிட்டனின் கீழ் அமைந்த நாடாக மாறியதுடன் அவர்களது படையும் அங்கு வந்து குவிந்தது.

அப்பொழுது பிரிட்டனின் வெளிநாட்டுச் விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலாளராக இருந்த ஆதர் பெல்ஃபர் என்பவர் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். அது 1917 நவம்பர் 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்தப் பிரகடனத்தை வெளியிட பிரிட்டிஷ் அரசுக்குத் தொடர்ந்து தூண்டுதல் வழங்கவியவர் செயிம் வெய்ஸ்மேன் (1874-1952) என்ற ரஷ்ய யூதராவார். இவர் யூத–சியனிஸ அமைப்பின் 1948-1952 காலப் பிரிவின் தலைவராவார். இஸ்ரேல் உருவான பின ஜெரூஸலம் ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் கடமையாற்றினார்.

இந்த பெல்ஃபர் பிரகடனத்தின் முக்கிய பகுதி இவ்வாறு பேசுகிறது :

யூதர்களுக்கு பலஸ்தீனில் ஒரு தேசியத் தாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை இங்கிலாந்து அரசு மிகவும் பரிவுடன் கவனிக்கிறது. இதனை ஏற்படுத்த எல்லா முயற்சிகளையும் இங்கிலாந்து மேற்கொள்ளும். அதேவேளை இப்போது அங்கே குடியிருக்கும் யூதர்களல்லாத மக்களுடைய பொதுவான உரிமைகளுக்கோ, மத உரிமைகளுக்கோ பங்கம் வராது பார்த்துக் கொள்ளும்!.

இந்தப் பிரகடனம் பலஸ்தீனில் பிறந்து வாழ்ந்து வரும் முஸ்லிம்களை இரண்டாம் தர பிரஜை என்ற நிலைமைக்குத் தள்ளுகிறது. அத்துடன் இன்னும் ஆட்சியோ, நாடோ, சமூக அமைப்போ பெறாத யூதர்கள் முதல் நிலைக்குக் கொண்டு வரப்படுவதை அங்கீகரிக

2 comments

  1. அழகப்பன்

    சமீபத்தில் நடந்த பாலஸ்தீன தேர்தலி வெற்றி பெற்ற அஜீஸ் துவைக் அவர்களின் அல்ஜஸீரா பேட்டி….

    Let’s talk about the Israeli-Palestinian conflict. Do you still want to destroy Israel?

    You are asking the victims of Israeli oppression, occupation and racism if they are interested in destroying their oppressors and tormentors? This is a tendentious question that should be asked to Israel, which is occupying our country and oppressing our people and carrying out ethnic cleansing against us.

    In fact, all that we want is to be free. Is freedom for the Palestinian people tantamount to destruction of Israel?

    Are you not are evading the question?

    I am not evading anything; it is you who is evading and ignoring reality here. Just take a look and see for yourself who is destroying whom, who is stealing whose land, who is savaging and persecuting and brutalising whose people, and who is practising ethnic cleansing and slow-motion genocide against the other.

    But the question remains, how can Israel possibly talk with Hamas as long as Hamas refuses to recognise Israel’s right to exist?

    Why on earth should we recognise Israel while Israel refuses to recognise Palestine? Indeed, we can’t understand why the international community, strangely enough including some Arab leaders, is demanding that we recognise Israel but making no similar demands on Israel that it ought to recognise Palestine.

    But Israel is a reality while Palestine is not.

    Palestine is also a reality. There are nearly five million Palestinians living in Palestine and these people have an inherent right to self-determination. Do you think that we are children of a lesser God or something?

    முழுமையாக வாசிக்க : அல்ஜஸீரா

  2. இங்கு விடை காண வேண்டிய வினாக்கள் இரண்டு:
    ஃபலஸ்தீனம் விடுதலை அடைவது எப்போது? எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *