ஓர் இனம் நசுக்கப்படும் போது நசுக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்கிறார்கள். இந்த ஒன்றிணைப்பு ஓர் அமைப்பினையும் ஒரு தலைமைத்துவத்தினையும் ஏற்படுத்தி விடுகின்றது. இப்படித்தான் ஹமாஸ் இயக்கத்தின் தோற்றமுமாகும். எல்லா இயக்கத்திற்கும் அவை உருவாவதற்கான காரணங்களும் சூழலும் உண்டு.
ஹமாஸ், இஸ்ரவேலர் பறித்தெடுத்த தாய்நிலததை மீட்டெடுத்து, பாலஸ்தீனத்தை நிர்மானிக்க ஏற்பட்ட (ஜியோனிஸ) எதிர்ப்பு இஸ்லாமிய இயக்கமாகும். ஹமாஸ் என்ற அரபுச் சொல்லுக்கு “ஹரகதுல் முகாவமதுல் இஸ்லாமிய்யா” (حركة المقاومة الاسلامية) என்பதன் சுருக்கமாகும்.
ஹமாஸ் அமைப்பு சட்டபூர்வமாக இஸ்ரேலில் 1978 ல் ஷேக் அஹ்மத் யாஸீன் அவர்களால் பதிவு செய்யப்பட்டதாகும். அப்போது அல் மஜ்மஃ அல் இஸ்லாமி எனும் பெயரில் இஸ்லாமிய போதனைகள் மற்றும் சமூக சேவைகளுக்கான அமைப்பாகவே இயங்கி வந்தது. இதனால் நிறைய ஆர்வலர்களைப் பெற்றுக் கொள்ள முடிந்தது.
இது இந்திபாழாவுக்கு முந்திய கட்டமாகும். 1988ல் இது ஹமாஸ் என்று அழைக்கப்படலாயிற்று. 1989 ல் ஹமாஸ் இன்திபாழாவை அறிமுகப்படுத்திய சமயம் தனது பயணத்தின் இரண்டாம் கட்டத்திற்கு அது நகர்ந்திருக்கிறது.
இரண்டாம் கட்டத்தில் ஆக்கிரமிப்பாளர்களான இஸ்ரேலை ஆயத ரீதியாக எதிர்த்தது. இதனையே அது இன்திபாழா என அழைக்கிறது. இஸ்லாமிய பலஸ்தீனை உருவாக்குவதில் ஆயதப் போராட்டத்தினை மேற்கொள்ள வேண்டிய தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்திற்கு அது உள்ளாகியது.
ஹமாஸின் ஸ்தாபகர் ஷேக் அஹ்மத் யாஸீன் அவர்களே 1989 வரை தலைமை வகித்து வந்தார்கள். இருந்தும் அவர்களே ஹமாஸ் இயக்கத்தின் ஆத்மீகத் தந்தையாக இருந்து வந்தார்கள். வெளியீடுகள், நிதி, வியாபாரம், வெளிநாட்டு உறவு, அத்துமீறல், பயங்கரவாத நடவடிக்கைகள் என்பவற்றை மேற்பார்வை செய்தல் ஆகியன ஷேக் அஹ்மத் யாஸீன் தலைமையில் நடைபெற்றன.
ஷேக் யாஸின் அவர்கள் 1936 ல் ஜோரா எனும் கிராமத்தில் பிறந்து, 14 வயதில் உதைபந்தாட்டத்தில் ஒரு கால் காயமுற அக்காலினால் எதையும் செய்ய முடியாது போனது. உயர்கல்வி தகைமையோடு ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டவர், எகிப்தில் தலைமையிடமாக் கொண்டு இயங்கி வந்த இஹ்வானுல் முஸ்லிமீனின் அங்கத்துவத்தை 1955 ல் பெற்றுக் கொண்டார். 1966 ல் சிறைவாசம் அனுபவித்தார். ஷேக் அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு 1984 ல் இஸ்ரேலிய அரசாங்கத்தின் கைதிகள் பரிமாறும் திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்டார். (சென்ற வருடம் இஸ்ரேலிய இரானுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்)
முஹம்மத் என்ற இயற்பெயரைக் கொண்ட யாசிர் அரபாத் ஆகஸ்டு 01, 1929 ம் ஆண்டு பிறந்தார். ஜெரூஸலம் நகரில் பிறந்ததாகவும் அவர் குறிப்பிட்டாலும் அவர் பிறப்பால் எகிப்தின் தலைநகர் கெய்ரோவைச் சேர்ந்தவர் என்ற கருத்தும் உண்டு. கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். 1948 ல் பலஸ்தீன் – இஸ்ரேல் பிளவுக்கு முன்னரே பலஸ்தீனுக்குள் ஆயதங்களைக் கடத்திக் கொண்டு வரும் வேலையைச் செய்து வந்தார்.
1956 ல் அல்பதாஹ் இயக்கத்தை ஆரம்பித்தார். இவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்ட புதிதில் எகிப்து, சிரியா, ஜோர்தான் போன்ற நாடுகள் அதற்கு ஆதரவு வழங்கவில்லை. 1968 ல் முஸ்லிம் நாடுகள் பலவற்றின் ஆதரவுடன் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவரானார். சுமார் 20 வருடங்களாக இஸ்ரேல் மீது மிக உக்கிரமமான தாக்குதல்களை அரபாத்தின் நடத்தியது.1988 ல் இஸ்ரேலை இறைமையுள்ள அரசாக ஏற்றுக் கொண்டதாக அறிவித்து முழு முஸ்லிம் உம்மத்தின் மீதும் கரிபூசி, பலஸ்தீனப் போராட்டத்தையே கொச்சைப்படுத்தினார். அதுவரைக்கும் பலஸ்தீனப் பயங்கரவாதத்தியாகத்
//இவர்கள் தான் சமாதானப் பிரியர்களாம்! பாலஸ்தீனர்கள், வன்முறை வழி வந்தவர்களாம். இது எப்படியிருக்கு?//
சரியாக சொன்னிர்கள் நல்லடியார்! இஸ்லாத்தின் மீது மேற்க்கத்திய ஊடகங்களுக்கும், அவற்றின் அடி வருடிகளுக்கும் எதற்கு இத்தனை காழ்ப்புணர்வு.? ஹமாஸ் அதன் நோக்கங்களில் வெற்றி பெறவும், பாலஸ்தீனியர்களுக்கு நியாயம் கிடைக்கவும் என் பிரார்த்தனைகள்…