- ஈரானுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அமெரிக்க/ஐரோப்பிய நாடுகளின் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தன் மூலம் இந்தியா-ஈரான் இடையேயான பாரம்பரிய உறவுக்கும் எதிர்கால பொருளாதார உறவிற்கும் மன்மோஹன் சிங் அரசு விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
- அணுஆயுத பரவலை தடை செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் (இந்தியா-பாகிஸ்தான் உட்பட) தேவையான போது மீறும்போது சொல்லும் வழக்கமான காரணத்தையே ஈரானும் சொல்லியது. ஈரானுக்கு எதிரான இந்தியாவின் ஓட்டைச் செலுத்திய பின், இந்தியாவின் பாதுகாப்பைக் கருதி ஈரானுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்ததாக விநோதக் காரணம் சொல்லியது.
- இந்தியாவின் அண்டை நாட்டில் அணுஆயுதம் இருப்பது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பூகோல ரீதியில் ஈரான், இந்தியாவின் அண்டை நாடல்ல. எனில் இஸ்ரேலும் அண்டை நாடுதான்!
- ஈரானின் அணுசக்தி இந்தியாவிற்கு அச்சுருத்தல் என்றால் ஈரானின் அண்டை நாடான இஸ்ரேலின் அணுக்கிடங்குகளால் இந்தியாவிற்கு ஏதேனும் பயனுண்டா? உண்மையில் இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றின் அணுசக்தி அச்சுருத்தலை விடவா ஈரானின் அணுசக்தி இந்தியாவுக்கு அச்சுருத்தலாக இருக்கும்?
- ஈரானுக்கு எதிராக ஓட்டளித்தன் மூலம் பயனடைந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும்தான். இவர்களின் சூழ்ச்சிக்கும் நெருக்குதலுக்கும் இந்தியா பலியாகிவிட்டதோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
- ஈரானுடன் இயற்கை எரிவாயுவை பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குக் கொண்டுவருவதை அமெரிக்க விரும்பவில்லை. இதன் மூலம் ஈரான் – இந்தியா – பாகிஸ்தான் உறவு வலுப்பெறுவதுடன் அமெரிக்காவின் கட்டைப்பஞ்சாயத்திற்கு தெற்காசியப் பிராந்தியத்தில் வேலையின்றி போய்விடும். ஈரான் – இந்திய உறவை மேலும் வலுப்படுத்தக் கிடைத்த வாய்ப்பை, அமெரிக்காவின் திருப்திக்காக இந்தியா தவறவிட்டு விட்டது.
- மத்தியக் கிழக்கு நாடுககளுக்கும் ரஷ்யாவிற்கும் இந்திய பொருட்கள் செல்ல ஈரானின் ஒத்துழைப்பு இன்றியமையததாக இருக்கிறது. இந்தியாவும் ஈரானும் இணைந்து ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை ஒடுக்க நார்த்தன் அலையன்ஸ் (Northern Alliance ) ஐ வலுப்படுத்த பாகிஸ்தானின் எதிர்ப்பையும் மீறி ஒத்துழைத்தது.
- காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை ஐ.நா சபை கண்டிக்க வேண்டும் என்பதற்காக 1994 இல் பாகிஸ்தான் கொண்டுவந்த தீர்மானத்தை, அப்போது ஜெனீவாவிலுள்ள ஐ.நாவிற்கான இந்தியத் தூதர் திரு.சதீஸ் சந்திராவிடம், ஈரானிய தூதர் பாகிஸ்தான் கொண்டு வரும் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு வந்தால் ஈரான் ஆதரிக்க வேண்டி இருக்கும் என்று வெளிப்படையாகச் சொல்லியதோடு பாகிஸ்தானை அத்தகைய தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டாம் என்று நிர்ப்பந்தித்தோடு இந்தியாவிற்கு ஆதரவாக தோற்கடித்து ஈரான் என்றுமே இந்தியாவின் நட்பு நாடு என்று உறுதி செய்ததது.
- வெளிச்சுட்டிகள்:
http://www.thehindubusinessline.com/2005/10/06/stories/2005100600140800.htm
Tags எதிரொலி நல்லடியார் பொதுவானவை
//அணுஆயுத பரவலை தடை செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் (இந்தியா-பாகிஸ்தான் உட்பட)//
இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் இன்னும் அனுஆயுத பரவல் தடை ஒப்பந்ததில் கையெழுத்து போடவில்லை நல்லடியாரே!
//இந்தியாவின் பாதுகாப்பைக் கருதி ஈரானுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்ததாக விநோதக் காரணம் சொல்லியது.//
பாகிஸ்தான் வழியாக தான் ஈரானுக்கு அனுஆயுதம் செல்ல முயற்ச்சி செய்யபட்டது நல்லடியாரே!
பாகிஸ்தான் அனுஆயுதம் விற்பது இந்திய பாதுகாப்புக்கு கேடு தானே?
பாகிஸ்தானும் Uranium Enrichmentல் இன்னும் சாதிக்கவில்லை.அதை தொழில்நுட்பத்தை தான் ஈரானுக்கும், லிபியாவுக்கு கொடுதது.
Centrifugeகளை பற்றி Google செய்து பாருங்கள்..
சரியாக எந்த warheadன் design சீனாவால் பாகிஸ்தானுக்கும், பின்னர் அவர்கள் மூலமாக வட-கொரியா,ஈரான் மற்றும் லிபியாவுக்கும் கொடுக்கபட்டது என்ற அறிய ஆவலாக நிங்கள் இருக்கும் பட்சத்தில் எனக்கு மெயில் அனுப்புங்கள்.சுட்டிகளை அனுப்புகிறேன்.
//இஸ்ரேலின் அணுக்கிடங்குகளால் இந்தியாவிற்கு ஏதேனும் பயனுண்டா?//
ஆம்.
உண்டு.
இந்தியாவுக்கு போர்கால அடிப்படையில் ஆயுதம் விற்க்கும் இஸ்ரேல் வலுவாக இருப்பது நமக்கு நன்மையே.
உதாரனமாக Phalcon,Green Pine மற்றும் பராக்-2.
இவை அனைத்துமே Cutting edge technology நல்லடியாரே.
அமெரிக்கா,பிரான்ஸ் போன்ற மிக சில நாடுகளே இவைகளை develop செய்துள்ளன.
அதுவும் Phalcon மற்றும் Green Pine இந்தியாவை பாகிஸ்தான்/சீன அனுஆயுத ஏவுகனைகளில் இருந்து பாதுகாக்க உதவும்.
கார்கில் போரின் போது அவர்களின் war-reservesகளில் இருந்து நமக்கு ஆயுதம் கொடுத்து உதவிய நன்பர்கள இஸ்ரேலியர்.
எத்தனை நாடுகள் அப்படி செய்யும்?
Nuclear Warhead miniaturisationஇல் இந்தியாவுக்கு இஸ்ரேல் உதவினாலும் ஆச்சர்யம் இல்லை.
அதே கார்கில் போரின் போது முஷார்பின் டெலிபோன் பேச்சு ஒன்று பதிவு செய்யபட்டு ஜஸ்வந்த சிங்கால் வெளிவிடப்பட்டு பாகிஸ்தான் சர்வதேச அளவில் தனிமைபடுத்தபட்டதே…அதற்க்கு பின்னால் மொஸாத் இருக்கலாம் என்றும் சில சந்தேகங்கள் உண்டு.
வெறும் காசு-பனத்தால் இது மாதிரி நட்பு ஏற்படுவதில்லை.
//ஈரானுக்கு எதிராக ஓட்டளித்தன் மூலம் பயனடைந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும்தான//
அப்படியானால் ரஷ்யாவும், சீனாவும் ஏன் ஈரானுக்கு எதிராக வோட்டு பொட்டன?
சிந்திக்க வேண்டும் நல்லடியாரே.
அவர்கள் NPTயில் கைஎழுத்து பொட்டு உள்ளனர்.அதை மீறுவதாகவும் அவர்களே அறிவிக்கின்றனர்.
அப்படியானால அந்த ஒப்பந்ததை விட்டு வெளியேருவதாக அறிவிக்க வேண்டும்.அதையும் செய்யவில்லை.
இது தவறு தானே?
//ஈரானுடன் இயற்கை எரிவாயுவை பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குக் கொண்டுவருவதை அமெரிக்க விரும்பவில்லை//
பாராளமன்ற தாக்குதல் நடந்த பின்னர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடக்காமல் இருந்தறக்கு முக்கிய காரனம் அமெரிக்கா-பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளின் அமைதி முயற்ச்சி நல்ல்டியாரே.
இந்திய energy supplyஐ பாகிஸ்தானிடம் அடகு செய்த்தால் என்ன நடக்கும் என்று தெரிந்துதான் பேசுகின்றீர்களா?
Baluchistanஇல தினமும் என்னைகுழாய்கள் வெடிக்கும் செய்திகளை படியுங்கள்.
அப்படி நம்மீது நல்ல என்னம் உள்ள பாகிஸ்தான் அவர்களின் கடல் பகுதி வழியாக என்னைகுழாய் அமைக்க அனுமதிக்க வேண்டியது தானே?
கடல் வழியாக என்னை குழாய அமைக்க இந்தியா கோரிய போது அதை ஏன் பாகிஸ்தான் மறுக்க வேண்டும் ?
நாம் அவர்களுக்கு கொடுக்கும் transit fee கடைசியில் இந்தியர்களை கொல்ல ஆயுதம் வாங்க பயன்படும் என்பதை கூடவா மறந்துவிட்டீர்கள்?
இந்தியாவிடம் யாரும் கட்டைபஞ்சாயத்து செய்ய முடியாது.செய்ததும் கிடையாது.
//இந்தியாவிற்கு ஆதரவாக தோற்கடித்து ஈரான் என்றுமே இந்தியாவின் நட்பு நாடு என்று உறுதி செய்ததது.//
OICயில் இந்தியாவுக்கு எதிரான தீர்மானங்களில் ஈரான் பாகிஸ்தான் அதரவு வோட்டு தான் பொட்டுள்ளது நல்லடியாரே.
//பாகிஸ்தான் அனுஆயுதம் விற்பது இந்திய பாதுகாப்புக்கு கேடு தானே?//
அமெரிக்காவின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு அவ்வளவு எளிதில் பாகிஸ்தான் அணு ஆயுதம் விற்க முடியாது. மேலும் பாகிஸ்தான் எந்த நாட்டிற்கு அணு ஆயுதம் விற்க முயன்றது? அது எப்படி இந்தியாவுக்கு கேடு?
//இந்தியாவுக்கு போர்கால அடிப்படையில் ஆயுதம் விற்க்கும் இஸ்ரேல் வலுவாக இருப்பது நமக்கு நன்மையே.//
அடடா, இந்தியாவை இஸ்ரேலின் அணு ஆயுத சந்தையாக இருக்க வைப்பதில் என்னே கரிசனம் உங்களுக்கு. சரி, இஸ்ரேல் மட்டும் இந்தியாவுக்கு ஆயுதம் விற்கலாம்; பாகிஸ்தான் ஈரானுக்கு விற்கக் கூடாது என்பதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா சமுத்திரா?
//அப்படி நம்மீது நல்ல என்னம் உள்ள பாகிஸ்தான் அவர்களின் கடல் பகுதி வழியாக என்னைகுழாய் அமைக்க அனுமதிக்க வேண்டியது தானே?//
உங்களிடம் யார் சொன்னது பாகிஸ்தானுக்கு இந்தியாமீது உள்ள நல்லெண்ணத்தில் பைப்லைன் வர அனுமதிக்கிறது என்று?
//அமெரிக்காவின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு அவ்வளவு எளிதில் பாகிஸ்தான் அணு ஆயுதம் விற்க முடியாது. மேலும் பாகிஸ்தான் எந்த நாட்டிற்கு அணு ஆயுதம் விற்க முயன்றது? அது எப்படி இந்தியாவுக்கு கேடு?
//
1.
A.Q.Khan தெரியுமா நல்லடியார் ?
இவர் அனுஆயுதம் விற்பதை கண்டுபிடித்த பின்னர் வீட்டுசிறையில் தள்ளபட்டுள்ளார்.என்னை கேட்டால் பாகிஸ்தான் இரானுவத்தால் பலிகெடா ஆக்கபட்டுள்ளார்.
2.லிபியா மற்றும் ஈரான்.
லிபியா அமெரிக்காவிடம் கொடுத்த centrifugeகள் அனைத்தும் A.Q.Khanஇடம் இருந்த வாங்கபட்டவை.
இது நிருபிக்கபட்ட பின்னர் தான் A.Q.Khan கைதி செய்யபட்டார்.
இந்த குற்றங்களை A.Q.Khan ஏற்று கொண்டு மன்னிப்பு கோரியுள்ளார் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஒரு நாட்டின் அனுஆயுத ரகசியங்களை அந்த நாட்டின் அனுமதி இல்லாமல் இப்படி விற்பது முடியாத காரியம்.
3. அது எப்படி இந்தியாவுக்கு கேடு ?
நிச்சயம் கேடு தான் நல்லடியாரே.
பாருங்கள் இப்போது ஈரானுக்கு விற்கும் போது நாம் பேசாமல் இருப்போம்.
பின்னர் அவர்கள் பங்களாதெஷ்க்கு விற்பனை செய்வார்கள்…
இப்படியே போனால் கடைசியில் துக்கடா நாடுகள் இந்தியாவை nuclear blackmail செய்ய ஆரம்பித்துவிடும்.
அது தான் உங்கள் விருப்பமா நல்லடியாரே?
//அடடா, இந்தியாவை இஸ்ரேலின் அணு ஆயுத சந்தையாக இருக்க வைப்பதில் என்னே கரிசனம் உங்களுக்கு. சரி, இஸ்ரேல் மட்டும் இந்தியாவுக்கு ஆயுதம் விற்கலாம்; பாகிஸ்தான் ஈரானுக்கு விற்கக் கூடாது என்பதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா சமுத்திரா?//
என் பதிலை திரிக்க பார்க்காதீர்கள் நல்லடியாரே.நன்றாக படியுங்கள்.
அனுஆயுதம் விற்பனை தான் குற்றம்.Conventional அயுதங்களை யார் வேண்டுமானாலும் விற்கட்டும்.
இப்போதும் நமக்கு உதவும் இஸ்ரேலியரை விட மற்றவர்கள் மீது தான் உங்களுக்கு பாசமா?
//உங்களிடம் யார் சொன்னது பாகிஸ்தானுக்கு இந்தியாமீது உள்ள நல்லெண்ணத்தில் பைப்லைன் வர அனுமதிக்கிறது என்று? //
பின்னர் எதற்க்கு பாகிஸ்தான் வழியாக என்னைகுழாய் கொண்டு வருவதில் இத்தனை ஆர்வம்?
நமது நாட்டின் energy securityஐ பாகிஸ்தானிடம் அடகு வெய்க்க செய்துவிடும் இந்த ஐ.பி.ஐ திட்டம்.
அமெரிக்காவுக்கு எதிரான் ஒரு counter ஆக தான் இந்த திட்டம் பயன்படுத்தபட்டதே தவிற இந்திய அரசு எந்த காலத்திலும் இந்த திட்டதில் சிரியஸாக இறங்கவில்லை.
மியான்மர் நாட்டில் இருந்து குழாய்கள், strategic reserveகள்,அனுசக்தி என்று வேறு பாதையில் சென்று கொண்டு இருக்கிறோம்.
//அணுஆயுத பரவலை தடை செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் (இந்தியா-பாகிஸ்தான் உட்பட) //
இது வரை நான் இந்த பதிவில் எழுதியுள்ளதில் எந்த விதமான factual errorம் கிடையாது நல்லடியார்.
எதாவது இருந்தால், திருத்திகொள்ள நான் தயார்.
அனால் உங்கள் பதிவில் உள்ள மிக மிக முக்கியமான factual error ஒன்றை நான் சுட்டிகாட்டிய பின்னரும் அதை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது நியாயமா?
அது தவறு என்றாவது ஏற்றுகொள்ள வேண்டாமா?
நான் உங்களிடம் intellectual dishonestyஐ எதிர்பார்க்கவில்லை.
நிச்சயம் தவறை திருத்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
(இந்த மிக முக்கியமான அனால் அனைவருக்கும் தெரிந்த ஒரு தகவலை கூட ஆறியாமல் எப்படி இந்த விஷயத்தை பற்றி தவறு இல்லாமல் எழுத முடியும் நல்லடியாரே?)
அது சரி,வழக்கமாக எதாவது வித்தியாசமான பெயர்களில் என்னை அவசர-அவசரமாக திட்டி பின்னூட்டம் இடுபவர்களை இன்று எங்கே கானோம்? :-)
சமுத்திரா,
உமது பின்னூட்டங்களில் உம் மேதாவித்தனத்தை நீரே மெச்சிக் கொண்டதும், என்னைக் கிண்டலடித்தவையும் போக எஞ்சியதில் அறிந்து கொண்டதாவது:
“கார்கில் போரின்போது இஸ்ரேலின் தொழில்நுட்ப உதவியால்தான் இந்தியா, பாகிஸ்தானை விரட்டியது; இஸ்ரேல் ஆயுதங்கள் வைத்திருப்பது இந்தியா, பாகிஸ்தானை வெல்வதற்கு கொடுத்து உதவுவதற்காகவே; பாகிஸ்தான், ஈரானுக்கு அணுஆயுத நுட்பத்தை வழங்கியது போல், இந்தியாவுக்கு எதிராக பங்களாதேஷுக்கும் வழங்கும்”
இந்தியாவின் அண்டை நாடு முஸ்லிம் அல்லாத சீனா, அணு ஆயுதம் வைத்திருந்தாலோ அல்லது அது பாகிஸ்தானுக்கு தொழிநுட்பம் வழங்கினாலோ உமக்குப் பரவாயில்லை; ஆனால் முஸ்லிம் நாடான பாகிஸ்தான், இன்னொரு முஸ்லிம் நாடான பங்களாதேஷுக்கு (ஒருவேளை அமெரிக்காவின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு) மட்டும் கொடுத்து விடக்கூடாது என்பதே உமது ஆதங்கம் இல்லையா?
முஸ்லிம் நாடுகளை அச்சுருத்த அமெரிக்கா, இஸ்ரேலுக்கு வெளிப்படையாக கொடுத்துவரும் உதவிகளைக் கண்டிக்க வக்கில்லாமல், பாகிஸ்தான் அணு ஆயுத நுட்பத்தை பங்களாதேஷுக்கு வழங்கி விட்டால் இந்தியாவின் நலனுக்கு நல்லதல்ல என்பது போகாத ஊருக்கு வழிகேட்பது மாதிரி உள்ளது. வருடத்தில் பெரும்பாலான மாதங்கள் மழை வெள்ளத்தாலும்,அரசியல் குழப்பங்களாலும் அவதிப்படும் பங்களாதேஷுக்கு அணு ஆயூதநுட்பம் ரொம்ப அவசியய்யா! சும்மா யூகங்களாலும் ஜல்லியடிக்காமல் கொஞ்சமாவது எதார்த்தமாக எழுதக் கற்க.
இதைச் சுட்டிக்காட்டி, உமக்கு இந்தியாவின் மீதான நலனைவிட இஸ்ரேல், அமெரிக்காவின் மீதான நலமும் அதன் மூலம் இஸ்லாமிய வெருப்பும் இருக்கிறது என்றால், கருத்தை திசை திருப்ப முயற்சிக்கிறேன் என்று சொல்வது! நன்றாக இருக்கிறதய்யா உமது நியாய சிந்தனை!
இந்தியா-ஈரான் உறவு என்பது ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இருக்கும் உறவைவிட பாரம்பரியமும் நெருக்கமும் கொண்டது. ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தன் மூலம் பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி வழங்கி இந்திய தீபகற்பத்தில் அமைதியை நிரந்தரமாகக் குழைக்கக் காரணமான அமெரிக்காவின் நலனுக்கு உகந்ததாகி விட்டது என்று சொன்னதைக் கவனத்தில் கொள்ளாமல் அல்லது புரிந்தும் புரியாததுபோல நடித்து, நீர் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் வால் பிடிப்பது போல், நான் பாகிஸ்தானுக்கு ஆதரவாக எழுதுவதாக திசை திருப்ப உம்போன்ற மெத்தப் படித்த மேதாவிகளால் மட்டும்தானய்யா சாத்தியம்.
பாகிஸ்தான்- பங்களாதேஷுக்கு நுட்ப உதவி வழங்கும் என்ற யூகிக்க முடிந்த உம்மால், இந்தியாவுக்கு எதிராக சீனா பாகிஸ்தானுக்கு அணுஆயுத நுட்ப உதவி வழங்கியதையும், அமெரிக்கா பிறஆயுத உதவிகள் வழங்கியதையும் கண்டிக்க முடியவில்லை. இதையாவது இந்தியாவின் நலன் சார்ந்த ஐயம் என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அமைதியான அரபுப் பிரதேசத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதம் கொடுத்து அப்பிராந்தியத்தில் அமைதியற்றதாக்கி அமெரிக்காவின் வயிறு நிறைக்கவும், தேவையற்ற பதட்டங்களால் உலக முஸ்லிம்களுக்கு அச்சுருத்தலாக வளர்ந்துவிட்ட இஸ்ரேலையும் அதற்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிக்கும் அமெரிக்காவையும் கண்டிக்க மனமில்லாதது கொழுந்துவிட்டெரியும் உமது முஸ்லிம் விரோதம் தவிர்த்து வேறென்ன?
பாகிஸ்தான் பங்களாதேஷுக்கு நுட்ப உதவி வழங்கிவிடக்கூடாது என்று உமக்கு யாராவது கீதாபதேசம் வழங்கியதுபோல், இந்தியா நேபாளத்திற்கு வழங்கி,பாகிஸ்தானுக்குக் குடைச்சல் கொடுக்கக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை. உமக்கு இந்திய நலனைவிட அமெரிக்க,இஸ்ரேலிய நலனில்தான் அக்கரை என்பது உமது பின்னூட்டங்களிலும் பதிவுகளிலும் தெளிவாகிறது.விடுத்து, உம் இ
saudi was the first nation to accept USA’s move.