Featured Posts

மதங்களும் பெண்ணியமும்.

விண்ஸ்டன் சர்ச்சிலிடம் ஒருவர், “பெண்கள் சம உரிமை பெறுவதற்கு என்ன வழி? என்று கேட்டதற்கு, “பெண்கள் தங்களிடமுள்ள உரிமைகளில் பாதியை ஆண்களுக்குக் கொடுத்து விட்டாலே போதும்! என்றாராம்.

பெண்ணியம்/ பெண்ணுரிமை பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் இஸ்லாத்தையும் புழுதிவாரித் தூற்றுவது நவீன பெண்ணியவாதிகளின் (?) அடிப்படைத் தகுதியாகி விட்டது . யார் இந்த பெண்ணியவாதிகள்? அது என்ன பெண்ணியம்? பெண்ணியம் பற்றி வாய்கிழியப் பேசும் இவர்களின் உண்மையான தகுதிதான் என்ன? இஸ்லாம் பெண்ணியத்திற்கு எதிரானதா? பெண்ணியம் பேசுபவர்கள் உண்மையில் பெண்ணியம் / பெண்ணுரிமை பற்றித்தான் பேசுகிறார்களா? என்று சீர்தூக்கி ஆராய்ந்தால் இவர்களின் அளவிட முடியா அறியாமையும் இஸ்லாத்தின் மீதான ஒருபக்கச் சார்பு விமர்சன இலட்சணமும் சந்திக்கு வந்து நாறும் ; இஸ்லாமியக் குரோதம் பல்லிளிக்கும்.

கிறிஸ்தவர்களின் வேதமான பைபிளில் முதல் மனிதன் ஆதாம் (ஆதம் அலை…) தவறிழைக்கக் காராணமானவள் ஏவாள் (ஹவ்வா அலைஹி…) என்று சொல்லப்பட்டு பெண்கள் அடக்கி வைக்கப் பட்டார்கள். (முன்னாள் கிறிஸ்தவர் என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொண்ட ஒரு பெண்ணியவாதி என்று கூறிக் கொண்டவர், முதல் பெண்ணுக்கு இஸ்லாத்தில் பெயரே இல்லை என்று தனது உயர்ந்த (?) தரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டார்.)

கி.பி. 586 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள், பெண்கள் மனித இனத்தை சார்ந்தவர்களா இல்லையா என ஆராய ஒரு கமிட்டியை அமைத்தனர். கி.பி.1567 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் பெண்களுக்கு எந்த உரிமையும் கொடுக்ககூடாது என சட்டம் இயற்றியது. கி .பி.1805 ஆம் ஆண்டுவரை ஒரு கணவன் தன் மனைவியை விற்பது கூடும் (விலை ஆறு பென்னிகள்) என ஆங்கிலேய சட்டங்களில் இருந்தது. கடந்த 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை ஆங்கிலேய பொதுச் சட்டபடி பெண்கள் பிரஜா உரிமையின்றி இருந்தனர்.

இராமாயணக் கதாநாயகி சீதை மாயமானுக்கு ஆசைப் பட்டிருக்காவிட்டால் இராமாயணமே இல்லை. அவள் தன் கற்பை நிரூபிக்கத் தீக்குளிக்க வேண்டியிருந்தது தனிக்கதை.

கணவன் துர்ப்பழக்கமுள்ளவனாக இருந்தாலும் அந்நிய ஸ்திரீ லோலனாக இருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போல பூசிக்க வேண்டியது. (அத் .5. சு .154) (புள்ளிராஜா வியாக்கியானம் பேசிய பெண் கற்பு புகழ் ஸ்ரீமான் கவனிக்க)

பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது.(அத் .11. சு .65)

இப்படிப் பொதுவான /இயல்பான தவறுகளுக்கும் கூட பெண்களே காரணம் என்று ஆதி காலந்தொட்டே பெண்ணினம் ஏதோ ஒரு வகையான அடக்கு முறைக்கு ஆளாகிக் கொண்டே வந்துள்ளது. இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மனித வரலாற்றைப் பார்த்தோமென்றால் எப்போதெல்லாம் சத்திய நன்னெறி பின் தள்ளப்பட்டு அசத்தியக் கோட்பாடுகள் தலையெடுத்தனவோ அப்போதெல்லாம் ஏறக்குறைய எல்லா சமூக அவலங்களும் அரங்கேறியுள்ளன . அவற்றுள் முன் வரிசையில் பெண் அடக்கு முறை இடம் பிடிக்கின்றது.

இறைத்தூதர்கள் வழியாக இடையிடையே இஸ்லாமிய நன்னெறி புத்துயிர் பெற்ற போதெல்லாம் பெண்ணுக்கு அவளுடைய இயல்பான உரிமை வழங்கப்பட்டு வந்துள்ளது.

வரலாற்றில் ஆணித்தரமாகப் பதிவாகியுள்ள செய்திகளின் அடிப்படையில் பார்த்தோமென்றால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்ணியக் கொள்கை தலையெடுத்தது. பெண் விடுதலைக்கான வாசல் திறந்தது, என்பதைப் படிக்கலாம். ஆனால், உண்மை நிகழ்வுகளை அலசிப் பார்த்தோமென்றால் பெண்ணுக்கான உண்மையான சுதந்திரம் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்லாமின் மூலமாகத்தான் கிடைத்துள்ளது என்பதை நியாயச் சிந்தனையுள்ள எவரும் மறுக்க மாட்டார்கள்
.

சமவுரிமை, சமத்துவம் என்றெல்லாம் பேசும் இன்றைய பெண்ணியச் சிந்தனை பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறப்பெடுத்தது . கற்பனைச் சமூகவியலாளரான சார்லஸ் ப்யூரியே என்பவர் தாம் முதலில் பெண்ணியம் (Feminism) என்ற சொல்லை 1837 இல் கையாண்டார். அதன் பின்பு அது தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே சென்று இன்று விமர்சனங்களின் விளிம்பில் வந்து நிற்கின்றது.

பெண்களின் உரிமைகளாக வெவ்வேறு பெண்ணியக் குழுக்கள் முன் வைக்கும் சம உரிமை, ஆண்களுக்கு நிகரான வேலைவாய்ப்புகள் , தனித்துவம், பாலியல் சுதந்திரம், ஓரினச் சேர்க்கை, போன்றவற்றைப் பற்றி இஸ்வாம் என்ன கருதுகின்றது என்பதையும் பிறமதங்கள் வழங்கியுள்ள பெண்ணுரிமைகளையும் நாம் பார்த்தாக வேண்டியிருக்கிறது .

பெண்ணுரிமை /பெண்ணியம் பற்றிய விவாதங்களில் இஸ்லாம் பெண்ணுக்கு இன்னென்ன உரிமைகளை வழங்கி இருக்கின்றது என்று பட்டியலிட்டால், அவையொன்றும் புதிதல்ல எங்கள் மதமும் இன்னென்ன உரிமைகளை வழங்கியுள்ளன என்று எதிர்விவாதம் செய்ய வக்கில்லாதவர்கள் இஸ்லாத்தில் பர்தா, தலாக் போன்றவற்றைச் சொல்லி இஸ்லாம் வழங்கி இருக்கும் பெண்ணுரிமைகளை பின் தள்ளுவதிலேயே குறிக்கோளாயுள்ளனர் .

அதே போல் முஸ்லிம்களிலேயும் சிலர் , மாற்று மதத்தார் வைக்கும் குற்றச்சாட்டுகளைத் தெளிவுபடுத்த முனையாமல் இந்து மதத்திலும் தோசங்கள் , உடன்கட்டை ஏறுதல், மறுமண உரிமையின்மை , சொத்துரிமையின்மை போன்றவற்றைச் சொல்லி அவற்றில் உள்ளதை விட இஸ்லாத்திலும் பெண்ணுக்கு எதிரான அடக்குமுறைகள் உள்ளன என்பது போல் சொல்லி பெண்ணுரிமை பற்றிய விவாதங்கள் முடிவற்று செல்கின்றன .

இஸ்லாம் வழங்கி இருக்கும் பெண்ணுரிமைகளைப் பின்னுக்கு வைப்போம். குர்ஆனில் உள்ள கட்டளைகளை ஆண்களை முன்னோக்கிச் சொல்லப்படும் இடங்களில் ஆணாதிக்க மனப்பான்மை இருப்பதாகவே வைத்துக் கொள்வோம் . இதன் மூலம் இவரகள் சொல்ல வருவதுதான் என்ன?

இஸ்லாம் அல்லாத மதங்கள் பெண்ணுரிமையை வழங்கி விட்டன என்றோ அல்லது இஸ்லாத்தைப் பின்பற்றாத மேற்குலகில் பெண்களெல்லாம் சமத்துவம் பெற்று விட்டார்கள் என்றோ என்றால் அதுவும் இல்லை. மாறாக, “இஸ்லாத்தில் பெண்ணுரிமை இல்லை” என்ற (Stereo-type) கூக்குரல் மட்டுமே மிகைக்கிறது . இதுவா விமர்சன நியாயம் ?

இந்திய அரசியல் சட்டத்தின் படி மதநம்பிக்கையின் பெயராலோ அல்லது வேறு எந்த காரணத்துக்காகவும் ஒரு உயிரைக் கொல்வது தண்டனைக்குரிய குற்றம். சதி என்ற உடன்கட்டை இந்து மதத்தில் இல்லை என்பவர்கள் தங்கள் நால்வகை வேதங்களிலிருந்து நிரூபிப்பதில்லை. மாறாக இந்திய அரசியல் சட்டத்தையோ அல்லது உலகச் சட்டத்தையோ முன் வைப்பார்கள். இவற்றிகும் இந்துமத வேதங்களுக்கும் என்ன சம்பந்தம்?

இந்தியாவில் பெண்ணுரிமைக்காக வாதிட்ட சிந்தனையாளர்களில் எத்தனைபேர் இந்து மதத்தை முன்னிறுத்தி பேசினார்கள்? அம்பேத்கர் , பெரியார் போன்றோர் இந்து மதத்தை கைவிட்டுதானே அப்படிப் பேச முடிந்தது!

தீவிர இந்துத்துவவாதியாகவோ அல்லது ஆன்மீகக் குரு என்று சொல்லப்படும் சங்கராச்சாரியாராகவோ இருந்தாலும் சரி, அவர்களால் இந்து மதத்தில் பெண்ணுரிமை உள்ளது என உண்மையாகச் சொல்ல முடியாது .

மாறாக அத்தகைய பெண்ணடிமைத்தனத்திற்கும் அடக்குமுறைக்கும் சார்பாக நியாயம்தான் கற்பிக்க முடியும் என்பதற்கு அவர்களின் பல்வேறு உபதேசங்களே சான்றாக இருக்கின்றன . உடன்கட்டை ஏறுவதைத் தடுத்தால் தன் உயிரைக் கொடுத்தாகிலும் அதை நிலை நிறுத்துவேன் என்றார் வடநாட்டு சங்கராச்சாரியார்.

இஸ்லாத்தில் பெண்களெல்லாம் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்றால் இன்னும் ஏன் தலாக், வரதட்சணை , அடக்கு முறை, பாலியல் துன்புறுத்தல்கள்,
சிறைக் கொடுமைகள் போன்று எத்தனை எத்தனையோ தளைகளை அவர்கள் தங்கள் கழுத்துக்களில் சுமந்து கொண்டுள்ளார்கள் எனக் கேட்கலாம் . இவற்றையெல்லாம் எதிர்க்க வீறு கொண்டு நாம் போராடுவோம். பெண்ணியம் என்கிற பேனரின் கீழ் அல்ல!

மேலும் இத்தகைய சமூக அவலங்களுக்கு இஸ்லாத்தை அரைகுறையாகப் பின்பற்றும் முஸ்லிகளே காரணமின்றி இஸ்லாம் அல்ல என்ற உண்மையை விளங்கிக் கொண்டால், பெண்ணுரிமைக்கும் ஆண் -பெண் சமத்துவத்திற்கும் ஏற்ற மார்க்கம் இஸ்லாமே என்பது நியாய உணர்வுள்ள எவருக்கும் விளங்கும் .

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

6 comments

  1. அட்றா சக்கை

    அய்யா நல்லடியார்!

    இப்புடிப் புட்டு வக்கிறீங்களே.. என்ன உங்க புதுக்கல்லூரித் தோழர் இதப் படிச்சுட்டு லாவகமா ‘சென்னை வந்தால் மொபைல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் இருவரும் பிரியாணி சாப்பிடுவோம்’ அப்டின்னு தெச திருப்புவார்..

  2. தெளிவான தொடக்கம்.

    தொடரட்டும் தெளிவுகள்.

  3. பகுத்தறிவாளன்

    முன்னாள் கிறிஸ்தவர் என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொண்ட ஒரு பெண்ணியவாதி

    தருமியைக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன்.

    சரி தான் எனில், பிழைத்து போகட்டும். விட்டு விடுங்கள்.

    அவர் கிறிஸ்தவத்திலிருந்து வெளி வருவதற்கு காரணமாக அடுக்கிய ஒம்போது காரணங்களில் முக்கிய காரணமான “இயேசு சிலுவையில் உயிர் நீத்ததைக்” குறித்து நான் எழுப்பிய கேள்விக்கு இன்னும் பதிலே வரவில்லை. குறைந்த பட்சம் நாகரிகம் கருதி அக்கேள்வியை பிரசுரிக்க கூட இல்லை.

    இவர் கிறிஸ்தவத்திலிருந்து வெளிவந்தவர் தானா என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது.

    தெளிவாக சொல்வதெனில் இவர் பைபிளையே ஒழுங்காக படிக்கவில்லை என்பது என் கேள்வியை மறைத்ததிலிருந்தே தெரிகிறது.

    அப்படி இருக்கையில் குரானைக் குறித்தும் இஸ்லாத்தைக் குறித்தும் இவருக்கு என்ன தெரிந்திருக்கப் போகிறது.

    அது தான் அவருடைய இஸ்லாத்தில் ஏவாளுக்கு பெயரே இல்லை என்ற வெளிப்படுத்தல்.

    யார் யாரோ கக்குவதை இவர் வாந்தியெடுப்பது தெளிவாகத் தெரிகிறது. போகட்டும் ச…. விட்டுத்தள்ளுங்கள்.

  4. இன்னொரு பகுத்தறிவாளன்

    முன்னாள் பெண்ணிய வாதியின் அற்புதமான கருத்துக்கள்

    \\ இவர்களையெல்லாம் எப்படி தேடிப்பிடித்தார்கள் என்று எனக்கு சந்தேகம். அதில் பெரிய ஆச்சரியம் அதில் பெரும்பாலோர் புதிய பல சீரியல்களில் வருவதுதான். கொஞ்சம் அழகானபெண்களுக்கு அவ்வளவு பஞ்சமா, என்ன?\\

    \\தருமி Says:
    May 6th, 2006 at 10:47 pm
    கமல்,
    அந்தப் பெண் பேரு சகதியா.. i mean, சக்தியா? இப்போ அவங்க கோலங்களில் வரும் கோலம் பார்த்தீங்களா? பொல்லா அலம்புதாங்க!

    எனக்கு என்ன சந்தேகம்னா, அவங்களுக்கெல்லாம் நாம ரொம்ப அழகுன்னு நினப்பு இருக்கும்ல.

    செல்வி -வில்லி, சும்மா சொல்லக்கூடாது அழகா இருக்காங்க. யாருங்க நீங்கதான் ரசிகர் மன்றத் தலைவரா? //

    //தருமி Says:
    May 6th, 2006 at 11:17 pm
    கமல்,
    வேண்டாம்; இந்த விளையாட்டெல்லாம் எங்கிட்ட வச்சுக்காதீங்க; உங்க மனசுல என்னதான் நினச்சிக்கிட்டு இருக்கீங்க. இதுதான் கடைசி தடவையா இருக்கட்டும். சரியா..? என்ன துணிச்சல் இருந்தா “மெட்டி ஒலியில மட்டுந்தான் நல்லா இருந்தது..” அப்டின்னு சொல்லுவீங்க?

    ஏங்க கமல் நிஜமா சொல்லுங்க, நீங்க சும்மானாச்சுக்கும்தானே அந்த மாதிரி சொன்னீங்க? பாக்கிற மூஞ்சுங்களா அது – அன்றைக்கும் இன்றைக்கும்?\\

    \\தருமி Says:
    May 6th, 2006 at 11:19 pm
    kamal,
    //“அப்ப நெறையப்பேரு அவங்க கட்டியிருந்த டிசைன் புடவையையே கட்டியிருந்தாங்க…”//
    – அதில “அவங்களும்” சேத்தியா? \\

    \\தருமி Says:
    May 7th, 2006 at 9:35 am
    அய்யோ பொன்ஸ்,
    நான் சொல்றது அந்த மாயாதான். ரஞ்சனி நல்லா நடிக்கிறாங்க. மாயா அழகா இருக்காங்க. இன்னொண்ணு வருமே..இப்பகூட சீரியல்ல conceive ஆகி இருக்கே..அதுவும் அதுக்கு கணவனா வருதே ஒண்ணு…விடுங்க, வேற ஆளுக பற்றிப் பேசுவோமா? \\

    சரி பெண்ணியம் பற்றி வாய்கிழியப் பேசும் இவரது எண்ண ஓட்டத்தைப் பார்த்தீர்களா?

    சீரியல்களில் நடிக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக அவர்களது “அழகு” பற்றி அளவீடு செய்து மார்க் போட இவருக்குத் தகுதி உள்ளதாக இவர் நினைக்கிறார்!

    தனக்குத் துளியும் சம்பந்தம் இல்லாத பெண்களைப் பற்றி இப்படி எல்லாம் பேசுவது தான் ஒருவேளை பெண்ணியமோ?

    இதில் கொடுமை என்னவென்றால் இவரின் இந்த வர்ணனைகள் பற்றிய விவாதத்தில் தம்மை அறியாமல் பங்கு பெறும் பெண் வலைப் பதிவர்கள் வேறு!

  5. நல்லடியார்,
    “(முன்னாள் கிறிஸ்தவர் என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொண்ட ஒரு பெண்ணியவாதி என்று கூறிக் கொண்டவர், முதல் பெண்ணுக்கு இஸ்லாத்தில் பெயரே இல்லை என்று தனது உயர்ந்த (?) தரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டார்.) //

    பெயரைக் குறிப்பிட்டே எழுதியிருக்கலாமே! நான் என்ன மறைமுகவாகவோ, இல்ல என்னை மறைத்துக்கொண்டோவா எழுதினேன்?

    முதலில் என் தவறை ஒப்புக்கொள்கிறேன். நான் கேட்ட 21 கேள்விகளில் ஒரு கேள்வி தவறான கேள்வியாகப் போய்விட்டமைக்கு மன்னிக்கவும். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

    இதனால் எனது மற்ற 20 கேள்விகளும் சரியென்று நீங்கள் சொல்லி விட்டதாகவோ, இல்லை அதற்குரிய பதில் அளிக்கத் தங்களுக்கு விருப்பம் இல்லையென/முடியவில்லையென நான் கருதலாமா?

    நான் மனம் திரும்பிய கிறிஸ்துவன் என்று நானே சொல்லிவிட்டேன். அதில் என்ன ஏளனம் உங்களுக்கு? ஆனால், எப்போது நான் பெண்ணியவாதி என்று குறிப்பிட்டேன். அப்படியே பெண்ணியவாதியாக இருப்பது தவறுபோல சொல்லியுள்ளீர்கள். அது உங்களை அடையாளம் காட்டுகிறது.

    உங்கள் பதிவில் இந்த நையாண்டி தேவையா? என்ன கோபம் உங்களுக்கு? இஸ்லாமியத்தையும் கேள்விக்கு உட்படுத்தியதினாலா?

    அடுத்த பதிவில் உங்கள் பகுத்தறிவாள நண்பர்களுக்குப் பதில் சொல்வதாக உத்தேசம். இப்பின்னூட்டத்தையும் அந்தப் பின்னூட்டத்தையும் அனுமதிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்…

  6. நல்லடியார்

    //எனது மற்ற 20 கேள்விகளும் சரியென்று நீங்கள் சொல்லி விட்டதாகவோ, இல்லை அதற்குரிய பதில் அளிக்கத் தங்களுக்கு விருப்பம் இல்லையென/முடியவில்லையென நான் கருதலாமா?//

    உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் முன்,

    1) அந்த இருபது கேள்விகளால்தான் நீங்கள் கிறிஸ்தவத்திலிருந்து விலகினீர்களா?

    2) வாழ்க்கையின் முதுமையில் மதம் அவசியம் என உணரும் பட்சத்தில் எந்த மதம் உங்கள் தேர்வாக இருக்கும்?

    இவற்றிற்கு பதில் சொல்வதும் சொல்லாததும் உங்கள் விருப்பம். ஆனால் உங்களின் 20 கேள்விகளுக்கு விரைவில் பதிலிடுகிறேன்.

    பி.கு: உங்களை ஏளனப்படுத்தும் நோக்கமில்லை. புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் (2). நானும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவனல்ல!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *