முஸ்லிம் அல்லாத சகோதரர்களிடையே இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் பற்றியும் காணப்படும் தவறான கருத்துக்களுக்கு பல்வேறு காரணங்களைச் சொல்லலாம்.
முதலாவதாக, இஸ்லாத்தைக் குறித்தும் அதன் தாத்பர்யம், கொள்கை கோட்பாடுகளைக் குறித்தும் அவர்களுக்கு எவரும் எடுத்துச் சொல்லவில்லை; முஸ்லிம்களே சொல்ல மறந்து விட்டனர்.
இரண்டாவதாக, பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்ட ஆங்கிலேயர்கள் தீவிரமான முஸ்லிம் விரோதப் பிரச்சாரத்தை மேற்கொண்டு தவறான கருத்துக்களை ஆழமாக விதைத்து விட்டனர். அதன் பாதிப்பு இன்று வரை நீடிக்கிறது.
மூன்றாவதாக, வகுப்புவாதிகளும் பாஸிஸவாதிகளும் தொடர்ந்து இடைவிடாமல், சளைக்காமல் மேற்கொண்டு வரும் தீவிரமான முஸ்லிம் விரோதப் பிரச்சாரம்! இவர்கள் இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக்கட்டி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்து தவறான கருத்தை வலிந்து திணித்து வருகின்றனர்.
நான்காவதாக, முஸ்லிம்களின் தவறான செயல்களே இஸ்லாத்துக்கும் பிறமதச் சகோதரர்களுக்கும் இடையே தடுப்புச்சுவராக எழுந்து நிற்கின்றன. முஸ்லிம்கள் சரியான, உண்மையான இஸ்லாத்தை கடைப்பிடிக்கத் தவறியதும் ஒரு முக்கியமான காரணமாகும்.
இவற்றோடு ஊடகத்தின் பங்கையும் சேர்த்துக்கொள்ளலாம். எதிர்மறையான நிகழ்வுகளோடும், குணங்களோடும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இணைத்துச் சொல்வது ஊடகத்தினருக்கு வாடிக்கையாகிவிட்டது. போர், பயங்கரவாதம், கலவரங்கள், ஆள்கடத்தல், விமானக்கடத்தல், ஆடம்பரம், சர்வாதிகாரம், மூட நம்பிக்கை, பின் தங்கிய நிலை போன்ற எதிர்மறையான குணங்களோடுதான் முஸ்லிம்களை ஊடகம் அடையாளங்காட்டுகிறது.அது மட்டுமின்றி, வரலாற்றுப் பாடநூல்களிலேயே முஸ்லிம்கள் குறித்து தவறான கருத்துகளும் அரைகுறையான உண்மைகளும் இடம் பெற்றிருப்பதும் சின்ன வயதிலேயே தவறான கருத்துகள் வேரூன்றுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. (1)
இத்தகைய சூழ்நிலையில் இஸ்லாம் குறித்து நிலவும் தவறான புரிதல்களை அகற்றி சரியான முறையில் உண்மை இஸ்லாத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் கடமை இன்றைய முஸ்லிம்களுக்கு இருக்கிறது.
(1) “சத்தியப்பேரொளி” எனும் நூலிற்கு இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்டின் தலைவர் ஹெச். அப்துர் ரகீப் அவர்கள் எழுதிய பதிப்புரையிலிருந்து..
பொதுமக்கள் மத்தியில் இஸ்லாம் பற்றிய எதிர்மறையான எண்ணங்கள் ஏற்பட்டமைக்கு நீங்கள் சொன்ன காரணங்கள் சரிதான்.
அனால்,
முற்போக்காளர்களிடம், குறிப்பாக விஞ்ஞான சோசலிஸ்டுக்களிடம் இஸ்லாம் மீதான எதிர்ப்பு மனோபாவம் இவற்றால் ஏற்படுவதல்ல. (கவனிக்க- இஸ்லாம் மீதுதானே தவிர முஸ்லிம்கள் மீது அல்ல)
அதிதீவிர புத்தக வழிபாடு, அசையமறூக்கும் கருத்துமுதல்வாதப்பிடிப்பு என்பது நான் கண்முன் காணும் சமூகங்களிடையே, இஸ்லாத்தில்தான் இறுக்கமாக நிறுவனமயப்படுத்தப்பட்டிருக்கிறது.
இஸ்லாம் எதிர்ப்பு என்பதை இந்தக்கோண்வத்திலும் பார்க்கலாமே?
இனிய மயூரன்,
ஏற்றிருக்கும் மதக் கோட்பாடுகளைப் புத்தகம் அறிவிக்கின்றது. அதன் மேல் பற்று வைத்து அதன் வழியில் நடப்பதையும், அதன் கருத்துகளை தற்கால வாழ்க்கைமுறையிலும் ஒப்பிட்டுப் பார்த்து அனுமதிக்கப்பட்டதை எடுத்துக்கொண்டு அனுமதிக்கபடாதவற்றிருந்து விலகிக்கொள்வதையும் எப்படி இறுக்கமான நிறுவனமயமாக்கல் எனச் சொல்வது. எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரவர் மதக்கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க இத்தகைய அணுகுமுறைதானே தேவை.
நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி நமது செயல்பாடுகள் இருக்கின்றன. சில நேரங்களில் நமது புரிதல்கள் தவறாக இருக்கும் பட்சத்தில், அது தவறென்பதை மற்றவர்கள் ஆதாரங்களுடன் விளக்கும்போது ஏற்றுக்கொள்ளப் போகிறோம்.
இஸ்லாத்தை முன்னிறுத்தி தவறான புரிதல்களால் நடக்கும் தவறுகளால் இஸ்லாமே தவறென்பது ஒருபக்கக் கருத்து.
அன்புடன்
ஆசாத்
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி மயூரன்,
இஸ்லாம் இறுக்கமாக நிறுவனமயப்படுத்தப்பட்டிருக்கிறது என்று ஒரு கருத்து ஏற்பட காரணமே, முஸ்லிம்கள் சரியானபடி இஸ்லாத்தை அறிந்து நடைமுறைப் படுத்தாதுதான் என்று நான் எண்ணுகிறேன்.
இஸ்லாமை சில மார்க்க அறிஞர்கள் ஒரு கட்டிட வரைபடத்திற்கு ஓப்பிடுகிறார்கள். வரைபடத்தின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப கட்டிடத்தை அமைப்பதுபோல, குர் ஆனின் வழிகாட்டுதலின்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வது ஒரு முஸ்லிமின் கடமையாகிறது. வழிகாட்டுதல்களை புரிந்துகொள்ள வேண்டிய சிந்தனைத்திறனும் செயலாக்கத்திறனும் மனிதர்களுக்கு வழங்கப்பட்டுத்தானே இருக்கிறது? குர் ஆன் வசனங்களும், முஸ்லிம்கள் அவற்றை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற வேண்டும் என்பதைவிட, அவற்றை அடிப்படையாக வைத்து சிந்தித்து செயாலாற்றுவதையே வலியுறுத்துகிறது.
உங்கள் கருத்துக்களை தொடர்ந்து எழுதுங்கள்.
நட்புடன்
சலாஹ¤த்தீன்
அன்புள்ள சலாஹுத்தீன்
ஸலாம்.
இஸ்லாம் குறித்த தவறான புரிதலுக்கு நீங்கள் எடுத்துச்சொல்லியிருக்கும் காரணங்கள் சரியே. தொடர்ந்து உங்களின் அறிவர்ந்த எழுத்துக்களை தாருங்கள். மகிழ்ச்சி.
சகோதரனே…….
1. இஸ்லாம் அறிவியலுக்கு எதிரானதா?
உலகத்தில் இதுவரையில் ஒரு இஸ்லாமிய விஞ்ஞானியோ
கண்டுபிடிப்புகளோ இல்லையே ஏன்?
(அப்துல் கலாம் என்று சொல்லவேண்டாம் . அவரது கண்டுபிடிப்பென்று எதுவுமில்லை)
குறைந்த பட்ஷம் ஒரு நோபல்பரிசு பெற்றவர் எவராவது உள்ளனரா?
2. பெண்கள் தலைமையிலான தொழுகையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– முல்லா நஷ¤ருத்தீன் – அலாஸ்கா
//உலகத்தில் இதுவரையில் ஒரு இஸ்லாமிய விஞ்ஞானியோ கண்டுபிடிப்புகளோ இல்லையே ஏன்?//
http://pleasingpath.blogspot.com/2004/11/blog-post_14.html