மஃரிபத் (மெஞ்ஞானம் ) المعرفة
சூஃபிகளின் கூற்றுப்படி தேவையற்ற சரீஅத் சட்டங்களால் தன்னைத்தானே விலங்கிட்டுக் கொண்ட ஒரு மனிதன் ஒரு சூஃபிக் குருவின் சீடனாகி தரீக்கத் எனும் சேற்றினுள் விழுந்து மூளையையும் சுய சிந்தனையையும் பறிகொடுத்து பின்னர் ஹக்கீக்கத் எனும் மாயையில் வீழ்ந்து புலம்ப ஆரம்பித்ததும் அளவுக்கதிகம் இறை நினைவில் (!?) (சூஃபிகளின் இறைவனான ஷைத்தானின் நினைவில் மூழ்கியதால்) ‘பனாஃ’ எனும் நிலை ஏற்படுமாம். இதற்கு இறை நினைவால் மூழ்கி தன்னையே அழித்துக் கொள்ளல் (அதாவது தன்னிலை மறந்து விடும் நிலை) என்று சூஃபிகள் வாதிடுகின்றனர்.
உண்மையில் இது போதை மயக்கத்தில் பேதலித்து விடுவதால், அல்லது ஊன் உறக்கமின்றி சதா காலமும் ஏதோ ஒன்றை நினைத்துக் குழம்பிக் கொண்டிருப்பதால் ஏற்படும் ஒரு வகை மூளைக் குழப்பம் அல்லது பைத்தியத்தின் ஆரம்ப நிலை என்பதில் சந்தேகமில்லை. அனைவரையும் விட அல்லாஹ்வுக்கு விருப்பமான, அவனுக்கு அதிகம் அஞ்சி நடந்த, இபாதத், வணக்கம் உட்பட அனைத்து விஷயங்களிலும் முன்மாதிரியாக அனுப்பப்பட்ட முஹம்மத் நபியவர்களுக்கே இவ்வாறான ஒரு நிலை ஏற்படவில்லையே.. இப்படியொரு பனாஃ நிலைக்குக் சென்று இவர்களைப் போல் உளற வில்லையே.. நபியவர்களை விட இந்த சூஃபிகள் இறை நேசர்களா? அவர்களை விடக் கடுமையான வணக்கவாளிகளா ? அவர்களுக்குத் தெரி யாத ஹக்கீக்கத்தை ( ரகசியத்தை ) இவர்கள் தெரிந்து கொண்டார்களா ?
நபியவர்களின் ஆத்மீகப் பாசறையில் பயிற்சி பெற்ற லட்சக் கணக்கான ஸஹாபாக்களில் ஒருவருக்கேனும் இப்படியொரு நிலை ஏற்பட்டுப் புலம்பியதாக வரலாறு உண்டா? அப்படி இந்த சூஃபிகள் நிரூபிப்பார்களா? அல்லாஹ் பொருந்திக் கொண்டதாக அல் குர்ஆனிலேயே விளம்பரப்படுத்தப்பட்ட அந்த இறைநேசர்களுக்குக் கற்பிக்காத ரகசியத்தை இந்த சூஃபிகளுக்கு கற்றுக் கொடுத்தானா? இந்த வினாக்களுக்கு ஒவ்வொரு தனி மனிதனும் விடையளிக்கக் கடமைப்பட்டுள்ளான்.
சரி…. விஷயத்துக்கு வருவோம்..
இப்போது இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே அல்லாஹ்வின் பிரதிபலிப்பே.. தூணும் அவனே துரும்பும் அவனே, வானமும் அவனே வையமும் அவனே, நீயும் அவனே நானும் அவனே எனும் ரகசியம் அவருக்குப் புலப்பட ஆரம்பித்ததும் அவருக்கு அனைத்து வித மறைவான ஞானங்களும் புலப்பட ஆரம்பிக்கும். இவரே முன் கூட்டியே கடவுளாக இருந்திருந்ததன்; ரகசியத்தை இப்போது இவர் கண்டு கொண்டதால் கடவுளின் ஆற்றல், அறிவு வல்லமை மறைவான ஞானம் அனைத்தும் இவருக்கும் வந்து விடும். இதற்குத்தான் இவர்களிடத்தில் மஃரிபா மெஞ்ஞான முக்தி பெறல் எனப்படும். இந்த நிலையை அடைந்தவர்களுக்கு ஆரிபீன்கள் மெஞ்ஞான வான்கள் எனும் பெயர் சூட்டப்படும்.
அப்துல் அஸீஸ் தப்பாக் எனும் அண்மைக்கால சூஃபி ஒருவர் கூறுகின்றார்..
‘அல்லாஹூத்தஆலா தான் யாரென்ற மஃரிபா ஞானத்தை ஒருவருக்குக் கொடுக்கும் வரை எவரையும் நேசிப்பதில்லை. அந்த ஞானம் பெற்றதும் அவர் அல்லாஹ்வின் ரகசியங்களையெல்லாம் காண ஆரம்பிப்பார். அப்போது அவருக்கு ஜத்பு எனும் இறை ஈர்ப்பு நிலை ஏற்படும். ( இப்ரீஸ் ப: 217 )
இல்லை! உண்மையில் இது தேவையற்ற சிந்தனைக் குழப்பத்தாலும், அளவுக்கதிகமான திக்ர் எனும் பெயரில் அரங்கேற்றிய பேயாட்டத்தாலும் ஏற்பட்ட காக்காய்வலிப்பு நோய்தான் இது!.
அதாஉல்லாஹ் இஸ்க்கந்தரி எனும் சூஃபி மகான்?? கூறுகின்றார்…
‘மஃரிபா –ஞானமென்பது ஒரு கற்கக் கூடிய அறிவல்ல. அது நேரடியாகக் காணும் ஒரு நிகழ்வாகும், அது சொல்லித் தெரியும் ஒன்றல்ல, அது வர்ணிக்க முடியா ஒரு ரசனைமிகு ஓவியம், திரையிடப்படாத ஒரு காட்சி. இதைக் கண்ணுற்றவர்கள் ஏனை யோரைப் போன்றல்ல, ஏனையோர் கண்ணுற்றோரைப் போன்று மல்லர்.
மஃரிபா எனும் ஞானம் பெற்ற ஆரிபீன்களிடத்தில் அல்லாஹ் அல்லாத எப்பொருளும் இருக்கின்றதென்றோ இல்லையென்றோ சொல்லப்பட மாட்டாது. ஏனெனில் அவனே எல்லாம் என்பதே உண்மையாதலால் அவனல்லாத எதுவும் இல்லையென்பது தெளி வாகின்றது. (கஸ்புல் அஸ்ரார். ப: 139)
எதுவுமறியா அப்பாவிப் பாமர சமூகம் சூஃபி மகான்கள், மெஞ்ஞான குருநாதர்கள் என்று போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஷைத்தானின் தூதர்களான கேடுகெட்ட இந்த சூஃபிகளின் அந்தரங்கம் இதுதான். குப்ரையும் ஷிர்க்கையும் பாமரர்கள் மத்தியில் பெயரை மாற்றி மெஞ்ஞானம் எனும் போர்வையில் விதைத்து நரகத்தின் நாயகனான ஷைத்தானின் அணிக்கு ஆள் சேர்ப்பு செய்து ஷைத்தானின் நேசர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம் போட்டு பசுந்தோல் போர்த்திய புலிகள் போன்று சமுகத்திலே ஊடுருவிய, இப்போதும் ஊடுருவியிருக்கும் இந்தக் கேடு கெட்டவர்களை அனைவரும் அடையாளங் கண்டு கொள்ள வேண்டும். இவர்களைப் பற்றி சமூகத்தின் மத்தியில் உள்ள கற்பனை கருத்தோட்டத்தைக் களையெடுத்து இவர்களின் சுயரூபத்தைத் தோலுரித்துக் காட்ட வேண்டும். இது ஒவ்வொரு முஃமினதும் இஸ்லாமிய, தார்மீகக் கடமையாகும்.
I would like to know more about Sufyism and Tarreqah, as some of my family members are involved and i need some way to bring them out from the deviated path (insha allah).
If you have any more videos or debate on this subject it will be helpful to make them understand.
Expecting your support.
best book
I think now this is not important.because now our society felling down.ongoing to become as a bad society. Now our muslim girls are very bad more than other religion girl.they are trifling their time with phone and other useless work.now our girls are running with boys as desperetaly.i hope it will be a fashion in upcoming days.so first bring a good solution about this matter.and speak much than about this.after we can speak about soofi,thouheedh,dhableeque.
லகும் தீனுக்கும் வலிய தீன்