Featured Posts

சூஃபித்துவத் தரீக்காக்கள்

சூஃபித்துவ தரீக்காக்கள் அன்றும் இன்றும்.. (eBook)

தரீக்காக்களின் வரலாறு என்பது மிக நீண்ட காலம் தொட்டே முஸ்லிம் மக்களின் மனதிலே புரையோடிப் போய் தவறானதொரு கணிப்பில் பவனி வந்து கொண்டிருக்கின்றதென்றால் அது மிகையாகாது. இந்தத் தரீக்காக்களின் சுயரூபம் பற்றி அறிவதற்கு முன் இதன் ஸ்தாபகர்களும் இயக்குனர்களுமான சூஃபிகள் பற்றி – இவர்களது கொள்கை கோற்பாடுகள் பற்றி அறிவது இன்றியமையாததாகும். முழு புத்தகத்தையும் படிக்க கீழே சொடுக்கவும்: Download PDF format eBook 104 Pages

Read More »

[தொடர் 10] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்

மஃரிபத்  (மெஞ்ஞானம் ) المعرفة சூஃபிகளின் கூற்றுப்படி தேவையற்ற சரீஅத் சட்டங்களால் தன்னைத்தானே விலங்கிட்டுக் கொண்ட ஒரு மனிதன் ஒரு சூஃபிக் குருவின் சீடனாகி தரீக்கத் எனும் சேற்றினுள் விழுந்து மூளையையும் சுய சிந்தனையையும் பறிகொடுத்து பின்னர் ஹக்கீக்கத் எனும் மாயையில் வீழ்ந்து புலம்ப ஆரம்பித்ததும்  அளவுக்கதிகம் இறை நினைவில் (!?)  (சூஃபிகளின் இறைவனான ஷைத்தானின் நினைவில் மூழ்கியதால்) ‘பனாஃ’ எனும் நிலை ஏற்படுமாம். இதற்கு இறை நினைவால் மூழ்கி …

Read More »

[தொடர் 9] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்

الحقيقة ஹகீக்கத் (ரகசியம் ) ஹக்கீக்கத் எனப்படுவது சூஃபிகளின் ஷைத்தானிய அடிப்படை விதிகளில் மூன்றாவது இடத்தை வகிக்கின்றது. தன் வழியில் முஃமினாக வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி மனிதன் மார்க்க விளக்கம் பெற ஷைத்தானிய தோழர்களாகிய சூஃபிகளை நாடும் போது முதலில் ஷரீஅத் சட்டங்களை முடிந்தளவு கடைப்பிடித்து முஸ்லிமாக இருந்த அவனை தரீக்கத் எனும் பாதாளக் குழியில் தள்ளி, தம்மைத் தவிர வேறு யார் எது சொன்னாலும் கேட்கக் கூடாது எனும் …

Read More »

[தொடர் 8] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்

தரீக்கத் الطريقة அன்றைய புராதன சூஃபித்துவ வாதிகள் முதல் இன்றுள்ள நவீன சூஃபிகள் உட்பட அனைவரிடமும் புரையோடிப் போயுள்ள ஒரு விஷயம்தான் இந்ததரீக்காவாகும். இதி்ல் பல படித்தரங்கள் உள்ளன. சுருங்கக் கூறின் யதார்த்தத்தை அறிந்து கொள்ள விரும்புகின்றவர் முதலில் ஒரு ஷேக்கிடத்தில் பைஅத் செய்து அவர் சொல்லும் வழியில் நடைபயில்வதை இவர்கள் தரீக்கத் என்றழைக்கின்றனர். அதாவது ஒரு ஆத்மீகப் பயிற்சி பெறும் சீடர் தனது உணர்வுகள், புலன்களையெல்லாம் மரணிக்கச் செய்யுமளவு …

Read More »

[தொடர் 7] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்

சூஃபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் 1) ஷரீஅத் (மார்க்கம்) 2) தரீக்கத் (ஆன்மீகப் பயிற்சி பெறல்) 3) ஹக்கீக்கத் (யதார்த்தத்தை அறிதல்) 4) மஃரிபத் (மெஞ்ஞான முக்தியடைதல்) என இவர்கள் இஸ்லாத்தை நான்காக வகுத்திருப்பதை அறிந்து கொள்ள முடியும். இவை பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

Read More »

[தொடர் 6] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்

சூஃபித்துவத்தின் தோற்றம் இவ்விடத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதாவது அல்லாஹ்வின் பகிரங்க விரோதியான ஷைத்தான் மனித சமூகத்தை நேர்வழியை விட்டும் திசை திருப்பி நரகத்தில் வீழ்த்துவதற்காக இரண்டு விதமான யுக்திகளைக் கையாள்வான். ஒன்று இஸ்லாமியக் கோட்பாடுகள் சட்ட திட்டங்களைக் கடைப்பிடிப்பதில் வெறுப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இஸ்லாத்தை விட்டும் தூரமாக்கி பாவச் செயல்களில் ஈடுபடச் செய்து வழிகெடுத்து விடுவான்.

Read More »

[தொடர் 5] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்

சூஃபித்துவம் என்றால் என்ன? சூஃபித்துவம் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவான வரை விலக்கணத்தை சூஃபித்துவ வாதிகளின் நூல்களில் கூட விரிவாகக் காணமுடியவில்லை. எனினும் அவர்களது கருத்துக்கள் சிந்தனைப் போக்குகளிலிருந்து இவ்வாறு விளங்க முடிகின்றது.

Read More »

[தொடர் 4] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்

இஸ்லாத்தில் மெஞ்ஞானமா? நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் முழு மனித சமு தாயத்துக்குமே நபியாக அனுப்பப்பட்டவர்கள். அவர்களுக்கு அல்லாஹ் மக்கள் நேர்வழி பெறவேண்டும் என்பதற்காக அல்குர் ஆனை அருளினான். நபியவர்களும் உலக மக்கள் அனை வருக்கும் இவ்வுலகில் ஒருமனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் எதிர் நோக்கும் தேவைகள், பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வினை இனிதே கூறிச்சென்றிருக்கின்றார்கள்.

Read More »

[தொடர் 3] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்

உள்ளே செல்லுமுன்.. சூஃபித்துவத் தரீக்காக்கள்பற்றி தமிழக, இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமின்றி அரபுலக முஸ்லிம்களில் கணிசமானோரிடம் கூட இன்று வரைக்கும் சரியான கருத்துக் கண்ணோட்டம் வரவில்லையென்றே சொல்லவேண்டும். காரணம் காலா காலாமாக இவர்களைப்பற்றிய உண்மை அறிமுகம் உலமாக்களாலோ தமிழுலக எழுத்தார்களாலோ அதன் தூய வடிவில் முன்வைக்கப்படவில்லை என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டியுள்ளது.

Read More »

[தொடர் 2] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்

முன்னுரை புகழனைத்தும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும். சாந்தியும் சமாதானமும் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள், குடும்பத்தவர்கள், அவர்களின் வழிநடந்தோர் அனைவர் மீதும் உண்டா கட்டுமாக. ஆமீன். தரீக்காக்களின் வரலாறு என்பது மிக நீண்ட காலம் தொட்டே முஸ்லிம் மக்களின் மனதிலே புரையோடிப் போய் தவறானதொரு கணிப்பில் பவனி வந்து கொண்டிருக்கின்றதென்றால் அது மிகையாகாது. இந்தத் தரீக்காக்களின் சுயரூபம் பற்றி அறிவதற்கு முன் …

Read More »