Featured Posts

ஊடகங்களின் போக்கு

ம்ரானா விஷயத்தில் ஊடகங்கள் காட்டி வரும் அக்கறை சொல்லி மாளாது. ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதைதான். வெரும் வாயைக் கூட மென்று கொண்டிருப்பவர்களுக்கு தேவ்பந்தின் தீர்ப்பு அவலாகக் கிடைக்கும்போது சொல்லவா வேண்டும்.

இது மாதிரி நேரங்களிலெல்லாம் ஊடகங்கள் தன்னை சிறுபான்மையினத் தோழனாக காட்டிக்கொள்ள முயலும். பாதிக்கப்பட்ட முஸ்லிமுக்காக களத்தில் குதிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு குட்டையைக் குழப்ப ஆரம்பித்துவிடும். அதைத்தான் இம்ரானா விஷயத்திலும் செய்து வருகிறது. விட்டில் பூச்சிகளைப்போல் சில முஸ்லிம்கள் அதில் மயங்கிப்போவதும் உண்டு.

தேவ்பந்த் போன்ற பாரம்பரியமிக்க மத்ரஸாக்கள் இன்னமும் கவைக்குதவாத மத்ஹபு சட்டங்களைக் கையில் வைத்துக்கொண்டு தீர்ப்பு சொல்கிறேன் பேர்வழி என்று அவ்வப்போது தப்பாட்டம் ஆடுவது கண்டிக்கத்தக்கது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இந்த விஷயத்தில் தமிழகம் முன்னோடியாக இருப்பது கவனத்திற்குரியது. இந்த மாதிரி தவறான தீர்ப்புகள் கொடுக்கப்படும் நேரங்களில், முஸ்லிம்கள் இதை ஆதரிக்கிறார்கள் என்று ஓலமிடுபவர்களுக்கு சாட்டையடி கொடுப்பது போல் தமிழக முஸ்லிம் அமைப்புகள் ஒருமித்து குரல் கொடுத்திருக்கிறது.

இஸ்லாம் பெண்களின் திருமண விஷயத்தில் முழுக்க முழுக்க சம்பந்தப்பட்ட பெண்ணின் கருத்துக்கே முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே, இம்ரானாவின் விருப்பத்திற்கு மாற்றமாக தேவ்பந்த் கொடுத்த தீர்ப்பை செயல்படுத்தத் தேவையில்லை என்பதை அனைவரும் அறிய முடியும்.

இந்த நிலையில் இம்ரானாவின் விஷயத்தில் இஸ்லாமியச் சட்டங்கள் அநீதி இழைத்து விட்டதைப் போல் காட்டிக்கொண்டு பொது சிவில் சட்டம் வேண்டும் என்று மீண்டும் ஊடகங்கள் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் கோஷமிட ஆரம்பித்திருப்பது வேடிக்கைக்குரியது.

முஸ்லிம்களைப் பற்றிய விவகாரம் என்றாலே ஊடகங்கள் காமாலைக் கண் கொண்டு பார்ப்பதுதான் ஏன் என்று விளங்கவில்லை. இம்ரானா போன்றவர்களின் விஷயங்களில் அளவுக்கதிகமாக மூக்கை நீட்டி பக்கம் பக்கமாக எழுதி தன் மன அரிப்பை நீக்கிக்கொள்கிற பத்திரிக்கைகள் ரூப்கன்வர் போன்ற பெண்களின் விஷயத்தில் இதுவும் ஒரு செய்தி என்ற அளவிலே நின்று விடுவது வியப்பிற்குரியது.

மனுதர்மத்தை உயர்த்திப்பிடிக்கும் காவிச்சிந்தனை ஊடகங்கள் பொது சிவில் சட்டம் கேட்டு கூப்பாடு போடுவதும், அதற்குத் துணையாக ஷபனா ஆஸ்மி போன்ற முஸ்லிம் பெயர் தாங்கிகளைத் தன்னோடு சேர்த்துக் கொள்வதுமான இவர்களின் பொய் முகத்தை நடுநிலையாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள்.

எனவே, சிந்தனைத் தாக்கத்தில் பெரும் பங்காற்றி வரும் செய்தி ஊடகங்கள் தனது நிலையை மாற்றி நடுநிலைக்குத் திரும்பினாலே சமூகத்தில் பெருமளவு பிரச்சினைகள் குறையும்.

6 comments

  1. சுட்டுவிரல்

    //சிந்தனைத் தாக்கத்தில் பெரும் பங்காற்றி வரும் செய்தி ஊடகங்கள் தனது நிலையை மாற்றி நடுநிலைக்குத் திரும்பினாலே சமூகத்தில் பெருமளவு பிரச்சினைகள் குறையும்.//

    உண்மையில்லை என்று யாரும் ஒதுக்க இயலாத வார்த்தைகள்.

  2. //தேவ்பந்த் போன்ற பாரம்பரியமிக்க மத்ரஸாக்கள் இன்னமும் கவைக்குதவாத மத்ஹபு சட்டங்களைக் கையில் வைத்துக்கொண்டு தீர்ப்பு சொல்கிறேன் பேர்வழி என்று அவ்வப்போது தப்பாட்டம் ஆடுவது கண்டிக்கத்தக்கது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
    //

    Since that is traditional Madrasa ..I think, media thought that they(தேவ்பந்த்) are reflecting the words of quran.As the condem came to தேவ்பந்த் from most of the muslims,I hope in future the media or anyone won’t say தேவ்பந்த் words are muslims words.

  3. சுட்டுவிரல்

    //I hope in future the media or anyone won’t say தேவ்பந்த் words are muslims words. //

    Inomeno,

    Anyone can say தேவ்பந்த் words are muslims words, when it reflects Quran and -hadhees only.

  4. Aarokkiyam உள்ளவன்

    நேசகுமார் (inomeno) @!@

    முசுலிம்ஸ் குரானுக்கு எதிரா இருந்தா எதிர்க்க முடியும்னு சொல்றாங்க.பார்ப்பன இந்துக்களால் இதுமாரி சொல்ல முடியாதுன்னு ஒத்துக்குவியா ஓய்?

  5. //Anyone can say தேவ்பந்த் words are muslims words, when it reflects Quran and -hadhees only.
    //-சுட்டுவிரல்

    சுட்டுவிரல்,
    In Nalladiyar blog,some muslim friends are telling to identify actions of Mohamad nabi as ‘Margam’ or not ‘Margam’ through muslim ‘Arringargal’ .

    When those ‘Arringargal’ says something, it is natural to anyone or media to take that as quran or hadees words.

    If they take,then musilim friends are telling that media is not neutral.

    If you really want to be faithful to quran or hadees ,identify those muslim ‘Arringargal’ who is misleading quran words and show them to common world.

    Don’t ask the common man to check what muslim ‘Arringargal’ says is based on quran or not.

  6. சுட்டுவிரல்

    //Don’t ask the common man to check what muslim ‘Arringargal’ says is based on quran or not.//

    Common Man who acts like methavis by showing urgency in their blaming should also show the same interest in checking the reality.

    Moreover, I don’t think Media = common man.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *