இவர்களுடைய பிரச்னை என்ன? மதத் துவேஷக்கருத்துக்களை எழுதுவோரில் ஒரு சிலர் வெளிப்படையாகத் தான் இன்ன இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று கூறிக்கொள்வதுண்டு. (அவ்வியக்கப் பொறுப்பில் இருப்பதால் மறைக்க வழியில்லை என்பதால் கூட இருக்கலாம்). வேறு சிலர், அதை மறைத்தே எழுதுகின்றனர்-அவர்களுக்கு முற்போக்கு என்ற முகமூடி தேவையாக இருக்கிறது. ஆம். முற்போக்கு என்ற பெயரில் சொல்லப்படும் சரக்கு நன்கு விற்பனையாவதை அனைவரும் அறிந்தே உள்ளோம். இவர்களின் எழுத்தை வரிகளுக்கிடையில் படிக்கும் யாரும் இவர்களின் …
Read More »அபூ ஆதில் ஆசாத்
நூல்களால் அறிவை நூற்போம்!
(நேற்று இட்ட பதிவு ஏனோ தென்படவில்லை. அதனால் மீண்டும் இடுகிறேன் — நட்புடன், அபூஆதில்.) நூலகம் என்பது அறிவின் நுழைவாயில் என்று சொன்னால் அது மிகையாகாது. கல்வி எப்படி வாழ்க்கைக்கு வழிகாட்டியோ, அதுபோல் கல்விக்கு நூலகம் ஒரு மிக முக்கிய வழிகாட்டி மையம். நூலகமும், கல்வியும் என்பது தாயும், சேயும் போல. ஒன்றிலிருந்து மற்றொன்று பரிணாமம் எடுக்கிறது. அறிவை வளர்த்துக் கொள்ள முயலும் ஒவ்வொருவருக்கும் நூலகம் ஒரு வரமாகவே இருந்து …
Read More »பெண்ணுரிமைப் பேணுவோம்
சென்ற வாரத்தில் ஒரு நாள் ‘அரப் நியூஸ்’ பத்திரிக்கையை படித்தபோது கண்ணில் பட்ட ஒரு செய்தி நவீன தலைமுறை இளைஞர்களிடம் ஏற்பட்டிருக்கும் தறிகெட்ட தனத்தை பறைசாற்றியது. ரியாத் நகரில் சாலையில் நடந்து கொண்டிருந்த இரு பெண்களை சில இளைஞர்கள் பலாத்காரம் செய்து அதனை தனது கேமரா செல்பேசியில் பதிவு செய்ததாக வந்திருந்த செய்தி நாகரீக மனிதர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இளைஞர்களின் சிந்தனையை இதுபோன்று பாழாக்குவதில் மேற்கத்திய …
Read More »எங்கே அந்த மானுட தர்மம்?
உலகில் மிக அதிகமான கொலைகளைச் செய்தவர் யார் தெரியுமா?அதுவரை உலகில் நிலவி வந்த போர் தர்மங்களையெல்லாம் ஒரே ஒரு “குட்டிப் பையன்”(Little Boy) மூலம் சிதறடித்த வரலாற்று நாயகன்தான் அவர். நாகரிகங்களைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, சவக்காட்டில் சந்தோஷமாக உறங்கிய அதிசய மனிதனும் அவரே. நான் என்ற சொல்லில் மட்டுமல்ல, நாங்கள் என்ற சொல்லிலும் ஆணவத்தைப் பிரசவிக்க முடியும் என்று நிரூபித்த அவர் வேறு யாருமல்ல. வரையரையற்ற நீதி? வழங்கும் …
Read More »பொது? சிவில் சட்டம்
தேசத்தந்தை மஹாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவின் வாரிசுகள், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைப்பெற்ற இம்ரானாவின் சம்பவத்தை மையமாக வைத்து மீண்டும் ஒரு பழைய பல்லவியைப் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கீறல் விழுந்த ரெக்கார்டை மறுபடி Play பண்ண ஆரம்பித்திருக்கிறது தேச விரோத சங்பரிவார் அமைப்பு. எத்தனையோ முறை பதில் கொடுக்கப்பட்ட ஒரு விஷயமாக இருந்தாலும் கூட, மக்களின் மறதியைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் …
Read More »உள்ளத்தை உலுக்கிய கேள்வி…
(பணம் சம்பாதிப்பதை மட்டுமே தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு, வாழ்வின் மென்மையான உணர்வுகளைக் கருகவிட்டுவிட்டு தன் கடைசி நாட்களில் எல்லாமிருந்தும் ஒன்றுமில்லாதவனாக தனிமைப்படுத்தப்படும் அ(ட)ப்பாவிகளுக்கு நினைவுறுத்தலாக…) அது ஒரு கற்பனைக்கதை தான் என்றாலும் கருத்தாழம் மிக்கதொரு கதை. சிட்டுக்குருவி ஒன்று குளிர்காலத்தில் கதகதப்பாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டது. சின்னச்சின்ன குச்சிகளை அதற்கென இளவேனில் காலம் தொட்டே சேகரிக்கத் துவங்கியது. அந்தோ பரிதாபம்! குளிர் காலம் வருமுன்பே குச்சி சேகரிக்கும் …
Read More »ஊடகங்களின் போக்கு
இம்ரானா விஷயத்தில் ஊடகங்கள் காட்டி வரும் அக்கறை சொல்லி மாளாது. ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதைதான். வெரும் வாயைக் கூட மென்று கொண்டிருப்பவர்களுக்கு தேவ்பந்தின் தீர்ப்பு அவலாகக் கிடைக்கும்போது சொல்லவா வேண்டும். இது மாதிரி நேரங்களிலெல்லாம் ஊடகங்கள் தன்னை சிறுபான்மையினத் தோழனாக காட்டிக்கொள்ள முயலும். பாதிக்கப்பட்ட முஸ்லிமுக்காக களத்தில் குதிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு குட்டையைக் குழப்ப ஆரம்பித்துவிடும். அதைத்தான் இம்ரானா விஷயத்திலும் செய்து வருகிறது. விட்டில் பூச்சிகளைப்போல் …
Read More »