Featured Posts

எங்கே அந்த மானுட தர்மம்?

லகில் மிக அதிகமான கொலைகளைச் செய்தவர் யார் தெரியுமா?
அதுவரை உலகில் நிலவி வந்த போர் தர்மங்களையெல்லாம் ஒரே ஒரு “குட்டிப் பையன்”(Little Boy) மூலம் சிதறடித்த வரலாற்று நாயகன்தான் அவர். நாகரிகங்களைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, சவக்காட்டில் சந்தோஷமாக உறங்கிய அதிசய மனிதனும் அவரே. நான் என்ற சொல்லில் மட்டுமல்ல, நாங்கள் என்ற சொல்லிலும் ஆணவத்தைப் பிரசவிக்க முடியும் என்று நிரூபித்த அவர் வேறு யாருமல்ல. வரையரையற்ற நீதி? வழங்கும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரூமன் தான்.

இங்கே, உங்கள் பார்வைக்கு இருவேறு காட்சிகள் வைக்கப்படுகிறது. மானுட தர்மத்திற்கும், மமதைப் பிணிக்குமிடையே உள்ள பாரதூரமான வேறுபாட்டை இக்காட்சிகள் படம்பிடித்துக் காட்டுகிறது.

– அபூ ஆதில் –

இனி காட்சிக்குள்ளே…

“ஜனாதிபதி அவர்களே…! நேற்று இரவு நன்றாகத் தூங்கினீர்களா?” – இது செய்தியாளர்களின் கேள்வி.
“ஆமாம்…! எப்போதையும் விட நேற்று அமைதியாகத் தூங்கினேன். எங்கள் பரிசோதனை வெற்றி பெற்று விட்டது. இந்த உலகத்தில் நாங்கள்தான் இப்போது பலம் வாய்ந்தவர்கள்.” – இப்படி பதில் சொன்னவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரூமன்.
இதற்கு முதல் நாள்தான் ஜப்பான் நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. நாகசாகி, ஹிரோஷிமா எனும் இரு நகரங்களும் வரைபடத்திலேயே இல்லாமல் ஆகிவிட்டன. எப்படிச் செத்தோம் என்று அறியாமலேயே இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போதே கொல்லப்பட்டார்கள்.
எல்லா வகையான போர் தர்மங்களையும், சர்வதேச சட்டங்களையும், மனித நாகரிகங்களையும் மீறி, உலகிற்கு தன் வல்லமையை நிரூபிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நடத்தப்பட்ட கொடூரம் இது…!
அன்று வீசப்பட்ட அணுகுண்டுகளின் கதிர்வீச்சுக்களால் இன்றைக்கும் அந்த மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நுரையீரல் கோளாறுகள், புற்றுநோய், பிறவியிலேயே ஊனம் போன்ற பல நோய்கள் வாட்டி வருகின்றன.
இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றொழித்த பிறகுதான் ஜனாதிபதி நிம்மதியாக உறங்கினாராம்…!

@ @ @ @ @ @

அது ஒரு போர்க்களம். அந்தக் களத்தில் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாகச் செய்தி வந்தது. அந்தச் செய்தியைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்…) அவர்கள் துடித்துப் போய் விட்டார்கள்.

அந்த இடத்துக்கு விரைந்தார். அந்தப் பெண்ணின் உடலைப் பார்த்தார். பிறகு முகம் சிவக்க, தம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் கேட்கிறார்கள். “இவள் போர் செய்யவில்லையே! பிறகு ஏன் இவள் கொலைக்கு ஆளானாள்? “இவ்வாறு கேட்டு, போர் சமயத்திலும் கூட அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.
மனிதத் தன்மைகள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகி விடும் கொடூரப் போர்க்களத்திலும் இஸ்லாம் மானுட நாகரிகத்தைக் கடைப்பிடித்தது. 1400 ஆண்டுகளுக்கு முன்பே அது மிக உயர்வான போர் ஒழுங்கு முறைகளை
வகுத்துத் தந்து விட்டது.
நபிகள் நாயகம் (ஸல்…) அவர்கள் கூறினார்கள்:
* போரில் பங்கு கொள்ளாத வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், பெண்கள் ஆகியோரைக் கொள்ளாதீர்கள்.
* மடங்களில் உள்ள துறவிகளையும், வணக்கத்தலங்களில் இருக்கும் மக்களையும் கொல்லாதீர்கள்.
* நெருப்பால் தண்டனை வழங்குவதற்கு நெருப்பின் அதிபதியைத் தவிர (இறைவனைத் தவிர) வேறு யாருக்கும் உரிமை கிடையாது.
* விளை நிலங்களையும், மக்கள் வாழும் பகுதிகளையும் அழிக்காதீர்கள்.
இப்படிப் பல கட்டளைகள், நெறிமுறைகள்!
இவை எல்லாவற்றையும் விட திருக்குர் ஆனில் ஓர் அருமையான வசனம் உண்டு. மனித உயிர்களை இஸ்லாம் எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை அதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
” நியாயமின்றி ஒருவன் மற்றவனைக் கொலை செய்து விட்டால் அவன் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவன் போலாவான். எவன் ஒருவன் பிறிதொருவனுக்கு வாழ்வு அளிக்கின்றானோ அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன் போலாவான்!”
(திருக்குர் ஆன் – 5:32)
அநியாயமாக மனித இரத்தம் சிந்தப்படுவதை இஸ்லாம் விரும்பவில்லை. ஆனால், தவிர்க்க முடியாத நிலையில் போர் மேகங்கள் சூழுமேயானால் அப்போதும் கூட அப்பாவி மக்கள் கொல்லப்படக் கூடாது என்பதில் இஸ்லாம் உறுதியாக உள்ளது.
ஜிஹாத்-புனிதப்போர் என்றெல்லாம் கூறிக் கொண்டிருப்பவர்களும் சரி, பன்னாட்டுத் தலைவர்களும் சரி – இஸ்லாம் கூறும் இந்த மானுட தர்மத்தைப் பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்…!
நன்றி: சிராஜுல் ஹஸன்.

2 comments

  1. Aarokkiyam உள்ளவன்

    இசுலாம் வாளால்
    பரவியது
    என்பார்கள்
    கையில்
    வேலையும்
    சூலையும்
    வைத்துக்கொண்டு.

    இதுதான் இந்து தர்மம்.

  2. philwarner84577361

    i thought your blog was cool and i think you may like this cool Website. now just Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *