-உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி
ஆண் மைத்துக்களையும் பெண் மையத்துக்களையும் ஜனாஸா தொழுகை நடத்த ஒரே நேரத்தில் கொண்டு வந்தால் முதலில் ஆண் மையத்திற்கு தொழுகை நடத்தி விட்டு பிறகு பெண் மையத்துக்கு தொழுகை நடத்துகின்ற ஒரு காட்சியை சில சந்தர்ப்பங்களில் காணமுடிகிறது.
ஆண் மையத்திற்கும் பெண் மையத்திற்கும் ஒரே நேரத்தில் ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது என்ற எண்ணத்தில் தான் இப்படி செய்கிறார்கள். நபி (ஸல்) அவர்களின் ‘சுன்னா’ பற்றிய சரியான தெளிவு அவர்களுக்கு இல்லாததால் தான் இப்படி செய்கிறார்கள். இது தவறாகும்.
ஆண் மையத்திற்கும் பெண் மையத்திற்கும் ஒரே நேரத்தில் ஒரு ஜமாஆத்தாக இருந்து தொழுகை நடத்தலாம். நடத்தவும் வேண்டும் என்பதே நபிகளாரின் சுன்னாவாகும். அப்படி தொழுகை நடத்தும் போது முதலில் கிப்லாவை நோக்கி பெண் மையத்தையும் அதற்கடுத்து (சிறுவர்களின் ஜனாஸாக்கள் இருந்தால் அவர்களது மையத்துக்களையும்) அதற்கடுத்து ஆண் மையத்தையும் வைக்க வேண்டும். அதற்கடுத்து தொழுகை நடத்தக்கூடிய இமாமும், இமாமுக்கு அடுத்து தொழக் கூடியவர்களும் (மஃமூம்களும்) நிற்க வேண்டும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒன்பது ஜனாஸாக்களக்கும் சேர்த்து ஒரே (ஒரு முறை) தொழுகையாக தொழுவித்தார்கள். (அதில் ஆண், பெண் ஜனாஸாக்கள் இருந்தன). கிப்லாவை நோக்கி பெண் ஜனாஸாக்களையும் அதற்கடுத்து ஆண் ஜனாஸாக்களையும் அதன் பின் இமாமை அடுத்து மக்களையும் ஒரே அணியாக வைத்து (தொழுவித்தார்)கள்.
இன்னுமொரு ஜனாஸா தொழுகையின் போது) அலி (ரலி) அவர்களின் மகளும், உமர் (ரலி) அவர்களுடைய மனைவியுமான உம்மு குல்ஸும் (ரலி) அவர்களுடைய ஜனாஸாவும் ஸைத் என்று அழைக்கப்படும் அவரது மகனுடைய ஜனாஸாவையும் சேர்த்து வைக்கப்பட்டன. அன்றைய தினத்தில் ஜனாஸா தொழுகையை நடத்தும் இமாமாக ஸயீத் பின் அல் ஆஸ் என்பவர் இருந்தார். இப்னு உமர் (ரலி) அபூ ஹுரைரா (ரலி) அபூ ஸயீத் (ரலி) அபூ கதாதா (ரலி) ஆகியோர் அக்கூட்டத்தில் (ஜனாஸா தொழுகையில்) இருந்தனர்.
(தொழுகை நடத்துவதற்கு) இமாமுக்கு முன்னால் சிறுவரின் ஜனாஸாவும் அதற்கு முன்னால் (கிப்லாவை நோக்கி) அவரது தயாரின் ஜனாஸாவும்) வைக்கப்பட்டன. இது எனக்கு வெறுப்பாக தோன்றியது. உடனே நான் இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) அபூ ஸயீத் (ரலி) அபூ கதாதா (ரலி) ஆகியோரை நோக்கி இது என்ன முறை? (ஏன் இப்படி தொழுகை நடத்த வேண்டும்) என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இதுதான் நபிவழி என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: நாபிஃ (ரஹ்) நூல்: நஸாயீ(1977,1978) அபூதாவூத்
very important message this one my tout is clear now al-hamthulillah thank you dear brother and i expecting more information like this