ஹஜ் “கலைக்களஞ்சியம்” வெளியீடு திட்டத்தை சவூதி இளவரசர் சல்மான் இப்னு அப்துல் அஜீஸ் அவர்கள் இன்று (மார்ச் 29, 2008) தொடங்கி வைக்கிறார். இக்கலைக்களஞ்சியம் கடந்த வருடத்தின் ஹஜ் செய்திகளோடு புனித கஃபா மற்றும் மஸ்ஜித் நபவி புனிதப் பள்ளிகள் பற்றிய விபரங்களை கொண்டிருக்கும்.
இதன்மூலம் சமய, நாகரீகம் மற்றும் பொருளாதார விஷயங்களை எடுத்துச் சொல்ல முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி இஸ்லாம் தோன்றிய நாட்கள் முதல் இன்று வரை உள்ள இடங்கள், சூழல்கள், நகரங்கள் மற்றும் புனிதப் பயணத்தின் வழிகள் போன்றவை ஆவணப்படுத்தப்படும்.
இக்கலைக்களஞ்சியம் புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் வரைப்படங்களை கொண்டிருக்கும். இத்துடன் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள வரலாற்றாசிரியர்களின் ஆராய்ச்சி குறிப்புகளும், வரலாற்று ஆவணங்களும் சேர்க்கப்பட்டு புனிதப் பயணிகளின் அனுபவ குறிப்புகளும் இணைக்கப்படும் என்று தெரிகிறது.
i need umrah guide for tamil langue
https://islamkalvi.com/fiqh/haj/index.htm
https://islamkalvi.com/fiqh/haj/haj_umra_ebook.pdf