பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-6
முஸ்லிம்களின் வாழ்க்கையில் பித்அத்தின் தாக்கமும், அவைகளுக்குரிய காரணங்களும்
இதன் கீழ் இரண்டு விடயங்கள் ஆய்வு செய்யப்படும்:
முதலாவது: பித்அத்துகள் தோன்ற ஆரம்பித்த காலம்:
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவது போன்று: ‘வணக்க வழிபாடுகளில், கத்ருடைய விடயத்தில், அறிவு சார்ந்த விடயங்களில், மற்றும் ஏனைய விடயங்களில் பித்அத்துகள் தாக்கம் செலுத்த ஆரம்பித்தது குலபாஉர் ராஷிதீன்களின் ஆட்சியின் இறுதிப் பகுதியில் தான். நபி (ஸல்) அவர்களின் கூற்று இங்கு கவனிக்கத்தக்கதாகும். ‘எனக்குப் பின் வாழக்கூடியவர்கள் பல கருத்து முரண்பாடுகளைக் காண்பார்கள், எனது சுன்னாவை பற்றிப்பிடித்துக் கொள்ளுமாறும், எனக்குப் பின்னர் நேர்வழி சென்ற கலீபாக்களின் சுன்னாவை பற்றிப்பிடிக்குமாறும் உங்களுக்கு நான் உபதேசம் செய்து கொள்கின்றேன்.’ (மஜ்மூஉல் பதாவா: 354- 10 ).
முதலாவது உருவாகிய பித்அத்: கதரிய்யா, முர்ஜிஆ, ஷீயா, கவாரிஜ் இவைகள் இரண்டாவது நூற்றாண்டிலே ஸஹாபாக்கள் உயிருடன் இருக்கும் போதே தோன்றிவிட்டன. இவைகளை ஸஹாபாக்கள் கடுமையாக நிராகரித்தனர். அதற்குப் பின் முஃதஸிலாக்களின் பித்அத்துகள் தோன்றின. முஸ்லிம் உம்மாவில் குழப்பங்கள் தோன்ற ஆரம்பித்தன, பல்வேறு பட்ட சிந்தனைகளும் தோன்ற ஆரம்பித்தன. பித்அத்துக்கு, மனோ இச்சைக்கு அடிபணியும் ஒரு மோசமான நிலை தோன்றியது. ஸுபித்துவத்தின் பித்அத்துகள் உருவாகின, சிறப்பான நூற்றாண்டுகளுக்குப் பின் கப்ருகளின் மீது கட்டிடம் எழுப்பும் பித்அத்துகள் உருவாகின. காலப்போக்கில் வித விதமான பித்அத்துகள் தோன்ற ஆரம்பித்தன.
தொடரும்..