– இம்தியாஸ் யூசுப் ஸலபி
நபி(ஸல்) அவர்கள் செய்து காட்டிய எந்தவொரு அமலையும் அப்படியே பின்பற்றுகின்ற பழக்கத்தினையும் தடைசெய்த ஒவ் வொரு விடயத்தை விட்டு ஒதுங்கிக் கொள்கின்ற செயற் பாட்டினையும் சஹாபாக்கள் மேற்கொண்டார்கள். இறைத்தூ தரின் எந்தவொரு அசைவும் நன்மை பயக்கக் கூடியதே என்பதை உளப்பூர்வமாக உணர்ந்திருந்ததே அதற்கான காரணமாகும்.
உமர்(ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடும் போது நிச்சயமாக நீ எப்பயனும் இடையூரும் தராத கல்தான் என்பதை நான் அறிவேன். நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்த மிட்டதைப் பார்த்திராது விட்டால் நான் உன்னை முத்தமிட மாட்டேன் என கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆபிஸ் இப்னு ரபீஆ (ரலி) நூல்: புகாரி 1610, முஸ்லிம்-1270)
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் சஹாபாக்களுக்கு தொழுகை நடத்திக் கொண்டிருந்தாhர்கள். அப்போது தங்களுடைய இரு பாதணிகளை கழற்றி வலது பக்கத்தில் வைத்தார்கள். இதனை அவதானித்த சஹாபாக்களும் தங்களுடைய பாதணிகளை கழற்றி வைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் ஷஷநீங்கள் எதற்காக பாதணிகளை கழற்றினீர்கள்” என கேட்ட போது ஷஷநீங்கள் பாதணிகளை கழற்றுவதைக் கண்டோம் எனவே நாங்களும் கழற்றினோம் என சஹாபாக்கள் கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக ஜிப்ரீல்(அலை) என்னிடம் வந்து அவ்விரண்டு பாதணிகளிலும் அசுத்தம் இருப்பதாக கூறினார். அதன் நிமித்தமே அவைகளை கழற்றினேன் என கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) நூல்: அபூதாவுத் 650)
நபி(ஸல்) அவர்கள் தங்க மோதிரமென்றை அணிந்தார்கள். சஹாபாக்களும் தங்க மோதிரங்களை அணியலானார்கள். பிறகு நபியவர்கள் தங்களது தங்க மோதிரத்தை கழற்றி எறிந்து விட்டு இதன் பின் அதனை அணிய மாட்டேன் என கூறினார்கள். உடனே சஹாபாக்களும் தங்களது மோதிரங்களை கழற்றியெ றிந்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), நூல்: புகாரி-5866)
ஒரு தடவை ஒரு மனிதனின் கையில் தங்க மோதிரமொன் றைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அதனை கழற்றி எறிந்து விட்டு ஷஷஉங்களில் ஒருவர்(நரக) நெருப்பின் கங்குகளை அடைய விரும்பி னால் இதைத் தன் கையில் அணிந்து கொள்ளட்டும்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் சென்றதற்குப் பின் அந்த மனிதரிடம் உம் மோதிரத்தை எடுத்துக்கொள். (வேறு வழிகளில்) பயன்படட்டும்” என்று கூறப்பட்டது. இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்கள் கழற்றி வீசியதை ஒரு போதும் எடுக்க மாட்டேன் என்று கூறினார். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம்-2090)
நபி(ஸல்) அவர்களின் சுன்னாவுக்கு மாற்றமான செயற்பாடு களை மக்களிடம் கண்டால் அதற்காக கோபம் கொள்ளக்கூடிய வர்களாகவும் உண்மையை முன்வைத்து தெளிவுப்படுத்தக் கூடியவர்களாகவும் சஹாபாக்கள் திகழ்ந்தார்கள்.
உம்ராவின்போது ஸபா மர்வாவுக்கிடையில் ஸஃயு செய்யமுன் மனைவியுடன் உறவு கொள்ளலாமா” என்று நாங்கள் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர்கள் ஷஷநபி(ஸல்) அவர்கள் கஃபாவுக்கு வந்து ஏழு முறை தவாப் செய்து பிறகு மகாமு இப்றாஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத் தொழுது விட்டு ஸபா மர்வாவுக்கிடையில் ஏழுமுறை ஸஃயு செய்வார்கள் என்று கூறிய பின் ஷஷஉங்களில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் நினைவுகூருவோருக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கின்றது. (33:21) என்ற வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள். (அதாவது உம்ரா முடியும் வரை மனைவியுடன் உறவுகொள்ள கூடாது என்பது நபிகளாரின் வழிமுறை என்பதை தெளிவுப்படுத்தினார் கள்.) அறிவிப்பவர்: அம்ருப்னு தீனார் (ரஹ்) நூல்: புகாரி 1645)
நாங்கள் இப்னு உமர்(ரலி) அவர்களுடன் பிரயாணத்தில் இருந் தோம். எங்களுக்கு அவர்கள் (லுஹர்) தொழுகை(யை சுருக்கி இரண்டு ரக்அத்கள்) தொழுவித்தார்கள். தொழுகை முடிந்ததும் அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது அவர்கள் திரும்பிப் பார்த் தார்கள் சில மக்கள் தொழுது கொண்டிருந்தார்கள். இவர்கள் என்ன செய்கிறார்கள் என என்னிடம் கேட்டார்கள். அவர்கள் சுன்னத்து தொழுது கொண்டிருக்கிறார்கள் என்றேன். பயணத் தில் சுன்னத்து தொழுகை இருக்குமானால் கடமையான தொழு கையை சுருக்கி தொழாமல் பூரணமாக தொழுது இருப்பேன். எனது சகோதரனின் மகனே! நான் அல்லாஹ்வின் தூதருடன் பயணித்துள்ளேன். அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்யும் வரை பயணத்தில் இரண்டு ரக்அத்களை விட அதிகமாக தொழுத தில்லை. அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) மற்றும் உஸ்மான (ரலி) ஆகியோருடனும் பயணித்துள்ளேன். அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்யும்வரை அவர்களும் பயணத்தில் இரண்டு ரக்அத்களுக்கு அதிகமாக தொழுததில்லை என்று இப்னு உமர் (ரலி) கூறிவிட்டு உங்களில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் நினைவுகூருவோருக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கின்றது. (33:21) என்ற வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள். (அறிவிப்பவர்: ஆஸிம் இப்னு உமர்(ரலி), நூல்: இப்னு மாஜா 1071)
அப்துல்லாஹ் இப்னு முகப்பல்(ரலி) அவர்களின் உறவினர் ஒருவர் கல்லைச் சுண்டிப் போட்டார். அதைத் தடுத்த இப்னு முகப்பல் (ரலி) கல்லைச் சுண்டி விளையாடுவதை நபி(ஸல்) அவர் கள் தடைசெய்தார்கள். மேலும் இது வேட்டையாடுவதற்கும் உதவாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று கூறி னார். அந்த உறவினர் மீண்டும் கல்லை சுண்டிப் போட்டார். ஷஷநபி(ஸல்) இதை விட்டும் தடுத்துள்ளார்கள் என்று உன்னிடம் கூறினேன். அதன் பின்பும் கற்களை சுண்டி விளையாடுகிறாயே. இனி ஒருபோதும் உன்னுடன் பேச மாட்டேன் என்று இப்னு முகப்பல் (ரலி) கூறினார்கள். (நூல்: புகாரி 5479, முஸ்லிம் 1954)
மழையினால் சகதி ஏற்பட்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ஜும்ஆ பிரசங்கம் செய்தார்கள். பாங்கு சொல்பவர் ஷஹய்யஅலஸ்ஸலாஹ்| (தொழுகைக்கு விரைந்து வாருங்கள்) என்று சொல்ல ஆரம்பித்தபோது (அஸ்ஸலாஹ் பிர்ரிஹால்) உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று மக்களுக்கு அறிவிப்புச் செய்யுமாறு கட்டளையிட்டார்கள். அப் போது அங்கிருந்த சிலர் சிலரை ஆச்சரியமாகப் பார்த்தனர். இந்த பாங்கு சொல்பவரை விடவும் சிறந்த வரான நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ தொழுகை கட்டாயமானதாக இருந்தும் கூட அவ்வாறு செய்திருக்கிறார்கள். (அதாவது வீடுகளில் தொழுது கொள்ளுமாறு அறிவிப்புச் செய்திருக்கிறார்கள்) என்றார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் (ரழி), நூல்: புகாரி,618, முஸ்லிம்-1244).
அபூமூஸா அல்அஷ்அரி(ரலி) அவர்கள் உமர்(ரலி)அவர்களை சந்திப்பதற்காக வந்து வீட்டுவாசலில் நின்று ஸலாம் கூறி உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்டார்கள். (வேலை நிமித்தமாக உள்ளே இருந்த) உமர்(ரலி) அவர்களிடமிருந்து பதில் வரவில்லை. மறுபடியும் ஸலாம் கூறி உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்டார்கள். பதில் கிடைக்கவில்லை. மூன்றாவது முறையாகவும் ஸலாம் கூறி உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்டார்கள். அப்போதும் பதில் கிடைக்கவில்லை. அபூமூஸா (ரலி) அவர்கள் திரும்பி விட்டார்கள். அனுமதி கேட்டவர் எங்கே என்று உமர்(ரலி) அவர்கள் காவலாளியிடம் கேட்டபோது அவர் திரும்பிச் சென்று விட்டார் என கூறினார். அவரை அழைத்து வாருங்கள் என கூற அபூமூஸா அல்அஷ்அரி (ரலி) அவர்கள் அழைத்து வரப்பட்டார் கள். நீங்கள் ஏன் இவ்வாறு நடந்து கொண்டீர்கள் என உமர் (ரலி) அவர்கள் கேட்டபோது, அதுதான் சுன்னா (நபிகளார் கூறிய வழிமுறை) என அபூமூஸா (ரலி) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் கூறிய இச்செய்திக்கு ஆதாரத்தை கொண்டு வாருங்கள். இல்லையேல் உங்களை தண்டிப்பேன் என உமர்(ரலி) கூறினார்கள்.
அபூமூஸா அல்அஷ்அரி (ரலி) அவர்கள் அன்சாரின்கள் குழுமியி ருந்த கூட்டத்திடம் வந்து அன்சாரின்களே! நீங்கள் மனிதர்களில் நபி(ஸல்) அவர்களின் ஹதீஸை நன் கறிந்தவர்களில்லையா? ஷஷஅனுமதி கோரல் மூன்று முறைதான். அனுமதி தரப்பட்டால் உள்ளே நுழையுங்கள் இல்லையேல் திரும்பி விடுங்கள்” என நபி(ஸல்) அவர்கள் கூறியதில்லையா? என்று கேட்டார்கள். அக் கூட்டத்திலிருந்த நான் என் தலையை உயர்த்தி உங்களை அத்தண்டனையிலிருந்து விடுவிக்கிறேன் என கூறிவிட்டு உமர் (ரலி) அவர்களிடம் வந்து நபி(ஸல்) அவர்கள் கூறிய செய்தியை (ஹதீஸை) எத்தி வைத்தேன் என அபூஸயீதுல் குத்ரி (ரலி) அவர்கள் கூறினார்கள். இச்செய்தியைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் கட்டளைகளில் இது எனக்கு தெரியாமல் போய்விட்டதே! கடை வீதிகளில் வியாபாரம் செய்து வந்தது என் கவனத்தைத் திசை திருப்பி விட்டது” என்று உமர் (ரலி) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரி(ரலி), நூல்: திர்மிதி-2690, புகாரி-7353)
கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் அடித்து குறை பிரசவத்தை ஏற்படுத்தச் செய்த குற்றத்திற்கான பரிகாரம் என்ன என்பதைக் குறித்து உங்களில் எவரும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து ஏதும் (தீர்ப்பு) கேட்டுள்ளீர்களா? என்று உமர்(ரலி) அவர்கள் வினவி னார்கள். நான் கேட்டுள்ளேன்’ என்று கூறினேன். அது என்ன என்று உமர்(ரலி) கேட்டார்கள். ஷஷஅந்த சிசுவுக்காக ஓர் அடிமை யை அல்லது ஓர் அடிமைப் பெண்ணை (இழப்பீடாக) வழங்கிட வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன் என்றேன். உடனே உமர்(ரலி) அவர்கள் நீங்கள் சொன்னதற்கு ஒரு சாட்சியை கொண்டுவராத வரை உங்கள் பொறுப்பிலிருந்து தப்ப முடியாது என்றார்கள்.
உடனே நான் (சாட்சியை கொண்டு வருவதற்காக) வெளியில் சென்றேன். முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி) அவர்களை கண்டு அவர்களை அழைத்துக் கொண்டு உமர்(ரலி) இடம் வந்தேன். அந்த சிசுவுக்காக ஓர் அடிமையை அல்லது ஓர் அடிமைப் பெண்ணை (இழப்பீடாக) வழங்கிட வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் சொல்ல நானும் கேட்டேன் என்று அவர் சாட்சி சொன்னார். (அறிவிப்பவர்: முகீரா பின் ஷூஅபா(ரலி), நூல்: புகாரி 7317)
அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்(ரலி) அவர்கள் (நாங்கள் இருந்த இடத்தின் வழியாக) எங்களை கடந்து ஹஜ்ஜூக்கு சென்றார்கள். அப்போது அவர்கள் (பின்வருமாறு) சொல்ல கேட்டேன்.
அல்லாஹ் உங்களுக்கு கல்வியை வழங்கிய பின் அதை ஒரேயடியாகப் பறித்துக் கொள்ளமாட்டான். மாறாக கல்விமான் களை அவர்களது கல்வியுடன் கைப்பற்றிக் கொள்வதன் மூலம் அவர்களிடமிருந்து அதை பறித்துக் கொள்வான். பின்னர் அறி வீனர்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களிடம் மார்க்கத் தீர்ப்பு கோரப்படும். அவர்கள் தங்கள் சொந்த கருத்துப் படி தீர்ப்பளித்து மக்களை வழிகெடுத்து தாமும் வழிகெட்டுப் போவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன் என்று அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்(ரலி) கூறினார்கள்.
பிறகு நான் இந்த ஹதீஸை நபிகளாரின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதன் பின் (ஓர் ஆண்டிலும்) அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்(ரலி) அவர்கள் ஹஜ் செய்தார் கள். (அப்போது) ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் என் சகோதரியின் மகனே! அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்(ரலி) இடம் சென்று அவரிடமிருந்து முன்பு நீ கேட்ட அந்த ஹதீஸை எனக்காக அவரிடம் மீண்டும் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள் முன்பு எனக்கு அறிவித்தவாறே இப்போதும் எனக்கு அறிவித்தார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். அவர்கள் வியப்படைந்து அல்லாஹ்வின் மீது ஆணையாக! அப்துல்லாஹ் பின் அம்ரு அவர்கள் நன்றாகவே நினைவில் வைத்திருக்கிறார் என்றார்கள். (அறிவிப்பவர்: உர்வா பின் சுபைர்(ரஹ்), நூல்: புகாரி 7307)
சுன்னாவை உரிய முறைப்படி (ஆதாரத்துடன்) பேசுவதிலும் படிப்பதிலும் அவைகளை மீட்டுவதிலும் சஹாபாக்கள் உரிய கவனம் செலுத்திய முறையும் அற்புதமானது.
தொடரும்.. இன்ஷாஅல்லாஹ்