– இப்னு ஹவ்வா
ஹலால் என்பது எதிரிகளின் இலக்கு அல்ல. Nolimit நிறுவனம் துணியுடன் சம்மந்தப் பட்டது. கதுரட்ட நிறுவனம் குடையுடன் சம்மந்தப்பட்டது. இவற்றுக்கு இவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது முஸ்லிம்களது பொருளாதார முதுகெழும்பை முறிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவேயாகும்.
நாம் விதியை நம்புகிறோம். அல்லாஹ் எமக்கென விதித்ததை யாராலும் தட்டிப் பறித்துவிட முடியாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தொழுகையின் பின்பும் நாம் ஓதும் துஆ இதைத்தான் நமக்குக் கற்றுத் தருகிறது.
اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ
தடுத்தலைக் கொடுப்பவன் இல்லை. எந்த மதிப்புடையவனும் உன்னிடம் எந்த பயனுமளிக்க
முடியாது என நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும்
கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். (புகாரி 844)
எனவே அவர்கள் எமது கடைகளில் பொருள் வாங்குவதை நிறுத்தினாலும் நமக்கென அல்லாஹ் விதித்தது நமக்குக் கிடைத்தே தீரும் என்ற அசையாத நம்பிக்கை நம்மிடம் இருக்க வேண்டும்
எமது பொருளாதாரத்தை நசுக்குவது என்ற அவர்களது சதி வலையை ஹலால் மூலம் எப்படி முறியடிக்கலாம் என்பது குறிக்கு அடுக்கு நோக்குவோம்.
முஸ்லிம்களுக்கு மட்டுமே இனி நாம் ஹலால் சான்றிதல் வழங்குவோம். முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஹலால் சான்றிதல் வழங்குவதென்றால் அரசே எம்மிடம் கோரிக்கை வைத்து அதன் மூலம் ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் அதை அரசு பொறுப்பெடுப்பதாக உத்திரவாதம் தந்தால் மட்டுமே அது குறித்து கவனம் எடுக்கப்படும் என ஜம்யிய்யதுல் உலமா அறிக்கை விட வேண்டும். அதன் பின் குறைந்தது 3 வருடங்களுக்காவது முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஹலால் சான்றிதல் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். அந்த இடைப் பட்ட காலத்தில் ஹலால் குறித்த தெளிவுகளை ஊடகங்கள் வாயிலாக சிங்கள மக்களுக்குப் புரியவைக்க முயற்சி எடுக்கப் படவேண்டும்.
ஹலால் சான்றிதலால் அதிக இலாபம் பெறுவது உற்பத்தியாளர்களேயாகும். உதாரணமாக வெண்டோல் நிறுவனம் ஹலால் சான்றிதலுக்காக 9,000 ருபாவையே ஜ.உலமாவுக்கு செலுத்துகிறது. ஹலால் சான்றிதல் இல்லாமையால் தனக்கு ஒன்றறைக் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இன்னிலை தொடர்ந்தால் தனது ஊளியர்களில் 200 பேர் வரை தொழிலை இழக்க வேண்டி ஏற்படலாம் என்று அறிவித்துள்ளது. எனவே 9,000 ஆயிரத்தைப் பெற்று இந்நாட்டு நிறுவனத்திற்கு 15,000,000 ரூபா இலாபத்தையும் 200 பேருக்கு வேளை வாய்பையும் நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம். இதை நாட்டு மக்கள் அனைவரும் புரிந்து கொண்டு ஹலால் சான்றிதல் வழங்குங்கள் என எம்மிடம் மண்டியிடும் நிலையை நாம் ஏற்படுத்த முடியும்.
முஸ்லிம்களது உற்பத்திகள் ஹலால் சான்றிதலுடன் விற்கப்படும் போது முஸ்லிம் அல்லாதவர்களின் உற்பத்திகள் சான்றிதல் இல்லாமல் விக்கப்படும். முஸ்லிம் வியாபாரிகள் பாரபட்சம் இல்லாமல் ஹலால் சான்றிதல் உள்ள, இல்லாத இரண்டு உற்பத்திகளையும் விற்க வேண்டும். சிங்கள உற்பத்தியாளர்களைப் பாதிப்படையச் செய்வது எமது நோக்கம் அல்ல. எனவே அவர்களது உற்பத்திகளையும் நமது வியாபாரிகள் விற்க வேண்டும். முஸ்லிமின் கடைக்குப் போனால் ஹலால் உள்ள பொருளும் எடுக்கலாம் இல்லாத பொருளும் எடுக்கலாம் என்ற எண்ணத்தைப் பெரும் பான்மை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
ஹலால் சான்றிதல் உள்ள பொருற்களை மட்டும் வாங்குமாறு முஸ்லிம்களுக்கு அறிவுருத்த வேண்டும். சிறிது காலம் வரை சிங்கள மக்களில் அதிகமானவர்கள் ஹலால் உற்பத்திகளைப் புறக்கணிப்பார்கள் இதனால் எமக்கு சிறிது இலப்பு ஏற்படும். ஆனால் ஏற்றுமதி பாதிக்கப்படுவதால் முஸ்லிம் அல்லாதவர்கள் அதிக பாதிப்பை அடைவர். இந்த சந்தர்ப்பத்தில் அவர்களது ஏற்றமதியில் ஏற்பட்ட வெற்றிடத்தை நாம் நிறப்ப வேண்டும். உதாரணமாக மன்சியின் இடத்தை மாம் பிடித்துக் கொள்ளலாம். உள் நாட்டில் ஏற்படும் இலப்பை விட அதி இலாபத்தை வெளிநாட்டு ஏற்றுமதியூடாகப் பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் பொருள் வாங்காவிட்டால் முஸ்லிம்களது பொருளாதாரம் உடைந்துவிடும் என்ற அவர்களது எண்ணத்தையும் அழிக்கலாம்.
இந்நிலையில் முஸ்லிம்கள் உற்பத்தி துறையில் கவனம் செலுத்தி அதிக உற்பத்திகள் செய்ய வேண்டும். இதில் தெரியாத துறைகளைக் கற்பதற்காக மாணவர்களை ஏற்பாடு செய்ய வேண்டும். எமது உற்பத்திகள் அதிகரித்து ஏற்றுமதியிலும் இடம் பிடித்துவிட்டால் நாம் அதிக இலாபமீட்டலாம், அதிக தொழில் வாய்புக்கள் உருவாகும். இதன் மூலம் வேளையற்ற இளைஞர் யுவதிகள் விதவைகள் பலரும் பயன் பெறுவர்.
இதே வேலை வெளிநாட்டு ஏற்றுமதி தடைப்படுவதால் ஹலால் சான்றிதல் பெறாதவர்கள் உற்பத்தியைக் குறைக்க நேரிடும். அத்துடன் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க நேரிடும். மொத்த உற்பத்தி குறையும் போது விற்பனைப் பொருளின் விலையும் அதிகரிக்கும்
இதே வேளை வெளிநாட்டு ஏற்றுமதி மூலம் ஹலால் சான்றிதல் பெற்ற பொருற்கள் அதிக இலாபத்தைப் பெறுவதால் பொருற்களைக் குறைந்த விளைக்குச் சந்தைப்படுத்த முடியும். ஹலால் சான்றிதல் இல்லாத பொருள் 60 ரூபாவுக்கு விற்கப் படும் போது அந்து பொருளை நாம் உற்பத்தி செய்து 50 ரூபாவுக்கு வழங்க முடிந்தால் மக்கள் பத்து ரூபா இலாபத்தைத் தான் பார்ப்பார்கள். ஹலால் தாருங்கள் எனக் கேட்டு வாங்குவார்கள்.
சிங்கள மக்கள் ஹலாலின் நன்மையை உணர்ந்து அல்லது சிங்கள உற்பத்தியாளர்கள் அரசுக்கும் இனவாதிகளுக்கும் உணர்த்தி அரசினதும் பெரும் பான்மை சமூகத்தின் அங்கிகாரத்துடனும் நாம் ஹலால் சான்றிதல் முஸ்லிம் அல்லாதோருக்கு வழங்கும் போது வாங்கி விற்கும் சமூகமாக மற்றுமின்றி உற்பத்தியாளாகளாகவும் நாம் மாறியிருப்போம். அத்துடன் எமது உற்பத்திகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நள்ள சந்தை வாய்பையும் பெற்றிருக்கும். சிங்கள சமூகத்தின் பொருளாதாரத்திற்குக் கேடு விளைவித்தவர்கள் என்பதால் சிங்கள சமூகத்தால் இந்த இனவாதிகள் புறக்கணிக்கப்படுவார்கள். ஒரு 50 வருடத்திற்கு ஹலால் வேண்டாம் முஸ்லிம்கடையில் பொருள் வாங்காதே இன்ற இனவாத விஷக் கருத்தை அவர்களால் சிங்கள சமூகத்துக்கு மத்தியில் விற்க முடியாமல் போகும்.
(இந்த கருத்துக்களை சரி காண்பவர்கள் மற்றவர்களுக்கும் பரப்புவதுடன். தமது தலைமைகளுடன் கதைத்து இந்த நிலையை உருவாக்க உழைக்கவும்)
your aideyases very good ahlla gude your
ஸலாம்,நெருக்கடி மிகுந்த ஒரு முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். மக்களிடையே இணக்கத்தையும் அமைதியையும் உறுதி செய்யும் முக்கியமான கடமை நம் ஒவ்வொருவர் மீதும் உள்ளது. முஹம்மதை அழகிய முன்மாதிரியாக ஏற்றுகொண்ட மக்கள் இத்தருணத்தில் அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்திட வேண்டும். அத்துடன் ஏகத்துவமும் ஹலாலும் எவ்வளவு அழகானதும் கடமையானதும் என்பதையும் மக்களுக்கு விளக்கமாகவும் பொறுமையாகவும் நளினமாகவும் போதித்திட வேண்டும். சகிப்புத்தன்மையும் விட்டுகொடுத்தலும் தொழுகையும் இக்காலகட்டத்தில் அதிகமாக நம்மிடையே வேண்டும். வியாபாரிகள் நுட்பமாகவும் தொலைநோக்கு சிந்தனையுடனும் நடந்து கொள்ளவேண்டும்…இத்தகைய அடிப்படைகளுக்கு ஏற்ப நமது எழுத்தும் சொல்லும் அமைந்திட வேண்டும்..கட்டுரை ஆசிரியர் இக்கருத்துக்களுக்கு ஏற்ப கட்டுரையை மாற்றியமைத்திட வேண்டும். கட்டுரை இஸ்லாமியர்கள் ஹலாலை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை அடிப்படையில் விளக்குவதாகவும; இலங்கை முஸ்லிம்கள் வரலாறை விளக்குவதாகவும் அமைய வேண்டும்…கட்டுரை ஆசிரியர் கட்டுரையை மறுவுருவாக்கம் செய்வது அவசியமானது; அழகானது.
மாஷா அல்லாஹ் இக்கட்டுறையில் ஆழமான கருத்துக்கள் இடம் பெற்று உள்ளன .என் அன்பின் எழுத்தாளர் அவர்களே ! இக்கட்டுறைய எமது நாட்டில் வெளிவரும் நாடெடொகலில் பிரசுரிக்குமாறு மிக்கவும் தாழ்மை உடன் வேண்டிக்கொள்கிறேன் .
‘Halal Saandrithal Valangungal’ Ena MANDIYIDUM Nilaiyai Yerppaduttha Mudiyum’
Itha Vaakkiyatthil ‘Mandiyidum Nilaiyai’ Endra Vaartthai Sariyaanathaa Nirvaahi Avarhaley? Thavaraaha Kettirunthaal Mannikkavum
i agree with your article
மாஷா அல்லாஹ் இக்கட்டுறையில் ஆழமான கருத்துக்கள் இடம் பெற்று உள்ளன .என் அன்பின் எழுத்தாளர் அவர்களே ! இக்கட்டுறைய எமது நாட்டில் வெளிவரும் செய்தித்தாள்களில் பிரசுரிக்குமாறு மிக்கவும் தாழ்மை உடன் வேண்டிக்கொள்கிறேன் .
“முஸ்லிம்கள் இனவாதிகளின் பிரச்சாரங்களுக்கு பலியாகாமல் அவசரப் படாமல் நிதானமாக பொறுமையுடன் காரியமாற்ற வேண்டும். ஈமானிய உணர்வுகளை மேம்படுத்திக் கொண்டு, அல்லாஹ்விடம் கையேந்தி பாவமன்னிப்புக் கோரி, பிரார்த்திக்கவும் வேண்டும். எங்களது நல்லொழுக்கமும் நம்பிக்கையும் நாணயமும்தான் எமக்கு எதிராக வரக் கூடிய பிரச்சாரங்களை முறியடிக்கக் கூடியதாகவும் பெரும் பான்மை மக்களின் நல்லுள்ளங்களை வெற்றிகொள்ளக் கூடியதாகவும் இருக்கும்.
இனிவரும் காலங்களில் சிங்களப் பாடசாலைகளில் எமது பிள்ளைகளை அனுமதிப் பதும் பிரச்சினைகளாகலாம். அவர்களுடைய கலாசாரங்களுக்கு உட்படுத்தப்படுவதும் பிரச்சினைகளாகலாம். எனவே முஸ்லிம் பாடசாலைகளில் முன்னேற்றங்களில் நாம் கவனம் செலுத்துவதோடு தனியார் வகுப்புக்கள் முஸ்லிம் பகுதிகளில நடாத்துவதற்கான வழிகளைப்பற்றி ஆராயவேண்டும்.
எமது வாலிபர்களை (ஆண்-பெண்) பண் படுத்தும் வழிகளை சிந்திக்க வேண்டும். முஸ்லிம் பெண்கள் அத்தியவசியமன்றி கடைகளுக்கு அல்லது சந்தைகளுக்கு போவதையும் தவிர்த்துக் கொள்ளவேண்டும். ஊர் மட்டங்களிலுள்ள பள்ளிவாசல் நிர்வாகி கள் மற்றும் ஜமாஅத்களுக்கிடையில் சமூக நலன் கருதி ஒன்றுபட்டு பொது விடயங்களில் செயலாற்ற வேண்டும். எங்களது குத்பா மிம்பர்களை ஆக்கபூர்வமானதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக முஸ்லிம் வியாபாரிகள் அல்லாஹ்வுக்குப் பயந்து நீதமாகவும் அன்பாகவும் நடந்து கொள்வதுடன், குறைந்தளவுக்கேனும் (நட்டம் போகாத வகையில்) நல்ல பொருட்களை விற்பனை செய்து, எம்மை விட்டும் கைநழுவும் வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.”