இன்றைய கால கட்டத்தில் முஸ்லிம்களாகிய நாம் எத்தனையோ நபர்களின் சரித்திர குறிப்புக்களை விலாவாரியாக தெரிந்து வைத்திருக்கின்றோம். உதாரணமாக கால்பந்து, கிரிகெட் அதேபோல் டென்னீஸ் என்று விளையாட்டுக்கள் மட்டுமின்றி அரசியால்வாதிகள், பொழுதுபோக்குவாதிகள் ஆகியோரைப்பற்றிய செய்திகளை கூறலாம்.
ஆனால் இம்மைக்கும் மறுமைக்கு வெற்றி வழிக்காட்டிச் சென்ற அல்லாஹ்-வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை குறிப்பை எந்த அளவிற்க்கு நாம் தெரிந்து அதை மனதில் பாதுகாத்து வைத்திருக்கின்றோம். அதிலுள்ள முக்கியத்துவம் கருதி சோதனைகளுடன் கூடிய சில முக்கிய நிகழ்வுகளை மௌலவி முஜாஹித் இப்னு ரஸீத் அவர்கள் அழகான முறையில் தொகுத்து தந்துள்ளார்கள். எனவே இதனை மிக கவனமாக அவதானித்து நமது மனதில் நிலைநிறுத்திக் கொள்வோம் (இன்ஷா அல்லாஹ்)
- நபிகளார் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்-வின் ஏற்பாட்டால் நிகழ்ந்த சோதனைகள்
- நபிகளார் (ஸல்) அவர்களுக்கு சதோர சகோதரிகள் உண்டா?
- தந்தையும், தாயும் இறந்த பின்னால் நபிகளாரை பொறுப்பேற்று வளர்ப்பதற்க்கு போட்டியிட்ட இருவர் யாவர்? அதில் யாரிடம் நபிகளார் (ஸல்) கொடுக்கப்பட்டார்கள்?
- படிக்க, எழுத தெரியாத நபி என்பதன் விளக்கமென்ன?
- ஹிரா குகைக்கு ஹதீஜா (ரழி) அவர்கள் நபிகளாருக்(ஸல்)காக உணவு எடுத்துச் சென்றார்களா? அந்த செய்தியின் நிலை என்ன?
- நபிகளார் (ஸல்) ஆதரவாக இருந்த இரண்டு பேர்கள் மரணத்தினால் ஏற்பட்ட சோதனைகள் – யார் அந்த இரண்டு பேர்கள்?
- மதினாவில் தன்னை சந்திக்க வந்த மூதாட்டியின் பெயரை மாற்றினார்களா? யார் அந்த பெண்மணி?
- கஃபாவின் திரைகளை பிடித்துகொண்டு நபிகளார் (ஸல்) சொன்ன வார்த்தைகள் என்ன?
- கஃபாவை கண்ணியப்படுத்துவதற்காக நான் இறங்கிபோவேன் என நபியவர்கள் எங்கு, எப்போது சொன்னார்கள்?
- ஹிஜ்ரத் செய்து மதினாவிற்கு சென்றபோது மதினாவின் நிலை எவ்வாறு இருந்தது?
- நபிதோழர்கள் பலர் கண்ணீர் விடுவதை கண்டு நபிகளார் (ஸல்) அவர்கள் மதினாவிற்காக இறைவனிடம் கேட்ட துஆ என்ன?
- மக்கா குரைஷிகளுக்கு எதிராக துஆ செய்துவிட்டு, கபுல் ஆகும் வரை நடைபெற்ற சோதனைகளின் போது நபிகளார் (ஸல்) அவர்கள் எவ்வாறு இருந்தார்கள்? அதில் நாம் பெற வேண்டிய படிப்பினை என்ன?
- மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதினாவிற்கு வந்த ஒவ்வொரு நபிதோழருக்கும் அன்சாரி ஒவ்வொருவர் பொறுபேற்றுக்கொண்டனர். அதில் நபிகளார் (ஸல்) அவர்களுக்கு பொறுப்பேற்றுக் கொண்டவர் யார்?
- நபிகளார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நாம் எவ்வாறு உள்வாங்குகின்றோம்!
- ஹதீஜா (ரழி) அவர்கள் மூலம் நபிகளார் (ஸல்) அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்? நபியவர்களுக்கு மொத்தம் எத்தனை பிள்ளைகள், அதில் ஆண் பிள்ளைகள் எத்தனை? பெண் பிள்ளைகள் எத்தனை?
- மூத்த ஆண்குழந்தையின் பெயர் என்ன? மூத்த மகளுடைய பெயர் என்ன?
- நபிகளார் (ஸல்) அவர்களின் புனைபெயரை யாருக்காவது சூட்டலாமா?
- நபிகளாரின் பேத்திகள் இருவரின் பெயரென்ன? நபிகளார் (ஸல்) அவர்கள் தொழுகையில் தம்கையில் வைத்திருந்து தொழுவதாக வரும் செய்தியிலுள்ள பேத்தியின் பெயரென்ன?
- நபிகளாரின் (ஸல்) நமது குடும்பத்துடன் எவ்வாறு இருந்தார்கள்?
- மதினாவில் பிறந்து அங்கு இறந்த நபிகளாரின் ஆண் குழந்தையின் பெயரென்ன? அந்த குழந்தையின் இறுதி தருவாயில் இருக்கும் சமயத்தில் நபிகளார் சொனன வார்த்தைகள் என்ன? அந்த குழந்தை இறந்த பின் இறங்கிய வசனம் என்ன சொல்லுகின்றது?
- நபிகளார் (ஸல்) அவர்கள் தனது பெண்பிள்ளை விஷயத்தில் ஏற்பட்ட சோதனைகள் என்ன? குறிப்பாக ஜைனப் (ரழி) அவர்கள் விஷயத்தில் எதிர்கொண்ட சோதனைகள் என்ன?
- ஜைனப் (ரழி) அவர்களின் கணவர் யார்? அவர் இஸ்லாத்தை தழுவினாரா?
- நபிகளாரின் மகள் பாத்திமா (ரழி) அவர்களின் மரண தருவாயில் நடந்த நிகழ்வுகள் குறிப்பாக அபூபக்கர் (ரழி) அவர்களுடன் சந்திப்பு!
- பாரசீக வெற்றிக்கு பின் வீரர்கள் திரும்பிய கலீபா உமர் (ரழி) அவர்களிடம் வந்த போது நடந்த நிகழ்வு, அப்போது நபிகளாரின் மனைவிகளின் ஆலோசனை என்ன? அதன் பின் உமர் (ரழி) அவர்களிடம் ஆயிஷா (ரழி) மற்றும் ஹப்ஸா (ரழி) பேசியவைகள் என்ன? அதற்கு உமர் (ரழி) அவர்களின் மறுமொழி என்ன?
… அனைத்து விளக்கத்திற்கும் கீழ்கண்ட வீடியோவை பார்வையிடவும்.
தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாரந்திர பயான் நிகழ்ச்சி
நாள்: 03-04-2014
தலைப்பு: நபிகளார் (ஸல்) அவர்களின் சொந்த வாழ்வும் சோதனைகளும்
வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்)
வீடியோ: தென்காசி SA ஸித்திக்
Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/7s97w2xns5s4xtl/Personnel_life_of_Prophet_Muhammath_and_time_of_difficulties-Mujahid.mp3]