மக்கா புனிதப் பள்ளியில் தொழவைக்ககூடியவர்களில் ஒருவரும் இரண்டு புனித பள்ளியின் தலைவர் மரியாதைக்குரிய அஷ்-ஷைக் அல்-ஸுதைஸ் (அப்துர்ரஹ்மான் பின் அப்துல் அஸிஸ் பின் அப்துல்லாஹ் பின் முஹம்மத் அல்-ஸுதைஸ்) அவர்களைப்பற்றிய ஒரு சிறு குறிப்பு:
1960ம் ஆண்டு (ஹிஜ்ரி 1382) ரியாத் மாநகரில் பிறந்தார்கள் தனது 12 வது வயதில் அல்-குர்ஆனை மனனம் செய்தார்.
1983ம் ஆண்டு ரியாத் பல்கலைகழகத்தில் இஸ்லாமிய ஷரியா துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.
1987ம் ஆண்டு இமாம் முஹம்மத் பல்கலைகழகத்தில் இஸ்லாமிய அடிப்படைகள் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.
தனது 24வது (1404 ஹி) வயதில் ஹரமில் (மக்கா) இமாமாக நியமிக்கப்பட்டார்.
1995ம் ஆண்டு உம்முல் குரா (மக்கா) பல்கலைகழகத்தில் இஸ்லாமிய ஷரியா துறையில் கலாநிதி பட்டத்தினை பெற்றார். அப்போது உம்முல் குரா பல்கலைகழகத்தில் துணைபேராசிரியராக பணியாற்றி கொண்டியிருந்தார்.
2012ம் ஆண்டு மே மாதம் 8-ந்தேதி அமைச்சர் அந்தஸ்தில் இரண்டு புனித பள்ளியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இப்படியான உயர் கல்வி தகுதிகளை கொண்ட ஷைக் அவர்களை, வெறும் குரல்வளத்திற்க்காக பள்ளியில் தொழவைக்ககூடியவர் என்று மவ்லவி பீஜே குறிப்பிடுகின்றார்.
பீஜே-யின் மீது அதிக அக்கறையும், அன்பு வைத்ததால், அவரிடம் தவறு நிகழ்வதற்கு வாய்ப்பில்லை என்று நம்பி, செயல்படும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அங்கத்தினருக்கு
சமகாலத்தில் வாழ்ந்து வரும் மாபெரும் அறிஞர்கள், உலகலாவிய முஸ்லிம் சமூகத்தில் அறிப்பட்டவர்களான மக்கா – (புனிதப் பள்ளியில்) பைத்துல்லாஹ்-வில் தொழவைக்க கூடிய இமாம்களைப்பற்றி தனது மனம்போன போக்கில் தவறான தகவல்களை சத்திய வார்த்தைகளைப்போன்று பட்டியிலிடும் ததஜ மாநில தலைவர் (தற்போது ஒய்வில்) பீஜே-யின் யூகத்தினை பாரீர்.
நவீன தொலைதொடர்பு சாதனங்கள் நிறைந்து வாழும் இக்காலத்தில் இப்படி மோசமான யூகத்தின் அடிப்படையில் உண்மைக்கு புறம்பாக பேசக்கூடிய பீஜே பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த ஸஹாபாக்கள் வழியாக கிடைத்த ஹதீஸ்களில் தனது யூகத்தின் அடிப்படையில் நிராகரித்து வருவதும், தனது சொந்த புத்தியில் விளக்குவதும் எப்படி உண்மையாக இருக்க முடியும். மனிதன் அடிப்படையில் தவறு வரும் என்று இத்தவறினை ஒருவர் சரிகாண நினைப்பாரேயானால், அவருடைய சிந்தனைக்கு ஒரு கேள்வி, நீங்கள் எந்த வித நவீன தொலைதொடர்பு சாதனங்களற்ற குக்கிராமத்தில் வசிக்கின்றீர்களா அல்லது தட்டினால் விரல் நுனியல் செய்திகள் கிடைக்கும் கம்யூட்டர் உலகத்தில் வாழ்கின்றீர்களா?
இம்மை மறுமையில் மோசமான விளைவை ஏற்படுத்தும் பீஜே-யின் வழிகெட்ட சிந்தனைகளிலிருந்து விலகிவாருங்கள் சகோதர, சகோதரிகளே!!!
மரியாதைக்குரிய மறைந்த சவூதி அரேபியாவின் மு.ஃப்தி அஷ்-ஷைக் இப்னு பாஸ் அவர்கள் எந்த ஒரு சிக்கலான மார்க்க தீர்ப்ப வழங்கினால் இறுதியல் அல்லாஹு அஃலம் (அல்லாஹ்வே மிக அறிந்தவன்) கூறும் வழக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள். இதனை பற்றி பீஜே விமர்சனம் செய்யும் போது ஒரு அரசில் எல்லா வகையான வசதிகள் இருந்தும் உறுதியான தீர்ப்பை ஒரு முஃப்தியால் தர முடியவில்லை பின் யாரால் தான் முடியும், எல்லா வகையான ஆதாரங்கள் பெற்று இறுதியில் உறுதியான தீர்ப்பை வழங்கவேண்டியது தானே, பல ஆண்டுகள் எடுத்தாலும் நல்லது என்று விமர்ச்சித்தார் அதனை அவருக்கு திருப்பி சொல்லுகின்றோம் சவூதி இமாம்களைப்பற்றி சரியான செய்திகள் தனக்கு தெரியாது என்றால் அதனை முழுமையாக தேடி தெரிந்துக் கொண்டு அதன் பின் மக்கள் மன்றத்தில் வைக்காமல் ஏன் இந்த அவரச குடுக்கை தனம்… சிந்திப்பாரா ஓய்வில் இருக்கும் தத-ஜமாத் தலைவர் பீஜே.
யூகங்களை பின்பற்றக்கூடிய பீஜே மற்றும் அவரது ஜமாத்-கார்களுக்கும் கீழ்கண்ட இறைவசனங்களை ஞாபகப்படுத்துகிறோம்.
وَمَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِنْ يَتَّبِعُونَ إِلاَّ الظَّنَّ وَإِنَّ الظَّنَّ لا يُغْنِي مِنْ الْحَقِّ شَيْئاً (28)
அவர்களுக்கு இது குறித்த எவ்வித அறிவும் இல்லை. அவர்கள் வெறும் யூகத்தையே பின்பற்றுகின்றனர். நிச்சயமாக வெறும் யூகம் உண்மைக்கு எந்தப் பயனும் தராது. (53:28)
إِنْ يَتَّبِعُونَ إِلاَّ الظَّنَّ وَمَا تَهْوَى الأَنْفُسُ وَلَقَدْ جَاءَهُمْ مِنْ رَبِّهِمْ الْهُدَى (23)
‘அவர்கள் வெறும் யூகத்தையும் தங்கள் மனம் விரும்புவதையுமே பின்பற்றுகின்றனர். நிச்சயமாக அவர்களது இரட்சகனிடமிருந்து நேர்வழி அவர்களிடம் வந்தே இருக்கின்றது.’ (53:23)
வெறும் யூகங்களைப் பின்பற்றுவது எந்த வகையிலும் சத்தியத்திற்கு துணை நிற்காது எனும் போது யூகத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பிய மவ்லவி பீ. ஜைனுல் ஆபீதீன் உலவி (பீஜே) என்ற கோட்டையிலுள்ள வாதத்தின் உண்மை நிலையை மக்கள் சிந்திக்க வேண்டும்.
——————-
இஸ்லாம் கல்வி மீடியா வழங்கும்
சூனியம் – சிறப்பு நிகழ்ச்சி
சூனியம் – தடுமாறும் ததஜ தலைவர் (பாகம்-7)
மக்கா ஹரம் இமாம்களைப் பற்றிய அறியாமையும் அவர்களது சூனியம் பற்றிய நிலைப்பாடும்
வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன்
(அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்)
வீடியோ மற்றும் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
[audio:http://www.mediafire.com/download/at0cn34x3cy0dei/Sooniyam-P7-Mujahid.mp3]