சூனியத்தை முதல் முதலில் மறுத்தவர்கள் முஃதஸிலாக்கள் என்பது வரலாறு. ஆனால் தத-ஜமாத் தலைவர் மவ்லவி பீஜே அவர்கள் முஃதஸிலாக்கள் அல்லாத மதிக்கத்தக்க இமாம்கள் பலரும் இந்த சூனியத்தை மறுத்துள்ளதாக அறுதியிட்டு உறுதியாக கூறுகின்றார். அந்த மதிக்கத் தக்க இமாம்கள் யார்? உண்மையிலே பீஜே மேற்கோள் காட்டும் இமாம்கள் முஃதஸிலாக்கள் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டவர்களா?
இமாம் அபூ-ஹனிபா அவர்களை பற்றிய பீஜே-யின் மிக மோசமான விமர்சனம் என்ன? அப்படி விமர்சனம் செய்தவரை தனது கருத்தை (சூனியத்தை மறுப்பதற்க்கு) நிலைநாட்ட ஆதாரமாக காட்டுகின்றாரா?
உண்மைக்கு புறமான பொய்களை எந்த அளவிற்கு துனிந்து கூறுகின்றார் என்பதனை ஆசிரியர் அவர்கள் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் விளக்குகின்றார்.
அன்பான அழைப்பு ததஜ-வினர் அங்கதினர்களே, அனுதாபிகளே உண்மையை தெரிந்து அதன் பால் நீங்கள் மீண்டுவாருங்கள். இவ்வளவு தெளிவாக பொய்களை உண்மையைப்போன்ற உரைத்தவர்களை அறிந்த பிறகும் மனம் மாறாமல் இருக்காதீர்கள்!
இஸ்லாம் கல்வி மீடியா வழங்கும்
சூனியம் – சிறப்பு நிகழ்ச்சி
சூனியம் – தடுமாறும் ததஜ தலைவர் (பாகம்-8)
முஃதஸிலாக்கள் அல்லாத ஏனைய அறிஞர்கள் சூனியத்தை மறுத்துள்ளார்களா?
வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன்
(அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்)
வீடியோ மற்றும் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
[audio:http://www.mediafire.com/download/5uuc4031eyxq083/Sooniyam-P8-Mujahid.mp3]