நிச்சயமாக மனிதன் நன்றி மறந்தவனாகவே இருக்கிறான்; மனிதருக்கு நன்றி செலுத்தாதவன், இறைவனுக்கு நன்றி செலுத்தியவானாக மாட்டான். இவையெல்லாம் குர்ஆனிலும் நபி மொழிகளிலும் சொல்லப்பட்டுள்ள அறவுரைகள். சாதாரணமாக அருகிலிருப்பவர் தும்மியதற்கு “அல்ஹம்துலில்லாஹ்” (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!) என்று சொன்னவருக்கு “யர்ஹமுகல்லாஹ்” (அல்லாஹ் உனக்கு அருள் பாலிப்பானாக!) என்று பரஸ்பரம் நன்றி சொல்லிக் கொள்வதை இஸ்லாம் கடைபிடிக்கச் சொல்கிறது. அதே போல் தமிழர் பண்பாட்டிலும் நன்றி செலுத்துவது தலையாய பண்பாடாக இருக்கிறது. செய்நன்றியறிதல் என்று …
Read More »Tag Archives: எதிரொலி
அமானுடக் கேள்விகளும் அரைகுறை ஞானிகளும் – முடிவுரை
வாசக நண்பர்களே, இதுவரை வஹீ (வேத வெளிப்பாடு) மனநோயின் அறிகுறி என்ற காழ்ப்புணர்வு கலந்த இறக்குமதி செய்யப்பட்டக் குற்றச்சாட்டை குர்ஆன், ஹதீஸ் மூலமும், சமூக, வரலாற்று, அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த மருத்துவக்குறிப்புகளை சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்களின் கருத்துக்களுடன் ஒப்பிட்டு ஆதாரங்களுடன் வைக்கப்பட்ட இம்மறுப்புத்தொடரைப் பார்த்தோம். பின்னூட்டங்கள் என்ற பெயரில் வெவ்வேறு புனைப்பெயரில் தேவையற்ற திசை திருப்பல்கள், தனி மனித துவேசம், ஏளனம் மற்றும் ஆதாரமற்ற அவதூறுகள் சொல்லப்பட்ட போதிலும், …
Read More »அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 8
வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டு முஹம்மது நபியின் தூதுத்துவத்தையும் வஹீ அருளப்பட்ட விதத்தையும் ஆய்ந்த ஒரு சிலர், நபிகளாரின் உன்னத வாழ்க்கையையும் வஹீ அருளப்படுவதற்கு முன்னர் நபிகளார் தம் சமூகத்தில் பெற்றிருந்த நம்பகத் தன்மையையும் கருத்தில் கொண்டு, ‘அவரால் குர்ஆன் எழுதப்படவில்லை அல்லது அதை எழுதுவதற்கான உள்நோக்கம் அவருக்கு இருந்ததில்லை’ என ஒப்புக் கொண்ட போதிலும், ‘அவர் வலிப்பு நோயால் அவதிப்பட்டார் அல்லது தாம் இறைச்செய்தி அனுப்பப்படும் தூதர் என்ற மனப்பிரமையில் …
Read More »அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 7
கீழைத்தேய ஆய்வு (Science of Orientalism) என்பது பொதுவாகக் கீழைத்தேய நாடுகள், இனங்களின் மொழி, மதம், பண்பாடு, நாகரிகம், வரலாறு பற்றிய மேற்கத்திய ஆய்வாளர்களின் ஆராய்ச்சியைக் குறிக்கும். (பார்க்க: Encyclopedia Britannica). கீழைத்தேய ஆய்வு என்பது ஆரம்பத்தில் ஐரோப்பிய காலனித்துவவாதிகளின் ஆதரவிலும் அதனைத் தொடர்ந்து கீழைத்தேய உலகில் கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்தை மேற்கொண்ட கிறிஸ்தவ மதப்பிரச்சாரகர்களின் துணையாலும் வளர்ச்சியடைந்தது. கீழைத்தேயங்களைக் கைப்பற்றி ஐரோப்பிய அரசியல் ஆதிக்கத்தை அங்கு நிலைபெறச் செய்யவும், கீழைத்தேய …
Read More »பண்டிகைகளும் நல்லிணக்கமும் -2
பொங்கல், ஓணம்,புத்தாண்டுப் பண்டிகைகளைச் சொல்லலாம். இதை மற்ற மதத்தவர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் இஸ்லாமியர்கள் இவற்றைக் கொண்டாடததின் மூலம் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கைக்கு எதிரானவர்கள் என்ற தோற்றம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என தனித்தனியாக கொண்டாடுவதை விட தமிழர்களாகிய நாம் பொங்கல் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடி உலகின் மற்ற மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கலாமே? என்றநியாயமான கருத்து முன்வைக்கப்படுகிறது. ஒவ்வொரு கொள்கையும் ஒவ்வொரு கருத்தைச் சொல்கின்றன. அதனைப் …
Read More »பண்டிகைகளும் நல்லிணக்கமும் -1
பண்டிகைகள் – அந்தந்த மத நம்பிக்கையாளர்கள் தங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக சந்தோசமாகக் கொண்டாடப் படுவதற்காக மதங்கள் ஏற்படுத்திய வழிமுறை. கிறிஸ்துமஸ்,புத்தாண்டு, புனிதவெள்ளி என கிறிஸ்தவர்களும் தீபாவளி,ஆயுத பூசை என இந்துக்களும் ரம்ஜான், பக்ரீத் என முஸ்லிம்களும் ஒவ்வொரு வருடத்திலும் சில நாட்கள் கொண்டாடுகின்றார்கள். இவையல்லாமல் பொங்கல்,ஓணம்,யுகாதி போன்ற சமூக/இன ரீதியான பண்டிகளும் கொண்டாடப் படுகின்றன. அனைத்து மத பண்டிகைகளின் நோக்கமும் மக்கள் சந்தோசமாகவும் நன்றியுடையவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதே. …
Read More »அறிமுகம்
தமிழ் நெஞ்சங்களுக்கு, இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக! தமிழ்மணத்தின் மூலம் “நல்லடியார்” என அறியப்பட்ட நான் < > என்ற வலைப்பூவில் இஸ்லாம் மார்க்கம் பற்றியும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றியும் சில எழுதிய அவதூறுகளுக்கு விளக்கம் சொல்லும் கடமையில் எழுதி வந்தேன். எனது வலைப்பூ பதிவுகள் http://athusari.blogspot.com என்ற முகவரியில் செயல்பட்டு வந்த போழ்தும், தமிழ்மணம் நிர்வாகிகளின் புதிய விதிமுறைகள் மதம் …
Read More »அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 6
இதுவரை வஹீ அருளப்பட்ட விதத்தை அறிவியல்,உளவியல் காரணம் சொல்லி அவதூறு செய்த டாக்டர்.கோயன்ராட்/நேசகுமாரின் முரன்பாடுகளையும், இஸ்லாம் பற்றிய அவர்களின் அரைகுறை ஞானத்தையும் முந்தைய தொடர்களில் அறிவியல் அளவீடுகளின் மூலம் பார்த்தோம். இத்தொடருக்கு மேலும் வழு சேர்க்கும் விதமாக தமிழில்குர்ஆன் என்ற தளத்தில் இருக்கும் குர்ஆன் அருளப்பட்டவிதம் பற்றியும் குர்ஆனில் சொல்லப்பட்ட முன்னறிவிப்புகள் மெய்ப்படுத்தப் பட்டதையும் இப்பதிவில் பார்ப்போம். குர்ஆன் அருளப்பட்ட விதம்: முஸ்லிம்களுக்கும் இஸ்லாம் பரவத்தொடங்கிய காலத்தில் இருந்த முஹம்மது …
Read More »முட்டை சைவமா? அசைமா?
கோழிமுட்டை சைவமா? அசைமா? என்ற சர்ச்சை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. உயிருள்ள கோழியின் வயிற்றில் இருந்து வருவதால் அசைவம் என்று சிலர் சொல்கின்றனர். சைவமாக இருந்து கொண்டு முட்டை சாப்பிடும் சிலர் அப்படியானால் பாலும் அசைவமாகத்தானே இருக்க வேண்டும். அதுவும் உயிருள்ள மாட்டின் மடியிலிருந்து தானே கறக்கப்படுகிறது. அதை யாரும் அசைவம் என்று சொல்வதில்லையே! அதைப்போல் தான் முட்டையும் சைவமே! என்று சொல்லி வந்தனர். இந்த சர்ச்சை வழக்காக …
Read More »அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 5
இஸ்லாத்தின் மீது கொண்ட மிகையான அச்சத்தினால் அதன் அடிப்படையான இறைவேதத்தின் வெளிப்பாட்டை ஆராய்கிறோம் என்ற போர்வையில் ஆராய்வோரும் குர்ஆனில் நல்ல கருத்துக்கள் இருக்கின்றன என்று ஒப்புக் கொள்ளும் அதேநேரம், அதன் வெளிப்பாட்டின் மீது ஐயம் கிளப்புபவர்கள் / ஐயம் கொண்டவர்களின் சந்தேகங்களை தெளிவு படுத்துவதும் அவசியம். முஹம்மது நபியவர்கள் இறை வேதம் அருளப்படும் முன்னர் பெற்றிருந்த நற்பெயராலும், நாணயத்தாலும் குர்ஆன் அருளப்பட்ட காலங்களில் இருந்த மக்களுக்கு அதன் வெளிப்பாட்டில் சந்தேகம் …
Read More »