Featured Posts

Tag Archives: வணக்கம்

படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யலாமா? (3)

மனிதன் தன் பிரார்த்தனையில் இன்னாரின் பொருட்டால், அவரின் உரிமையால் என்று கூறிக் கேட்கும் போது மனிதனுக்கு ஏதோ சில உரிமைகள் அல்லாஹ்விடம் இருப்பதாக நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இப்படி நினைத்தல் சுன்னத் வல் ஜமாஅத்தினரின் போக்கல்ல என விளங்கிக் கொள்ள வேண்டும். மாறாக இது முஃதஸிலாக்களின் கொள்கையாகும். இவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பிரிவினராவர். ‘மனிதனுக்குச் செய்ய வேண்டிய எந்த செயலுமே அல்லாஹ்வின் மீது கடமையாகவில்லை’ என்று வேறு சிலர் கூறுகின்றனர்.அவன் …

Read More »

இஸ்லாத்தின் இரு அடிப்படைகள்

இஸ்லாத்தில் அடைப்படைச் சித்தாந்தங்கள் இரண்டு. ஒன்று: இணைவைக்காமல் அல்லாஹ்வை மட்டும் வணங்கி வழிப்படுவது. இரண்டு: வழிபாடுகளின் முறைகளை அல்லாஹ்வின் சட்டங்களிலிருந்தும், அவன் தூதர் காட்டித்தந்த வாஜிப், முஸ்தஹப் என்ற விதிகளிலிருந்தும் எடுத்து வழிபடுவது. தூதுவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலத்தில் தோன்றியிருக்கிறார்கள். அவ்வப்போதுள்ள நபிமார்களின் ஏவல்களுக்கொப்ப அல்லாஹ்வுக்கு வணக்கங்கள் செலுத்தப்பட்டன. யூதர்களின் தௌராத் வேதம் உறுதி குலையாமல் நேர்மையாக இருந்த காலத்தில் அதன் விதிப்படி வணக்கங்கள் புரிந்தவர்கள் முஸ்லிம்களாக மதிக்கப்பட்டனர். இன்ஜீலும் …

Read More »

மசூதிகள் ஏக இறை வழிபாட்டுக்குரியனவே!

பள்ளிவாசல்களை நிறுவுவதினால் அல்லாஹ்வைத் தொழுவது மட்டும் இலட்சியமாக இருக்க வேண்டும். முஸ்லிம்கள் தொன்று தொட்டு ஏக இறைவனை மட்டும் வணங்குவதற்கு மசூதிகளைக் கட்டி வந்தார்கள். இப்பள்ளிவாயில்களில் இறைவழிபாடுகளைத் தவிர்த்து வேறு எச்செயலையும் அனுஷ்டானம் என்ற பெயரில் செய்ய முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை. ஏகனைத் தொழலாம். அவனிடம் தன் நாட்டங்களைக் கேட்டுக் கெஞ்சலாம். இதைத் தவிர படைப்பினங்களில் எவரையும் அழைத்துப் பிரார்த்திக்கக் கூடாது.

Read More »

இருவகைப்பட்ட முஷ்ரிக்குகள்

அல்லாஹ்வும், அவனுடைய திருத்தூதரும் எவரைப் பற்றி இறைவனுக்கு இணைவைக்கும் முஷ்ரிக்குகள் என்று விளக்கினார்களோ அவர்களை இருவகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று: நூஹ் நபியின் சமூகத்திலுள்ளவர்களைப் போன்றோர். மற்றொன்று: நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சமூகத்தைச் சார்ந்தோரைப் போன்றவர்கள். இவ்விரு கூட்டத்தினரும் இறைவனுக்கு ஒவ்வொரு மாதிரியாக இணை வைத்தார்கள். நபி நூஹ் (அலை) அவர்களின் சமூகத்தார் (ஸாலிஹீன்களான) இறைவனின் நல்லடியார்கள் இறந்தால் அவர்களுக்குச் சமாதிகளைக் கட்டி உயர்த்தி அந்த சமாதிகளின் மீது தரித்திருந்து …

Read More »

இணை வைப்பவர்களும் ஷபாஅத்தும்

இறைவனுக்கு இணைவைப்போர் மலக்குகளையும், நபிமார்களையும், மற்றும் நன்மக்களின் பிம்பங்களையும் அமைத்து அவற்றிடம் சிபாரிசை வேண்டினார்கள். இப்பிம்பங்களைக் கொண்டு வெளிப்படையில் நாங்கள் சிபாரிசைத் தேடினாலும் உண்மையில் நேரடியாகவே இவர்களிடம் கேட்கிறோம் என்று வாதாடினார்கள். இந்தப் படைப்பினங்களுக்கு கல்லறைகளை அமைத்து வேண்டி நின்றார்கள். அவற்றுக்கு முன் மண்டியிட்டு விழுந்து சிபாரிசை வேண்டி வணக்கங்களும் புரிந்தார்கள். இம்மாதிரியான சிபாரிசை இறைவன் அழித்து இல்லாமலாக்கி விட்டான். இந்த ஷபாஅத்தை நம்பிய முஷ்ரிக்குகளை இழிவானவர்கள் என கண்டித்தான். …

Read More »

பாடம்-12 | அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளிடம் உதவி தேடுவதும் (இஸ்திகாதா), துஆ கேட்பதும் ஷிர்க்கான செயலாகும்.

அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளிடம் உதவி தேடுவதும் (இஸ்திகாதா), துஆ கேட்பதும் ஷிர்க்கான செயலாகும். “இன்னும் அல்லாஹ்வைத் தவிர உமக்கு பயனளிக்காதவற்றை மற்றும் உமக்கு இடர் செய்யாதவற்றை நீர் அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்வீராயின் நிச்சயமாக அச்சமயமே அநியாயக்காரர்களில் (உள்ளவராக) நீர் ஆகிவிடுவீர். அல்லாஹ் உமக்கு ஒரு இடரை அடையச் செய்தால் அதனை நீக்குகிறவன் அவனைத் தவிர (வேறு) எவரும் இல்லை. மேலும் அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால் அவனது …

Read More »

பாடம்-10 | அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளின் மீது நேர்ச்சை வைப்பது ஷிர்க்கான செயலாகும்

அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளின் மீது நேர்ச்சை வைப்பது ஷிர்க்கான செயலாகும். “இவர்கள் (தங்கள்) நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள்; இன்னும் ஒரு நாளையும் பயப்படுவார்கள்; அதன் தீமை எங்கும் பரவியதாக இருக்கும்.” என அல்லாஹ் கூறுகின்றான். (76:7)

Read More »

பாடம்-01 | இறை நம்பிக்கையை சாட்சி கூறுவதின் உண்மை அர்த்தம்

இறை நம்பிக்கையை சாட்சி கூறுவதின் உண்மை அர்த்தம். லா இலாஹ இல்லல்லாஹ் என்று இறை நம்பிக்கையை சாட்சி கூறுவதில் இரண்டு அம்சங்கள் அடங்கியுள்ளன. அவையாவன மறுப்பதும் உறுதிபடுத்துவதுமாகும். முதலாவது: எல்லாப் புகழுக்கும் உரிய அல்லாஹ்வுக்கன்றி வேறு யாருக்கும் அல்லது வேறு எதற்க்கும் தெய்வீகத் தன்மை கிடையாது என்று இறை நம்பிக்கையை சாட்சி கூறும் ஷஹாதா மறுக்கிறது. அல்லாஹ்வை அன்றி ஏனையவைகள் மலக்குகள், நபிமார்கள், ஏனைய மனித இனங்கள், சிலைகள், உலகின் …

Read More »