Featured Posts

யாகாவா ராயினும் நாகாக்க – 1

தருமி’ என்ற புனைப்பெயரில் எழுதிவரும் திரு .சாம் ஜார்ஜ் கடைசியாக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ரிடையர்ட் ஆனவர். பிறப்பால் கிறிஸ்தவராக இருந்தவர் , கிறிஸ்தவத்தின் கோட்பாடுகள் பிடிக்காமல் மதங்களே மாயை என்ற முடிவுக்கு வந்து, ” எனக்கு மதம் பிடிக்கவில்லை” என்ற தலைப்பில் பல பதிவுகளை எழுதினார். கிறிஸ்தவத்திலிருந்து வெளியேறிய பேராசிரியர் சாம் ஜார்ஜ், கிறிஸ்தவத்தின் குறைபாடுகளாகத் தான் உணர்ந்ததை பதிவாக இட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் விளக்க …

Read More »

ஜும்ஆவின் பாங்கிற்குப் பிறகு வியாபாரம் செய்தல்

அல்லாஹ் கூறுகிறான்: “இறைநம்பிக்கை கொண்டோரே! ஜும்ஆ நாளில் தொழுகைக்காக அழைக்கப்படும் போது அல்லாஹ்வை நினைவு கூர்வதின் பக்கம் விரைந்து செல்லுங்கள். வியாபாரத்தை விட்டு விடுங்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இது உங்களுக்கு சிறந்ததாகும்” (62:9) சிலர் இரண்டாம் பாங்கு கூறப்பட்ட பிறகும் கடைகளில் வியாபாரம் செய்கின்றனர். அல்லது பள்ளிகளுக்கு முன்னால் தொடர்ந்து பொருட்களை விற்கிறார்கள். அவர்களிடம் வாங்குபவர்களும் பாவத்தில் கூட்டாகின்றனர். மிஸ்வாக் குச்சியை வாங்கினாலும் சரியே. அறிஞர்களின் சரியான கூற்றின்படி …

Read More »

மதங்களும் பெண்ணியமும் – 2

பெண்ணுரிமை அமைப்புக்களின் அடிப்படை நோக்கம் மேற்கத்திய நாடுகளில் வழக்கத்தில் இருந்த ஊதியப் பாகுபாட்டைக் களைய வேண்டும் என்பதாகவே இருந்தன. அதாவது ஒரே அலுவலைச் செய்யும் ஆணுக்கும்-பெண்ணுக்கும் வெவ்வேறு விகிதமான ஊதியம் வழங்கப்பட்டது. இந்த அநீதியிலிருந்து பெண்களை மீட்டெடுக்கப் போராடுவதற்காகவே பெண்ணுரிமை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு போராட்டங்கள் மூலம் சமநீதி பெற வேண்டிய சூழல் உருவானது. இதில் ஓரளவு வெற்றிகண்ட அமைப்புகள் இன்னும் சில ஆணாதிக்கச் சிந்தனைகளிலிருந்து பெண்களை முற்றிலும் விடுவிக்கத் தொடந்து …

Read More »

நஜஷ் – வியாபாரத்தில் வஞ்சித்தல்

நஜஷ் என்பது பொருளை வாங்காத ஒருவர் (இவர் வியாபாரியால் நிறுத்தப் பட்டிருப்பார்) அதன் விலையை அதிகப் படுத்துவதாகும். பிறரை ஏமாற்றுவதும் படிப்படியாக அவரை அதிக விலைக்குக் கொண்டு செல்வதும் தான் இதன் நோக்கமாக இருக்கும். ‘நீங்கள் வஞ்சக வியாபாரம் செய்யாதீர்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி. இது ஒரு வகையான ஏமாற்றுதலாகும் என்பதில் ஐயமில்லை. திண்ணமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (16)

அன்னிய ஆட்யின் கீழ் சிறுவரும் சிறுமியரும் பெற்ற புதுமுறைக் கல்வியினால் விளைந்த ஒழுக்கக் கேட்டை மிகைப்படுத்திக் கூறுவது கடினமாகும். அவர்கள் தம் சொந்த கலாச்சாரத்திற்குப் பதில் இழிந்த, பகட்டு மிக்க மேனாட்டுப் போலிக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கப்பட்டனர். மேனாட்டு அறிவு தான் மிக்க உண்மையானது, நம்பத்தக்கது என்றும் மேனாட்டு ஒழுக்க முறை தான் தூய்மை மிக்கதென்றும் மேனாட்டு நாகரிகமே மனித மூளை தோற்றுவித்த மிகச் சிறந்த நாகரிகம் என்றும் …

Read More »

விற்பனைப் பொருளின் குறைகளை மறைத்தல்

‘ஒரு உணவுக் குவியலின் பக்கம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். அதில் அவர்கள் தம் கையை நுழைத்தபோது அவர்களுடைய விரல்களில் ஈரம் பட்டது. உணவு வியாபாரியே! என்ன இது? என்று வினவினார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே! மழை நீர் பட்டு விட்டது என்று பதிலளித்தார். மக்கள் பார்க்கும் விதமாக உணவுப் பொருளின் மேற்பகுதியில் அதைப் போட்டிருக்க வேண்டாமா? யார் ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல என அல்லாஹ்வின் …

Read More »

இவர்களுடைய பிரச்னை என்ன?

இவர்களுடைய பிரச்னை என்ன? மதத் துவேஷக்கருத்துக்களை எழுதுவோரில் ஒரு சிலர் வெளிப்படையாகத் தான் இன்ன இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று கூறிக்கொள்வதுண்டு. (அவ்வியக்கப் பொறுப்பில் இருப்பதால் மறைக்க வழியில்லை என்பதால் கூட இருக்கலாம்). வேறு சிலர், அதை மறைத்தே எழுதுகின்றனர்-அவர்களுக்கு முற்போக்கு என்ற முகமூடி தேவையாக இருக்கிறது. ஆம். முற்போக்கு என்ற பெயரில் சொல்லப்படும் சரக்கு நன்கு விற்பனையாவதை அனைவரும் அறிந்தே உள்ளோம். இவர்களின் எழுத்தை வரிகளுக்கிடையில் படிக்கும் யாரும் இவர்களின் …

Read More »

வட்டி வாங்குதல்

திருக்குர்ஆனில் அல்லாஹ், வட்டி வாங்குபவர்களைத் தவிர வேறு யாருடனும் போர்ப் பிரகடனம் செய்வதாக அறிவிக்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான்: “நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருப்பின் (உங்களுக்கு வர வேண்டிய) வட்டிப் பாக்கியை விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யாவிடின் அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் (உங்களுக்கு எதிராக) போர் அறிவிக்கப்பட்டதென்பதை அறிந்து கொள்ளுங்கள்” (2:278,279) அல்லாஹ்விடம் இக்குற்றம் எந்த அளவுக்கு மோசமானது என்பதை விளக்குவதற்கு இவ்விரு வசனங்களே போதும். …

Read More »

மதங்களும் பெண்ணியமும்.

விண்ஸ்டன் சர்ச்சிலிடம் ஒருவர், “பெண்கள் சம உரிமை பெறுவதற்கு என்ன வழி? என்று கேட்டதற்கு, “பெண்கள் தங்களிடமுள்ள உரிமைகளில் பாதியை ஆண்களுக்குக் கொடுத்து விட்டாலே போதும்! என்றாராம். பெண்ணியம்/ பெண்ணுரிமை பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் இஸ்லாத்தையும் புழுதிவாரித் தூற்றுவது நவீன பெண்ணியவாதிகளின் (?) அடிப்படைத் தகுதியாகி விட்டது . யார் இந்த பெண்ணியவாதிகள்? அது என்ன பெண்ணியம்? பெண்ணியம் பற்றி வாய்கிழியப் பேசும் இவர்களின் உண்மையான தகுதிதான் என்ன? இஸ்லாம் …

Read More »