Featured Posts

Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்

இமாமத் செய்ய இமாம் மற்றொருவரை நியமித்தல்..

235- நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று ‘நபி (ஸல்) அவர்கள் நோயுற்றபோது நடந்த நிகழ்ச்சியை எனக்குச் சொல்வீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆம்! நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையானபோது ‘மக்கள் தொழுதுவிட்டார்களா?’ என்று கேட்டார்கள். இல்லை, அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினோம். அப்போது ‘பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்’ என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அதில் அவர்கள் குளித்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்கள். …

Read More »

இமாமைப் பின்பற்றுபவர்கள் பற்றி..

232- நபி (ஸல்) அவர்கள் ஒரு தடவை குதிரையின் மீது ஏறிய போது கீழே விழுந்து விட்டார்கள். அதனால் அவர்ளுடைய வலது விலாப் புறத்தில் அடிபட்டது. அவர்களை நாங்கள் நோய் விசாரிக்கச் சென்றோம். தொழுகை நேரம் வந்ததும் தொழுகையை உட்கார்ந்தவாறே தொழுதார்கள். நாங்களும் (அவர்களுக்குப் பின்னால்) உட்கார்ந்தவாறு தொழுதோம். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளர்!; அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள்: அவர் …

Read More »

தொழுகையில் அல்லாஹ்வைப் புகழ்தல்..

229-‘இமாம் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா’ என்று கூறும்போது நீங்கள் ‘அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து’ எனக் கூறுங்கள்! யாருடைய இந்தக் கூற்று வானவர்களின் கூற்றுடன் ஒத்து அமைகிறதோ அவரின் முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். புஹாரி 796 :அபுஹூரைரா (ரலி) 230- இமாம் ஆமீன் கூறும் போது நீங்களும் ஆமீன் கூறுங்கள்! எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் …

Read More »

நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறுதல்..

227- என்னை கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் சந்தித்து நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒர் அன்பளிப்பை உனக்கு நான் வழங்கட்டுமா? என்று கேட்டார்கள். நான் ஆம் அதை எனக்கு வழங்குங்கள் என்று பதில் சொன்னேன். உடனே அவர்கள் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தங்கள் மீதும் தங்கள் குடும்பத்தார் மீதும் ஸலவாத்து சொல்வது எப்படி? (என்று எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள்) ஏனெனில் தங்களுக்கு நாங்கள் …

Read More »

தொழுகையில் தஷஹ்ஹுது எனும் நிலை..

226. நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களைப் பின்பற்றித்) தொழும்போது அஸ்ஸலாமு அலல்லாஹி கப்ல இபாதிஹி அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல, அஸ்ஸலாமு அலா மீகாயீல, அலா ஃபுலானின் வ ஃபுலானின் (அடியார்களுக்கு முன் அல்லாஹ்வுக்கு முகமன் உண்டாகட்டும். (வானவர்) ஜிப்ரீல் மீது சாந்தி உண்டாகட்டும். இன்னார் இன்னார் மீது சாந்தி உண்டாகட்டும் என்று கூறிவந்தோம். நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கித் திரும்பி ‘நிச்சயமாக அல்லாஹ்வே ஸலாம் (சாந்தியளிப்பவன்) …

Read More »

தொழுகையில் பிஸ்மில்லாஹ் சப்தமின்றி கூறுவது..

225- நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) உமர் ரலி) ஆகியோரும் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்றே தொழுகையைத் துவக்குபவர்களாக இருந்தனர். புஹாரி-743: அனஸ் (ரலி)

Read More »

தொழுகையில் ஸூரா ஃபாத்திஹா ஓதுவது…

222. திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து ஸுராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி-756: உபாதா பின் ஸாமித் (ரலி) 223- எல்லாத் தொழுகைகளிலும் ஒதப்படவேண்டும் என நபி ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் விதமாக ஒதியவற்றை உங்களுக்குக் கேட்கும் விதமாக ஒதுகிறோம். நபி (ஸல்) அவர்கள் சப்தம் இன்றி ஒதியதை நாங்களும் சப்தமின்றி ஒதுகின்றோம். அல்ஹம்து அத்தியாயத்தை மட்டும் ஒதினால் அது போதுமாகும். அதை …

Read More »

ருகூஉ ஸஜ்தாவில் என்ன கூறுவது…

219- குனியும் போதும் நிமிரும் போதும் தக்பீர் கூறி அபூஹுரைரா (ரலி) தொழுவித்துவிட்டு நான் உங்களுக்கு நபி (ஸல்) அவர்களின் தொழுகை போலவே தொழுது காட்டினேன் என்றும் கூறினார்கள். புஹாரி-785: அபூ ஸலமா 220- நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தக்பீர் கூறுவார்கள். ருகூவு செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். ருகூவிலிருந்து முதுகை நிமிர்த்தும் போது ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து …

Read More »

தொழுகையில் கைகளை தோள் வரை உயர்த்துதல்..

217- நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவங்கும் போதும் ருகூவுக்காகத் தக்பீர் கூறும் பொதும் ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தமது தோள்களுக்கு நேராகவும் தம் கைகளை உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து உயரும் போது ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா, ரப்பனா வலகல்ஹம்து என்று கூறுவார்கள். ஸஜதாவுக்குச் செல்லும் போது இவ்வாறு செய்ய மாட்டார்கள். புஹாரி-735: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) 218- மாலிக் பின் அல் ஹுவைரிஸ் (ரலி) தொழும் போது …

Read More »

பாங்கொலியில் ஷைத்தான் ஓட்டமெடுப்பது

216- தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்புக் கொடுக்கப்படும் போது, பாங்கு சப்தத்தை கேட்ககூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் வருகிறான் தொழுகைக்கு இகாமத் கூறும்போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடித்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவருடைய மனதிற்குமிடையில் இருந்துக்கொண்டு தொழுகையாளி அதற்கு முன்புவரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, இதை நீ நினைத்துப்பார்; அதை நீ நினைத்துப்பார் என்று சொல்லிக் …

Read More »