Featured Posts

குதிகால்களை சரியாக கழுவாதவர்களுக்கு…

140- மக்கள் உளூ செய்யும் தொட்டியிலிருந்து உளூ செய்து கொண்டிருந்த போது அவ்வழியே சென்ற அபூஹூரைரா (ரலி) அவர்கள் (எங்களைப் பார்த்து) உளூவை முழுமையாகச் செய்யுங்கள். நிச்சயமாக அபுல்காஸிம் (முஹம்மத்) (ஸல்) அவர்கள், குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான் என்று கூறினார்கள் என்றார்கள். புகாரி-165: முஹம்மது பின் ஸியாத் (ரலி)

Read More »

ஹிந்த்(ரலி)பற்றிய உண்மைச் செய்திகள்.

ஹிந்த் (ரலி) அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை தழுவிய நிகழ்ச்சி திரிக்கப்பட்டிருந்தது. இது பற்றி சென்ற பதிவில் எழுதியிருந்தோம். ஹிந்த் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய செய்தி அவர் தனியொருவராக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நிகழ்ச்சியல்ல. மாறாக, நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்டபோது மக்காவாசிகள் இஸ்லாம் மார்க்கமே உண்மை மார்க்கம் எனப் புரிந்து இஸ்லாத்தைத் தழுவினார்கள். அந்த செய்தியின் உண்மை நிலை இதுதான்… அல்லாஹ் இஸ்லாமை ஓங்கச் செய்து, …

Read More »

தமிழகத்தில் தவ்ஹீத் வாதிகள் அன்றும் இன்றும்

தமிழகத்தில் தவ்ஹீத் வாதிகள் அன்றும் இன்றும் வழங்குபவர்: ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

Read More »

கால்களை நன்றாக நன்கு கழுவுதல் பற்றி…

139- நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளு செய்து கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்து விட்டார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணிரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) குதிக்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்! என்று இரண்டு அல்லது மூன்று தடவை தமது குரலை …

Read More »

ஹஜ் மானியமும் வெட்கமும்!

மக்காவுக்கு புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் இந்திய முஸ்லிம்களுக்கு வழங்கப் படுவதாகச் சொல்லப்பட்ட “ஹஜ் மானியம் ரத்து” என்பது குறித்த பதிவை ‘என்றும் அன்புடன்’ பாலா என்பவர் பதிவிட்டிருந்ததர். அதில் ஹஜ் யாத்திரை வசதியுள்ளவர்களுக்கு மட்டுமே கடமை என்று சொல்லப்படுவது பற்றி முஸ்லிம்கள் விளக்க வேண்டி இருந்தார். பாலாவின் (என்றும்?) அன்பான அழைப்பை ஏற்று, இந்திய ஹாஜிகளுக்கு வழங்கப்படும் ஹஜ் மானியம், ரிசிகேஷ் செல்லும் இந்து யாத்திரிகர்களுக்கு வழங்கப் படுவது …

Read More »

தூக்கத்தில் ஷைத்தான் தங்கும் இடம்!

138- நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து உளூ செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப் படுத்தி)க் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும் போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-3295: அபூஹூரைரா (ரலி)

Read More »

நபிமார்களிடையே வேற்றுமை இல்லை.

இஸ்லாம் மார்க்கத்தை விமர்சிக்கப் புறப்பட்டவர் 15.09.2006 நாளில் திண்ணைக் கட்டுரையில் கீழ்கண்டவாறு திருவாய் மலர்ந்திருக்கிறார். //(இயேசுவையும் விட உயர்ந்த நபியாக முகமதுவை இஸ்லாம் சித்தரிக்கின்றது. உதாரணமாக இறுதித்தீர்ப்பு நாளில் எல்லா நபிகளையும் விட உயர்ந்த ஸ்தானம் முகமதுவுக்கு அல்லாஹ்வால் வழங்கப்படும். அவரே சிபாரிசு செய்யும் வல்லமை கொண்டவராகத் திகழ்வார். இந்த சிபாரிசின் மூலம் இந்த சிபாரிசின் மூலம் முகமதுவை ஏற்பவர்கள் எவ்வளவு கொடூரங்களைச் செய்திருந்தாலும், அதை அல்லாஹ் மன்னிப்பார். ஆனால், …

Read More »

மூக்குக்கு நீர் செலுத்தி சுத்தம் செய்தல் பற்றி…

137- உளூ செய்பவர் மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி வெளியாக்கட்டும், மலஜலம் கழித்து விட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யவும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-161: அபூஹூரைரா (ரலி)

Read More »

ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை)

மாடொன்று சினிமா போஸ்டரை சாவகாசமாய்த் தின்றுக்கொண்டிருக்க, சாலையின் குறுக்கே வந்துவிட்ட மொபெட்டை இறங்கி வந்து வைதுக்கொண்டிருந்தார் போக்குவரத்துக்காவலர் என்றெல்லாம் எழுத இடம் தராத ரியாத் மாநகர சாலை. பஸ்களும் ஸ்கூட்டர்களும் ஆட்டோவும் இல்லாத சாலையில் கார்களே கார்களை முந்திக் கொண்டிருந்தன.

Read More »

ஆராய்ச்சியாளரின் சிந்தனை?! (நீதிக்கதை)

சிங்கம், சிறுத்தை, யானை, குரங்கு போன்ற வனவிலங்குகள் மனிதனால் பழக்கப்பட்டு, அவனுடைய ஆணைகளுக்கு அடிபணிந்து நடப்பதை ஸர்கஸில் பார்த்திருக்கிறோம்.

Read More »