அல்லாஹ்வின் திருத்தூதரை ஒருவரின் குடும்பம் பிள்ளைகள், தந்தை பிற மனிதர்கள் ஆகியோரைக் காட்டிலும் அதிகம் நேசிப்பது 27- நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை அவரது குழந்தைகள் ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராக ஆகும் வரை அவர் (உண்மையான) ஈமான் கொண்டவர் ஆகமாட்டார். புகாரி-15: அனஸ்(ரலி)
Read More »ஈமான் கொண்டவர் அதன் சுவையை..
ஈமான் கொண்டவர் அதன் சுவையை உணர்தல் 26- எவரிடம் மூன்று தன்மைகளக் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுமையை உணர்ந்தவராவார் (அவை) அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரியவராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-16: அனஸ்(ரலி)
Read More »இஸ்லாத்தில் சிறந்தது காரியங்களில் சிறந்தது
இஸ்லாத்தில் சிறந்தது எது? காரியங்களில் சிறந்தது எது? 24- ஒரு மனிதர் நபி(ஸல்)அவர்களிடம் இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது எனக் கேட்டார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள், (பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும் என்று கூறினார்கள். புகாரி-12: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) 25- அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தில் சிறந்தது எது? என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) சொன்னார்கள், எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் …
Read More »யூத கிருஸ்தவர்கள் – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்
வழங்குபவர்: மௌலவி U.K. ஜமால் முஹம்மத் மதனீ வெளியீடு: அல்ஜுபைல் அழைப்பு மையம் (சவுதி அரேபியா) நாள்: 03.03.2006
Read More »ஈமானின் அநேக கிளைகள்
21- ஈமான் அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-9: அபூஹூரைரா(ரலி) 22- அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் தமது சகோதரர்(அதிகம்) வெட்கப் படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே,அவரை(க் கண்டிக்காதீர்கள்) விட்டு விடுங்கள். ஏனெனில் நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஓரம்சம் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். புகாரி-24: அப்துல்லாஹ் (இப்னு உமர்(ரலி) 23- …
Read More »ஏகத்துவத்தை உள்ளத்தில் உறுதியாய் நம்பியவர்
எந்த வித சந்தேகமுமின்றி ஏகத்துவத்தை உள்ளத்தில் உறுதியாய் நம்பியவாறு அல்லாஹ்வைச் சந்திப்பவர் சுவனில் நுழைவார். அவரை நரக நெருப்பு தீண்டாது. 17- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும் முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என்றும் ஈஸா(அலை)அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என்றும் அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன(ஆகுக! என்னும்) ஒரு வார்த்தை(யால் பிறந்தவர்) என்றும், அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர், என்றும், சொர்க்கம் (இருப்பது) உண்மை …
Read More »ஈமானின் முதல் அங்கம்
ஈமானின் முதல் அங்கம் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என நம்புவது. 16- அபூதாலிபுக்கு மரணம் நெருங்கிய போது நபி (ஸல்)அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூ ஜஹ்ல் பின் ஹிஷாம்,அப்துல்லாஹ் பின் அபீ உமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம், எனது பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகத்தைச் சொல்லி விடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காக சாட்சிக் …
Read More »ஏற்றுக் கொள்ளும் வரை..
லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பதை ஏற்றுக் கொள்ளும் வரை மக்களுடன் போரிடுதல். 13- நபி (ஸல்) அவர்கள் மரணித்து, அபூபக்ர் (ரலி) ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஜகாத்தை கடமையை மறுத்ததன் மூலம்) இறை நிராகரிப்பாளர்களாகி விட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூபக்ர்(ரலி) தயாரானார்கள்) அப்போது உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி, லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறும்வரை மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எனவே …
Read More »விசுவாசம், பேணுதல் மற்றும் அழைப்பு
அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விசுவாசங்கொள்வது. மார்க்கக் கடமைகளைப் பேணுவது. மக்களை அதன் பால் அழைப்பது 10- இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள் : அப்துல் கைஸூடைய தூதுக் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்த போது, வந்திருக்கும் இம்மக்கள் யார்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள், ரபீஆ வம்சத்தினர் என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் வருக! வெட்கப்படாமல், கவலை கொள்ளாமல் வருகை தாருங்கள்! என்று வரவேற்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! …
Read More »சுவனத்தில் நுழையச் செய்யும் ஈமான்
7- ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்)செயலை எனக்குக் கூறுங்கள்! என்று (அவசரமாகக்) கேட்டார். அப்போது மக்கள், இவருக்கென்ன நேர்ந்தது? இவருக்கென்ன நேர்ந்தது? என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அவருக்கு ஏதேனும் (அவசரத்) தேவை இருக்கலாம்! என்று (மக்களை நோக்கிச்) கூறி விட்டு, (அந்த மனிதரை நோக்கி) அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காதவராக அவனை மட்டுமே நீர் வணங்க வேண்டும்! தொழுகையை …
Read More »