– முஜீப் ரகுமான்நன்றி: புதிய காற்று மாத இதழ் (மார்ச் 2006) இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு முன் எப்போதையும் விட பல்வேறு நெருக்கடிகள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. ஆங்கில ஆட்சியின் காலத்திலிருந்தே இந்திய சமூக அமைப்பிலிருந்து முஸ்லிம்களை அந்நியப் படுத்தும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்றைய சூழலில் நூற்றுக்கு தொண்ணூறு சதம் நலிவுற்றவர்களாக இருக்கும் முஸ்லிம்கள் தங்கள் இருப்பு குறித்தும் எதிர்காலம் குறித்தும் நிரந்தர அச்ச வலையில் கேள்விக்குறிகளாக நிற்கின்றனர். …
Read More »ஜெயமோகனின் மனுதர்மம்
– மேலாண்மை பொன்னுச்சாமிநன்றி: கீற்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் திருவண்ணாமலையில் கலை இலக்கிய இரவு நடத்துகிறது. பல்லாயிரம் பேர் திரண்டிருந்த அந்த கலாச்சாரத் திருவிழாக் கூட்டத்தில் அப்போதைய பொதுச் செயலாளர் அருணன் ஒரு சிறுகதைத் தொகுப்பை அறிமுகப்படுத்தி வெளியிடுகிறார். அப்போது துணைப் பொதுச் செயலாளரான நான் நூலைப் பெற்றுக் கொண்டு உரையாற்றினேன். அந்த நூல் எது தெரியுமா? திசைகளின் நடுவே. அந்த நூலாசிரியரும் மேடையில் உட்கார்ந்திருந்தார். யார் தெரியுமா? …
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (14)
இதுவரை, இஸ்லாமிய வரலாற்றின் இரண்டாம் கட்டத்தில் முஸ்லிம் உலகில் பல்கிப் பெருகிய தீமைகளை அளவிட்டுக் காண்பிக்க ஒரு முயற்சி செய்துள்ளேன். இரண்டாம் கட்டத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட தீய சக்திகள் இஸ்லாமிய வரலாற்றின் மூன்றாம் கட்டம் தோன்றுவதற்கு ஒத்துழைத்தன. இம்மூன்றாம் கட்டத்தில் முஸ்லிம் உலகின் ஒரு பெரும் பகுதியில் ஐரோப்பியக் குடியேற்ற நாட்டு ஆட்சி தாபிக்கப் படுவதைக் காண்கிறோம். பிலிப்பைன் முதல் மொரோக்கோ வரையுள்ள பூகோளப் பகுதியில் எல்லா இஸ்லாமிய நாடுகளும் …
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (13)
முடியரசு முஸ்லிம்களிடையே இன உணர்ச்சியை பிறப்பித்து வளர்த்தது. தம் நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மன்னர்கள் இனவேறுபாடுகளை, பழி பாவத்திற்கு அஞ்சாமல் பயன்படுத்தினர். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உமையாக்களுக்கும் அப்பாசியருக்கும் இடையே நிகழ்ந்த போராட்டத்தில் அப்பாசியர் பாரசீகர்களின் ஆதரவைப் பெற நாடினர். இதற்காக அரேபிய உமையாக்களுக்கு எதிராகப் புரட்சி செய்யுமாறு அவர்கள் பாரசீகர்களைத் தூண்டினர். பல்வேறு முஸ்லிம் குழுக்களுக்கு இடையே நிலவிய பகைமையைப் பயன்படுத்தும் கொள்கையைப் பல நூற்றாண்டுகளாக மன்னர்கள் கடைபிடித்து …
Read More »அந்நியப் பெண்ணுடன் முஸாஃபஹா செய்தல்
சமூகப் பழக்கவழக்கங்களில் சில நம் சமுதாயத்தில் இறைமார்க்கத்தையும் விஞ்சி விட்டன. அதுபோல மக்களின் தவறான பழக்கங்களும், பாரம்பரிய நடைமுறைகளும் இறைச்சட்டங்களை எந்த அளவுக்கு மிகைத்து விட்டன எனில் யாருக்கேனும் ஷரீஅத்தின் சட்டங்களை நீ எடுத்துச் சொன்னால், அவற்றை ஆதாரத்தோடு நிரூபித்து, சான்றுகளையும் தெளிவு படுத்தினால் உடனே உன்னை பழமைவாதி, அடிப்படைவாதி, குடும்ப உறைவை குலைப்பவன், நல்ல எண்ணங்களில் சந்தேகத்தை ஏற்படுத்துபவன்… என்றெல்லாம் அவதூறு கூறி விடுவர். அத்தகைய பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் …
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (12)
இன, பிரதேச வேறுபாடுணர்ச்சிகள் இக்காலப்பிரிவில் மற்றொரு தீமை தலைதூக்கியது. இது இஸ்லாமிய உலகின் ஐக்கியத்தையே சிதறடிக்கக் கூடிய ஆபத்தாக மாறியது. அது முஸ்லிம் நாடுகளில் வளர்ந்த பிரதேசவாதமும் இனவாதமுமாகும். இஸ்லாமியக் கொள்கையில் மனிதத் தன்மைக்கு ஒரு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. மனித இனம் இறைவனின் குடும்பம் என்றும், அதன் ஒவ்வோர் உறுப்பினரும் மற்றவர்கள் அனைவரதும் நல்வாழ்வுக்குப் பொறுப்பாளராவார் என்றும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள். முஸ்லிம் சகோதரத்துவத்தின் ஒருமைப் பாட்டினை …
Read More »அந்நியப் பெண்ணுடன் தனித்திருத்தல்
ஷைத்தான் மனிதர்களை குழப்புவதற்கும் விலக்கப்பட்டவைகளில் அவர்களை வீழ்த்துவதற்கும் பெரும் ஆர்வம் கொண்டவன். இதனால்தான் அல்லாஹ் நம்மை இப்படி எச்சரிக்கிறான்: “நம்பிக்கை கொண்டவர்களே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். யாரேனும் அவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றினால் மானக்கேடானவை மற்றும் தீயவற்றைச் செய்யுமாறே ஷைத்தான் அவனை ஏவுவான்” (24:21). மனிதனின் இரத்தம் ஓடும் நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஓடுகின்றான். மனிதர்களை மானக்கேடானவற்றில் வீழ்த்துவதற்கு ஷைத்தான் கையாளும் வழிகளில் ஒன்றுதான் அந்நியப் பெண்ணுடன் ஒரு ஆண் தனித்திருப்பதாகும். …
Read More »ஒருவர் மற்றவரை விட சிறந்தவராகயிருத்தல்
விசுவாசிகளில் ஒருவர் மற்றவரை விட சிறந்தவராகயிருத்தல். இவ்வகையில் எமன் தேசத்து மக்களின் சிறப்பு பற்றி… 31- நபி(ஸல்)அவர்கள்தமது கரத்தால் யமன் நாட்டுத் திசையை நோக்கி சைகை காட்டி இறைநம்பிக்கை அதோ அங்கிருக்கும் யமன் நாட்டைச் சார்ந்ததாகும். அறிந்து கொள்ளுங்கள் கல் மனமும்,(இறக்கமற்ற) கடின சுபாவமும், ஒட்டகங்களின் வால்களை பிடித்தபடி அவற்றை அதட்டிக் கொண்டே (நாடோடிகளாக)சென்று கொண்டிருக்கும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பவர்களிடையே காணப்படும். அங்கிருந்து தான் ஷைத்தானின் இரு கொம்புகளும் உதயமாகும் …
Read More »அண்டை வீட்டாருக்கு உதவுவது..
அண்டை வீட்டாருக்கு உதவுவது விருந்தினரை உபசரிப்பது நல்லதை பேசுவது அல்லது மௌனமாய் இருப்பது ஈமானின் ஒரு கிளையாகக் கருதுதல் 29- அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-6018: அபூஹூரைரா(ரலி) …
Read More »தனக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும்..
தனக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்புவது ஈமானின் அடையாளம் 28- அல்லாஹ்வின் தூதர் அவர்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) ஈமான் கொண்டவர் ஆகமாட்டார் எனக் கூறினார்கள். புகாரி-13: அனஸ்(ரலி)
Read More »