Featured Posts

வணக்கம்! வணக்கம்!! வணக்கம்!!!

வணக்கம்!- சன் டிவியின் காமெடி நிகழ்ச்சியில் சிட்டிபாபு, அர்ச்சனா சொல்லும் வணக்கம் ஒருவகை. எதிரில் இருப்பவரின் கண்களைப் பார்த்து, கம்பீரமாகக் கமலாஹாசன் சொல்லும் வணக்கம் இன்னொரு வகை.தலைக்கு மேல் கைகளைக் கூப்பியும் நெஞ்சில் கைகைகளைக் குவித்தும் சொல்லப்படும் வணக்கம் மற்றொரு வகை. அனேகமாக இலவசமாகக் கிடைப்பனவற்றில் ‘வணக்கம் ‘ என்ற வாழ்த்தும் ஒன்று. தமிழில் வணக்கம் என்ற பதம் பிறரை வாழ்த்தப் பயன்படுத்தப் படுகிறது. சாதாரணமாக மதிப்புக்குரியவர்களை ‘வணக்கம்’ என்று …

Read More »

மரணித்தவருக்காக செய்யும் தர்மங்கள் பலனளிப்பது பற்றி..

1055. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘என்னுடைய தாய் திடீரென்று மரணித்துவிட்டார். அவர் அப்போது பேச முடிந்திருந்தால் நல்ல (தர்ம) காரியம் செய்திருப்பார். எனவே, அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்” என்றனர். புஹாரி :1388 ஆயிஷா (ரலி).

Read More »

நல்லடியார் புராணம் (அறிமுகம்)

கடந்த மூன்று வருடங்களாகத் தமிழ்மணத்தின் வாசகனாகவும் பதிவனாகவும் இருந்த என்னை, இந்த வாரம் நட்சத்திரப் பதிவராகத் தமிழ்மணத்தில் எழுதப் பணித்துள்ளார்கள். தமிழ் இணைய தளங்களில் அள்ளித் தெளிக்கப்பட்ட இஸ்லாம் பற்றிய அவதூறுகளுக்கு எனக்குத் தெரிந்த, நான் மெய்யென நம்பியவைகளை ஆதாரங்களுடன் பதிலாக எழுதிய திருப்தியைவிட அவதூறு பரப்பியவர்களால் இஸ்லாத்தை மேலும் ஆய்வு செய்வதற்கும் இன்னும் நன்கு அறிந்து கொள்வதற்கும் வாய்ப்பைப் பெற்றதில் அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது!. தமிழ்மணம் மூலம் ஓரளவு …

Read More »

மொத்த சொத்தில் முன்றில் ஒரு பங்கு வசிய்யத் செய்

1053. இறுதி ஹஜ்ஜின்போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் ‘இறைத்தூதர் அவர்களே! நான் மரணத் தருவாயை அடைந்து விட்டேன். நான் செல்வந்தன்; என்னுடைய ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை: எனவே, என்னுடைய பொருளில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்து விடட்டுமா?’ எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘வேண்டாம்” என்றார்கள். …

Read More »

மரண சாசனம்

1052. (மரண சாசனம் செய்ய) ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருக்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் அவர் தன்னுடைய மரண சாசனத்தை எழுதித் தன்னிடம் வைத்திருக்காமல் இரண்டு இரவுகள் கூட கழிப்பதற்கு அனுமதியில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2738 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) .

Read More »

ஆயுட்கால அன்பளிப்பு பற்றி….

1050. உம்ராவாக (ஆயுட்கால அன்பளிப்பாக) வழங்கப்பட்ட பொருளைக் குறித்து நபி (ஸல்) அவர்கள், ‘அது எவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கே உரியது” என்று தீர்ப்பளித்தார்கள். புஹாரி 2625 ஜாபிர் (ரலி). 1051. ஆயுட்கால அன்பளிப்பு அனுமதிக்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2626 அபூஹுரைரா (ரலி).

Read More »

தன் பிள்ளைகளிடம் பாகுபாடு காட்டலாகாது.

1048. என்னை என் தந்தையர் (பஷீர் பின் ஸஅத் (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு சென்று நான் எனது இந்த மகனுக்கு ஓர் அடிமையை அன்பளிப்புச் செய்திருக்கிறேன்.என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்கள் பிள்ளைகள் அத்தனை பேருக்கும் இதைப் போன்றே அன்பளிப்புச் செய்துள்ளீரா? என்று கேட்டார்கள். என் தந்தை இல்லை என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் அதை (உங்கள் அன்பளிப்பைத்) திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் …

Read More »

அன்பளிப்பைத் திரும்ப பெறுபவன் நிலை.

1047. தன் அன்பளிப்பைத் திரும்பப்பெறுபவன் வாந்தியெடுத்தப் பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2589 இப்னு அப்பாஸ் (ரலி).

Read More »

அன்பளிப்புச் செய்த பொருளைத் திரும்ப வாங்காதே.

1045. இறைவழியில் சவாரி செய்வதற்காக நான் ஒருவருக்கு குதிரையொன்றை (தர்மமாக)க் கொடுத்தேன். ஆனால், அவர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) வீணாக்கிவிட்டார். எனவே நான் அதை விலைக்கு வாங்க நாடினேன். இன்னும் அவர் மிகக் குறைந்த பணத்திற்கே விற்று விடுவார் என்றும் எண்ணினேன். எனவே, இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அதை வாங்காதீர்! உம்முடைய தர்மத்தை நீர் திரும்பப் பெறாதீர்! அவன் அதை ஒரு திர்ஹத்திற்குத் …

Read More »

மரணித்தவர் விட்டுச் செல்லும் சொத்து வாரிசுகளுக்கே.

1044. கடன்பட்டு இறந்தவர் நபி (ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத் தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுவார்; அப்போது ‘இவர் கடனை அடைக்க ஏதேனும்விட்டுச் சென்றிருக்கிறாரா?’ என்று கேட்பார்கள். ‘கடனை அடைப்பதற்குப் போதுமானதைவிட்டுச் சென்றிருக்கிறார்’ என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால் ‘நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்!” என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ஏராளமான வெற்றிகளைக் கொடுத்தபோது (அதன் மூலம் செல்வம் குவிந்ததால்), ‘இறைநம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை அவர்களின் விஷயத்தில் நானே …

Read More »