1741. நபி (ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது ‘லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி வ ரப்புல் அர்ஷில் அழீம்” என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: கண்ணியம் வாய்ந்தோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் மாபெரும் அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.) புஹாரி : 6345 …
Read More »நூல்கள்
சேவல்கள் கூவக் கேட்டால்….
1740. நீங்கள் சேவல்கள் கூவுகிற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனுடைய அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றன. (எனவே தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சத்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கிறது. (எனவே தான் கத்துகிறது.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3303 அபூஹுரைரா (ரலி).
Read More »களைப்பு நீங்க திக்ர்.
1739. திரிகை சுற்றுவதால் தாம் அடையும் வேதனை குறித்து (என் மனைவி) ஃபாத்திமா முறையிட்டார். (இந்நிலையில்) நபி (ஸல்) அவர்களிடம் போர்க் கைதிகள் சிலர் கொண்டு வரப்பட்டனர். உடனே, ஃபாத்திமா அவர்கள் (நபி – ஸல் – அவர்களிடம் வீட்டு வேலைக்காகக் கைதி எவரையாவது கேட்டு வாங்கி வரச்) சென்றார். ஆனால், நபி (ஸல்) அவர்களைக் காணவில்லை. ஆயிஷா (ரலி) அவர்களைத் தாம் அங்கே கண்டார். எனவே, (தாம் வந்த …
Read More »பூவையருக்கு
எனதன்பிற்குரிய முஸ்லிம் சகோதரிகளே! (ஒரு முஸ்லிம் பெண்மணியின் சரித்திரத்தை இங்கு கவனியுங்கள்!) அவள் இறையச்சமுள்ள ஒரு பெண். நன்மையை விரும்பி அல்லாஹ்வின் நினைவில் திளைத்திருப்பவள். அவள் தனது நாவிலிருந்து எந்த தீய வார்த்தையையும் பேசுவதற்கு அனுமதிக்க மாட்டாள். அவள் நரகத்தை நனைத்தால் அச்சத்தால்நடுங்கிவிடுவாள். அந்நரகைவிட்டும்தன்னை காப்பாற்ற அவளது இரு கரங்களும் அல்லாஹ்வின்பால் உயர்ந்துவிடும்.
Read More »உறங்கச் செல்லும் போது ஓதும் துஆ.
1734. ‘நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர் ‘யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டு விட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி …
Read More »மறுமை நாள் (அத்தியாயம்-4)
மறுமை நாள் என்ற நம்பிக்கை பகுத்தறிவு ரீதியானது. அது மனித இயற்கை வேண்டுகின்ற ஒரு அம்சம். அத்தோடு இறை நம்பிக்கை கொண்டவன் தவிர்க்க முடியாமல் மறுமை நம்பிக்கையையும் ஏற்க வேண்டியவனாகிறான். மறுமை நாள் நம்பிக்கையை ஏற்காதவன் இறைவனை மிகச் சரியான முறையில் நம்பிக்கைக் கொள்ள முடியாது. அந்நிலையில் அவன் இணைவைத்தலோடு அல்லது நிறைய பிழையான கருத்துக்களோடு தான் இறைவனை நம்பக் கூடியவனாக இருப்பான். அல்லது மறுமை நாள் நம்பிக்கைப் புரிந்து …
Read More »தாழ்ந்த குரலில் இறைவனை அழைத்தல்.
1728. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்தபோது அல்லது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (கைபரை) நோக்கிச் சென்று (வெற்றி பெற்றுத்) திரும்பிய போது, மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறுகையில், ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியோன், அல்லாஹ் மிகப் பெரியோன், லாஇலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்று குரல்களை உயர்த்திக் …
Read More »திக்ரின் சிறப்புகள்.
1724. ”வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன் – லாஇலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர் என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் …
Read More »அல்லாஹ்விடம் இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டுதல்.
1723. நபி (ஸல்) அவர்கள் ‘ரப்பனா ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனத்தன் வ ஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வக்கினா அதாபந் நார்” என்றே அதிகமாகப் பிரார்த்தித்து வந்தார்கள். (பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் நன்மை அருள்வாயாக. மறுமையிலும் நன்மை அருள்வாயாக. நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக புஹாரி :6389 அனஸ் (ரலி).
Read More »அல்லாஹ்வை கூட்டமாக அமர்ந்து நினைவு கூர்தல்.
1722. அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் ‘உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்” என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் …
Read More »