806. நாங்கள் மினாவிலிருந்து அரஃபாவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது அனஸ் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடன் நீங்கள் எவ்வாறு தல்பியா கூறிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள் ‘தல்பியா கூறியவர்கள் தல்பியா கூறினர்; அது ஆட்சேபிக்கப்படவில்லை தக்பீர் கூறியவர் தக்பீர் கூறினர்; அதுவும் ஆட்சேபிக்கப்படவில்லை’ என்று விடையளித்தார்கள். புஹாரி :970 முஹம்மது பின் அபூபக்கர் அத்தகபீ (ரலி).
Read More »ஜமராவில் கல்லெறியும் வரை தல்பியாக் கூறுதல்.
805. அரஃபாவிலிருந்து திரும்பும்போது நான் வாகனத்தில் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவுக்கு அருகிலுள்ள இடது புறப் பள்ளத்தாக்கை அடைந்ததும் ஒட்டகத்தை அமரச் செய்துவிட்டுச் சிறுநீர் கழித்துவிட்டுப் பிறகு வந்தார்கள். நான் அவர்களுக்கு உளூச் செய்யத் தண்ணீர் ஊற்றினேன். சுருக்கமாக உளூச் செய்தார்கள். அப்போது நான், இறைத்தூதர் அவர்களே! தொழப் போகிறீர்களா? எனக் கேட்டேன். அதற்கவர்கள் ‘தொழுகை உனக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்) தான்’ …
Read More »ஏகத்துவ எழுச்சி
ஏகத்துவ எழுச்சி S. கமாலுதீன் மதனி வெளியீடு : துறைமுக அழைப்பகம், ஜித்தா
Read More »கொல்கத்தா இமாமின் வன்முறைப் பேச்சு.
இந்தியா, அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தமாக நாடாளுமன்றம் அல்லோலப்பட்டு வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங் மீது முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்ட்ஸ் பாய்ச்சல் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. “இந்த பொய்க்கு மன்மோகன் மீது தோட்டா பாய்ந்திருக்கும்!” புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்டு 2007 ( 13:39 IST ) “அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக கூறிய பொய்யை, சீனாவில் சொல்லியிருந்தால் மன்மோகன் மீது தோட்டா பாய்ந்திருக்கும் ” என பிரதமரை …
Read More »ஸயீ இல்லாது ஹஜ் பூரணமாகாது.
802. நான் சிறு வயதுள்ளவனாக இருந்தபோது நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களிடம் ‘நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளாகும்! எனவே, ஹஜ் அல்லது உம்ரா செய்கிறவர் அவ்விரண்டையும் வலம் வருவதில் எந்தக் குற்றமுமில்லை!’ (திருக்குர்ஆன் 02:158) என்று அல்லாஹ் கூறினான். எனவே ‘அவ்விரண்டிற்குமிடையே ஸயீ செய்யாமலிருப்பதிலும் குற்றமில்லை என்றே கருதுகிறேன்!” என்று கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) ‘அவ்வாறில்லை, நீ கருதுவது போலிருந்தால் ‘அவ்விரண்டையும் வலம் …
Read More »வாகனத்தில் அமர்ந்து தவாஃப் செய்தல்.
800. நபி (ஸல்) அவர்கள் தம் இறுதி ஹஜ்ஜில் ஒட்டகத்தின் மீதமர்ந்து வலம் வந்தார்கள். அப்போது தலை வளைந்த கம்பால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டார்கள். புஹாரி :1607 இப்னு அப்பாஸ் (ரலி). 801. என் உடல் நலக்குறைவு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டபோது ‘ஜனங்களுக்குப் பின்னால் வாகனத்தில அமர்ந்து கொண்டு நீ தவாஃப் செய்து கொள்!” என்று கூறினார்கள். நான் அவ்வாறு தவாஃப் செய்யும்போது நபி (ஸல்) …
Read More »காபா இடமாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? பகுதி-1
புதன், 15 ஆகஸ்ட் 2007 காபா எனும் இறையில்லம் மனிதர்களுக்காக முதன் முதலாகக் கட்டப்பட்ட ஆலயம் என்று இஸ்லாம் மார்க்கத்தின் திருமறையான, திருக்குர்ஆன் கூறுகிறது. ”அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும், மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன், 003:096) மக்காவில் அமைந்த காபா, மனிதர்கள் இறைவனை வணங்குவதற்காக பூமியில் அமைக்கப்பட்ட முதல் இறையில்லம். காபாவின் வரலாறு மிகத் தொன்மையானது. இது பற்றிய வரலாற்றாசிரியர்களின் கண்ணோட்டம்: …
Read More »தவாஃபின் போது கறுப்புக் கல்லை முத்தமிடுதல்.
799. உமர் (ரலி) ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, ‘நீ தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்’ என்றார். புஹாரி :1597 அபீஸ் பின் ரபிஆ (ரலி).
Read More »இறைநம்பிக்கை அறிவுப்பூர்வமானதா?
மனித இனம் தோன்றியது முதல் பெரும்பாலான மனிதர்களிடம் அனேகமாக எழுந்திருக்கும் சந்தேகம் ‘கடவுள் உண்டா?” என்பதேயாகும்! வாழ்க்கை சுமூகமாகச் சென்று கொண்டிருக்கும்வரை கடவுளைப் பற்றியக் கேள்வி எழுந்திருக்காது! அனேகமாக மனித சக்திக்கு மீறிய நிகழ்வுகளின் போதுதான், தனக்கு மிஞ்சிய சக்தி பற்றிய ஐயம் எழுந்திருக்கவேண்டும். பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இதனை “இயற்கையின் நிகழ்தகவு” என்றும் அறிவியலாளர்கள் “வினை அல்லது எதிர்வினை” என்றும் இறை நம்பிக்கையாளார்கள் “எல்லாம் அவன் செயல்” …
Read More »கஃபாவின் இருமூலைகளைத் தொட்டு முத்தமிடுதல் பற்றி..
797. ”நெரிசலுள்ள நேரத்திலும் நெரிசலற்ற நேரத்திலும் நபி (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத் ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளையும் முத்தமிட்டதைப் பார்த்ததிலிருந்து நானும் இவ்விரண்டு மூலைகளையும் முத்தமிடுவதை விட்டதில்லை.” புஹாரி: 1606 இப்னு உமர் (ரலி). 798. ”கஅபாவில் எந்தப் பகுதியையும் யார் (முத்தமிடாமல்) தவிர்க்க முடியும்? முஆவியா (ரலி) எல்லா மூலைகளையும் முத்தமிடுபவராக இருந்தார்கள்” என்று அபூ ஷஅஸா கூறினார். முஆவியா (ரலி) அவர்களிடம் இப்னு அப்பாஸ் …
Read More »