Featured Posts

ஷைய்க் இன்திகாப் உமரீ

இன்றைய இயக்கங்களும் சமூக சேவைகளும்

எம்மைப் படடைத்த படைப்பாளன் எல்லாம் வல்ல இறைவன் காலத்துக்குக் காலம் பல. வகையான சோதனைகளை எமக்கு ஏற்படுத்துகிறான். இந்த உலகில் கடுமையான சோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டோர் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நபிமார்களாகும். சோதனைகளின் போது பொறுமையுடன் இருப்போரே வெற்றியாளர்கள் ஆவார்கள். அல்லாஹ் கூறுகிறான்: يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‏ நம்பிக்கை கொண்டோரே பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக …

Read More »

மாறு செய்வதின் மூலம் இஸ்லாத்தின் தனித்துவத்தைப் பேணுவோம்

அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து பூமிக்கு அனுப்பிய பின்பு அவர்களுக்குத் தெரிவு செய்த வாழ்க்கை நெறி தீனுல் இஸ்லாமாகும். முதல் மனிதன் தொடக்கம் இறுதி மனிதன் வரை ஏற்று நடக்க வேண்டிய வாழ்கை நெறியும் தீனுல் இஸ்லாமாகும். இந்த உலகில் தோன்றி மறைந்த அனைத்து இறைத்தூதர்களும் தீனுல் இஸ்லாத்தைத் தான் பிரச்சாரம் செய்தார்கள். இந்த உலகில் உள்ள கொள்கைக் கோட்பாடுகள், சித்தாந்தங்கள், எதனோடு இஸ்லாத்தை நீங்கள் …

Read More »

முஹர்ரம் மாதமும், ஆஷூரா நோன்பும்

அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் தற்போது நாம் இருக்கின்றோம். முஹர்ரம் மாதம் வந்து விட்டால் குறிப்பாக இம்மாதத்தில் மூன்று நிகழ்வுகளைப் பற்றி அதிகமாக பேசப்படுவதையும் அதை காரணமாக்கி சில காரியங்கள் அரங்கேற்றப்படுவதையும் நாம் அறிவோம். எனவே முஹர்ரம் மாதத்தில் நாம் நடைமுறைப்படுத்த வேண்டிய சுன்னாக்களைப் பற்றிய ஒரு தெளிவை இந்த ஆக்கத்தினூடாக வழங்குவது பயனளிக்கும் என நினைக்கிறேன். 1 ) மாதங்களைப் பற்றி அல்லாஹ் என்ன சொல்கிறான்: إِنَّ عِدَّةَ …

Read More »

உஸ்மான் ரழி அவர்களை தரக்குறைவாக எண்ணியவருக்கு இப்னு உமர் ரழி அவர்கள் சொன்ன பதில்

நபித்தோழர்களின் சில சம்பவங்களை மேலோட்டமாக படிக்கும் போது அவர்களின் சில காரியங்கள் / அல்லது முடிவுகள் எமக்குப் பிழை போல் தோன்றலாம் அப்படியான கட்டங்களில் நபித்தோழர்களை ஒரே அடியா எடுத்த எடுப்பில் விமர்சனம் செய்துவிடவோ, தப்பபிப்பிராயம் கொண்டுவிடவோ கூடாது. குறித்த நிகழ்வைப் பற்றி நாம் அறியாத அவர்களுடன் ஒன்றாக வாழ்ந்த மற்றத் தோழர்கள் அறிந்த பல விடயங்கள் இருக்கலாம் என்பதற்கு பின்வரும் செய்தி சிறந்த எடுத்துக்காட்டு. உஸ்மான் இப்னு மவ்ஹப்(ரலி) …

Read More »

உள்ளத்தால் ஒன்றுபட்டோர் யார்?

முஃமின்களிடம் இருக்க வேண்டிய பண்புகளில் மிக முக்கியமானதுஒற்றுமை. ஒரு முஃமின் தனது மற்ற சகோதரனுடன் மூன்று நாளைக்கு மேல் பேசாமல் இருப்பதை இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது. விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், கோபத்தை அடக்கிக் கொள்ளல் போன்ற பண்புகளை சுவனவாதிகளின் பண்பாக இஸ்லாம் அடையாளப்படுத்தி உள்ளது. தான் விரும்பும் ஒன்றை தனது சகோதரனுக்கும் விரும்பாதவரை உங்களில் ஒருவர் உண்மையான முஃமினாக முடியாது என்ற அளவுக்கு சகோதரத்துவத்தைப் பேணுவதை நபிகளார் (ஸல்) அவர்கள் வலியுறுத்திப் …

Read More »

ஸகாத்துல் பித்ரின் பெறுமதியைப் பணமாக வழங்க முடியுமா..?

- அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ ஸகாத்துல் பித்ர் என்பது ஷவ்வால் மாதத் தலைப்பிறை தென்பட்டதில் இருந்து பெருநாள் தொழுகைக்குப் புறப்பட முன் ஒவ்வொரு முஸ்லிமும் நிறை வேற்ற வேண்டிய ஒரு வணக்கமாகும். 1) பணக்காரர்கள், ஏழை என்ற பாகுபாடின்றி தன் பெருநாள் செலவு போக மேல்மிச்சமான வசதியுள்ளவர்கள் அனைவரும் ஸகாதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கொடுத்தாக வேண்டும். முஸ்லிமான ஆண், பெண், பெரியார், சிறுவர், அடிமை,அடிமையல்லாதவர் …

Read More »

ஜும்ஆ நாளின் மகிமைகளை பேணுவோம்

அல்லாஹ் இந்த உலகத்துக்கு அனுப்பியுள்ள Covid19 என்ற வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகிலுள்ள அனைத்து நாடுகளும் அனைத்து விதமான ஒன்றுகூடல்களையும் தடை செய்துள்ளது அந்த அடிப்படையில் தற்காலிகமாக முஸ்லிம் சமூகம் விட்டுக்கொடுக்க முடியாத ஜமாஅத் தொழுகையையும் ஜும்ஆ தொழுகையையும் நிர்பந்த அடிப்படையில் நிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளமை வார்த்தைகளால் சொல்ல முடியாத துயரமாகும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் அதிகம் அல்லாஹ்வை நெருங்க முயற்றிசிக்க வேண்டுமே ஒழிய மறுமையை …

Read More »

ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் (தொடர்-2)

அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்ற நேரமாகும். இந்த நேரத்தை தேவையற்ற பேச்சுக்கள், மற்றும் வீணான விளையாட்டுக்களைக் கொண்டு வீணடிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. இஷாத் தொழுகைக்குப் பின் தேவையற்ற பேச்சுக்களில் ஈடுபடுவது. அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை இரவின் மூன்றில் ஒரு பகுதிவரைத் தாமதப்படுத்துவார்கள். இஷாத் தொழுகைக்கு முன் …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் முஃஜிஸாவும் கராமத்தும்

– அல் ஹாபிழ் இன்திகாப் உமரி 1) முஃஜிஸா என்றால் என்ன..? நபிமார்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு நுபுவ்வத்தை உண்மைப்படுத்தும் முகமாக அவ்வப்போது செய்து காட்டிய அற்புத நிகழ்வுகள் முஃஜிஸாவாகும். இதை பொறுத்த வரை எந்த நபியும் சுயமாக எந்த அற்புதத்தையும் செய்ய வில்லை அவ்வாறு அவர்களால் சுயமாக செய்யவும் முடியாது அதே சமயம் தன்னால் அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்று எந்த ஒரு நபியும் வாதிடவுமில்லை அல்லாஹ்வின் கட்டளை …

Read More »

பஞ்சமான காலத்தை எதிர்கொள்ள நபி யூஸுப் அலை அவர்கள் கையாண்ட நிர்வாக முறைகள்

அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ (சற்று நீளமான கட்டுரை இன்றைய காலத்துக்கு தேவையான அறிவுரை) பொருளாதாரத்தில் உச்சத்தை நாம் தொட்டு விட்டோம், தன்னை மிஞ்ச யாருமில்லை, நாம் நினைத்தால் யாரையும் வீழ்த்தி விடலாம், என அமெரிக்கா , சீனா, இஸ்ரேல் , ஈரான் போன்ற வல்லரசு நாடுகள் மார்தட்டிக் கொண்டிருந்த வேலையில் உலக மக்களின் உயிர்களை மாத்திரமின்றி பொருளாதரத்தையும் ஆட்டம்காண வைக்க இப்பூமிக்கு சோதனையாக இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட அணு அளவே …

Read More »