Featured Posts
Home » பொதுவானவை (page 108)

பொதுவானவை

நீரிழிவு (Diabetics) நோயை வெற்றிக்கொள்வோம்

இனிவரும் தலைமுறைகள் அம்மி, அடிப்பம்பு, உலக்கை, குடக்கல் போன்றவற்றை மியூசியத்தில் மட்டும்தான் பார்க்க முடியும் என்பதை உண்மைபடுத்தும் விதமாக, வாழ்வின் அன்றாட தேவைகளுக்கு எலக்ட்ரிகல் சாதனங்களையே நம்பி வாழ்கிறோம். இச்சாதனங்கள், நம்மை அறியாமலேயே உடல் உறுப்புகளுக்கு இலவசமாக கிடைத்துக்கொண்டிருந்த பயிற்சிகளை தடுத்து, பலவித நோய்களில் அல்லல் பட காரணமாக அமைந்துவிட்டன. இன்றைய சூழ்நிலையில் உலகின் மிகப்பெரிய நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகும்.

Read More »

டாடாவின் (TATA) அதீத வளர்ச்சி

வளர்ந்து வரும் நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவும் சீனாவும் உலகளவில் பேசப்பட்டுக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு சற்று மேலான செய்தி ஒன்று கடந்த மார்ச் 26-ல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது பணக்காரர்களின் (ஐரோப்பிய) ஆடம்பர “கார்”களாக (European luxury brands) கருதப்படும் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார் கம்பெனிகளை ஃபோர்ட் நிறுவனத்திடமிருந்து, இந்தியாவின் டாடா குழுமம் 2.3 பில்லியன் டாலருக்கு வாங்குகிறது

Read More »

ஹஜ் கலைக்களஞ்சியம்

ஹஜ் “கலைக்களஞ்சியம்” வெளியீடு திட்டத்தை சவூதி இளவரசர் சல்மான் இப்னு அப்துல் அஜீஸ் அவர்கள் இன்று (மார்ச் 29, 2008) தொடங்கி வைக்கிறார். இக்கலைக்களஞ்சியம் கடந்த வருடத்தின் ஹஜ் செய்திகளோடு புனித கஃபா மற்றும் மஸ்ஜித் நபவி புனிதப் பள்ளிகள் பற்றிய விபரங்களை கொண்டிருக்கும். இதன்மூலம் சமய, நாகரீகம் மற்றும் பொருளாதார விஷயங்களை எடுத்துச் சொல்ல முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More »

கருத்துச் சுதந்திரமா? ஆணவமா?

கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பரில், முஹம்மது நபி(ஸல்) அவர்களை கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் டென்மார்க்கிலிருந்து வெளிவரும் ஜீலன்ட்-போஸ்டன் பத்திரிக்கை 12 கேலிச் சித்திரங்களை வெளியிட்டது. ஜீலன்ட் பத்திரிக்கை வெளியிட்ட 12 கேலிச்சித்திரங்களில் பதினொன்று நபி(ஸல்) அவர்களைப் பயங்கரவாதியாகவும் மற்றொன்று அவர்களைப் பாலியல் வாதியாகவும் சித்தரிக்கும் வகையில் வரையப்பட்டிருந்தன. துப்பாக்கி, வாள் ஆகியவைகள் பிடித்துக் கொண்டு இருப்பது போன்றும், அவர்கள் தலைப்பாகையில் வெடிகுண்டு இருப்பது போன்றும் கேலிச்சித்திரங்கள் வெளியாயின.

Read More »

உலக பொருளாதாரம்

மனிதர்களின் பெரும்பாலான நேரத்தைப் பொருளாதாரச் சிந்தனைகளும், செயல்களும் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன. பொருளை சம்பாதிப்பது, செலவிடுவது, சேமிப்பது, வாரிசுகளுக்கு விட்டுச் செல்வது போன்ற சிந்தனைகளில் மனிதன் மூழ்கிக் கிடப்பதை காண முடிகின்றது. உலகளாவிய அளவில் வறுமை, வேலையின்மை, பஞ்சம், பற்றாக்குறை, ஏற்றத்தாழ்வு போன்றவற்றினால் பல நாடுகள் துயருற்றிருக்கின்றன. மனிதர்களை பெருமளவில் கொல்லுகின்ற ஆயுதங்கள் உற்பத்தி, போதைப்பொருள் உற்பத்தி, ஓழுக்கக்கேடான செயல்கள், அடக்குமுறை போன்ற பல காரணங்களினால் மனித குலத்தை பெரிதும் …

Read More »

இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் பெயரில் வதந்தியும், அதற்கான மறுப்பும்

அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். அவனே தன் தூதரை நேர்வழியுடனும் உண்மையான மார்க்கத்துடனும் அனுப்பினான். அல்லாஹ்வின் அன்பும் அருளும் அவன் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் அவர்களை இறுதி வரை பின் பற்றும் அடியார்கள் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக. இக்கட்டுரையின் நோக்கம் இஸ்லாமியப் பேரறிஞர் அப்துல் அஸீஸ் இப்னு அப்தில்லாஹ் இப்னு பாஸ் அவர்களின் பெயரால் பரப்பப்பட்டு வரும் பொய்ச் செய்திக்கு மறுப்பளிப்பதாகும்.

Read More »

செல்போனின் தரத்தை அறிவது எப்படி?

காலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை உபயோகப் படுத்தக்கூடிய பொருட்கள் எல்லாமே தரமானதாக இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரும்புவோம். அப்படி அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருள்களில் செல்போன் அதிமுக்கியமான பொருளாக மாறியுள்ள கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடும்பத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறிப்போய் தனி நபரொருவர், ஒன்றிற்கு மேல் செல்போன்களை பயன்படுத்துகின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம்.

Read More »

வியாபார நுணுக்கங்கள்

சுத்தம் சுத்தமான தொழில் நிலையம், சுத்தமான உடை, சுத்தமான கை மற்றும் விரல் நகங்கள் ஆகியவை சுத்தமாக இருந்தால் 50 சதவிகிதம் இலாபம் கிடைத்து விட்டதாக மேல்நாட்டு வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதையே இஸ்லாம் சுத்தம் ஈமானின் ஒரு பகுதி என்று மக்களுக்கு பரிந்துரை செய்கின்றது.

Read More »

தவ்ஹீத் உலமாக்கள், ‘ததஜ’வினரை (TNTJ) விமர்சிப்பது ஏன்?

உரை: மௌலவி U.K. ஜமால் முஹம்மத் மதனீ அல்ஜுபைல் தஃவா சென்டர் வழங்கும் சிறப்பு பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி இடம்: முகாம் 2, இஸ்லாமிய நூலகம், ஜுபைல், சவுதி அரேபியா நாள் : 08.02.2008

Read More »

பிரச்னை குர்ஆனில் இல்லை; நம்மிடம்தான் – திரு.சுஜாதா ரங்கராஜன்

பத்திரிக்கையாளர், பன்னூலாசிரியர்,கணிஞர், வசனகர்த்தா எனப் பன்முகம் கொண்ட,தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறிந்த சுஜாதா என்று அறியப்பட்டு சமீபத்தில் மறைந்த திரு.ரங்கராஜன் அவர்கள் எழுதிய ஓரிரு நாவல்களைப் படித்திருக்கிறேன். சுவாரஸ்யமான எழுத்துநடை, வியக்கவைக்கும் தகவல், முடிவில் பிரமிப்பு ஆகியவற்றால் தன் எழுத்துப் பணிகளில் தனக்கென தனிஇடத்தையும் தவிர்க்க முடியாத வாசகர் வட்டத்தையும் பெற்று சிறந்து விளங்கினார். குர்ஆனைப் படித்தவர்களெல்லாம் சிந்தனையாளர்களல்ல; ஆனால் சிந்தனையாளர்கள் குர்ஆனைப் பற்றி அறியாமலிருக்க முடியாது. ஆகவே தான் குர்ஆனின் …

Read More »