ஹஜ் கடமையை செய்வதற்காக மக்கமா நகருக்கு வருவோர் கடைசியாக ஊர் திரும்ப முன் பயணத் தவாப் செய்வது கட்டாயமாகும்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
(தவாபை) கடைசிக் கடமையாக செய்யும் படி நபியவர்களின் காலத்தில் மக்கள் ஏவப்பட்டார்கள், ஆனால் மாதவிடாய் உடைய பெண்களைத் தவிர’
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
நபியவர்கள் ஹஜ்ஜுக்காக மக்கா வந்த சமயம் ஹஜ் முடிந்து மக்கள் எல்லாத் திசைகளினாலும் சென்று கொண்டிருக்கும் போது “கடைசி உடண்படிக்கையாக தவாபை செய்யாத வரை யாரும் வெளியேற வேண்டாம்” என நபியவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் முஸ்லிம், அஹ்மது
ஆனால் உம்ராவுக்கு வருபவர்களுக்கு நபியவர்கள் பயணத் தவாபை ஏவியதாக எந்த ஒரு செய்தியிலும் காணமுடியவில்லை. அதே வேலை நபியவர்களுகம் உம்ரா முடித்துவிட்டு இருதியாக தவாப் செய்து விட்டு சென்றாதாக கூட எந்த அறிவிப்பும் கிடையாது. எனவே சுன்னத்தான தவாபை செய்து கொள்வதில் எந்தக் குற்றமும் கிடையாது. கட்டாயம் செய்தாக வேண்டும் என்ற எந்த நிர்பந்ததமும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library