– M.T.M.ஹிஷாம் மதனீ 1. அல்லாஹ் குறித்து குர்ஆன் ஹதீஸ் மூலாதாரங்களில் இடம்பெற்றுள்ளவற்றிற்கு வெளிப்படையான கருத்தை மாத்திரமே கொடுக்க வேண்டும். அவற்றில் எல்லை மீறிவிடக்கூடாது. உதாரணமாக, அல்லாஹ் தனக்கு கண் இருப்பதாக தன்னை வர்ணித்துள்ளான். அவ்வர்ணனையைக் கருத்திற் கொண்டு அதற்கு வியாக்கியானம் செய்யும் போது, கண் என்ற வாசகமானது எதார்த்தமாக கண்ணைக் குறிக்காது மாற்றமாக, அதன் மூலம் அவனது பார்வைதான் நாடப்படுகிறது என்று கூறலாகாது.
Read More »நூல்கள்
பித்அத்தின் வகைகள் (பகுதி-2)
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) பித்அத் ஹகீகிய்யா; பித்ஆ இழாபிய்யா ‘பித்அத்’ என்பது மார்க்கத்தில் புதிதாக நுழைவிக்கப்பட்ட அம்சமாகும். நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் மார்க்கத்தின் பெயரில் உருவான ஆதாரமற்ற அனைத்து வழிபாடுகளும், கொள்கைகளும் பித்அத்துகளாகும். பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகள் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். எனினும் பித்அத்தில் அதன் தன்மைக்கு ஏற்பவும், அதன் பாரதூரத்திற்கு ஏற்பவும் பல வகைகள் உள்ளன. எத்தனை வகைகள் இருந்தாலும் அத்தனையும் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதில் …
Read More »அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-18)
– M.T.M.ஹிஷாம் மதனீ இக்கூற்றை உறுதி செய்யக்கூடிய பல ஆதாரங்களை அல்குர்ஆனில் இருந்து முன்வைக்கலாம். மேலும் புத்திரீதியான பல ஆதாரங்களும் கூட இதற்குள்ளன. அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்: ‘என்னுடைய இரட்சகன் (ஆகாதென்று) தடுத்திருப்பதெல்லாம் மானக்கேடான செயல்களை அவற்றில் வெளிப்படையானதையும், மறைமுகமானதையும், (இதர) பாவத்தையும், உரிமையின்றி வரம்பு மீறுதலையும், அல்லாஹ்விற்கு நீங்கள் இணைவைப்பதையும் அதற்கு எந்தவித ஆதாரத்தையும் அவன் இறக்கிவைக்காதிருக்க, இன்னும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவதையும் தான்’ என்று …
Read More »பித்அத்தின் வகைகள் (பகுதி-1)
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) கொள்கை சார்ந்த பித்அத்துகள்: மார்க்கத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து பித்அத்துகளும் வழிகேடுகள் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை. இருப்பினும் பித்அத் பற்றிப் பேசும் எமது சகோதரர்கள் பித்அத் பற்றி விரிவான விளக்கத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
Read More »அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-17)
– M.T.M.ஹிஷாம் மதனீ وَمِنَ الإيْمَانِ باللهِ : الإيْمانُ بِمَا وَصَفَ بِهِ نَفْسَهُ فِيْ كِتَابِهِ وَبِمَا وَصَفهُ بِهِ رَسُوْلُهُ مُحَمَّد صلى الله عليه وسلم விளக்கம்: அல்லாஹ் தொடர்பான வர்ணனை விடயத்தில் எமது நம்பிக்கை மேற்கூறப்பட்ட வாசகத்தில் இருந்து அல்லாஹ் தொடர்பாக அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவில் இடம்பெற்றிருக்கக்கூடிய வர்ணனைகள் விடயத்தில் எமது நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
Read More »அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-16)
– M.T.M.ஹிஷாம் மதனீ விதி பற்றிய நம்பிக்கை மேலும், விதியாக அமையப்பெற்ற ஓர் அம்சம் சில சமயங்களில் தன்னிலே தீங்குடையதாக இருந்தாலும், வேறு ஒர் கோணத்தில் நோக்குகையில் அது நன்மை பயக்கக்கூடியதாகவும் இருக்கும். இவ்வடிப்படையை பின்வரும் திருக்குர்ஆன் வசனம் ஒப்புவைக்கின்றது.
Read More »அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-15)
– M.T.M.ஹிஷாம் மதனீ விதி பற்றிய விளக்கம் وَالإيْمَانُ بِالقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ விளக்கம்: இது ஈமானின் கடமைகளில் இறுதிப்பகுதியைத் தெளிவுபடுத்தும் வாசகமாகும். அதன்படி விதியைப்பற்றிய நம்பிக்கை, ஈமான் கொள்ள வேண்டியவற்றில் இறுதியானதும் மிக முக்கியமானதுமாக இருக்கின்றது. விதி எனும் பதத்திற்கு ‘கத்ர்’ என்று அறபு மொழியில் வழங்கப்படும். இப்பதத்தின் மூலம் அல்லாஹுத்தஆலாவினால் அனைத்து வஸ்துக்கள் மீதும் நிர்ணயம் செய்யப்பட்ட அளவீடு நாடப்படுகின்றது.
Read More »அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-14)
– M.T.M.ஹிஷாம் மதனீ وَالبَعْثِ بَعْدَ المَوْتِ விளக்கம்: மேலும், இறைத்தூதர்களில் இறுதியானவராக நபியவர்கள் உள்ளார்கள். இதனைப் பல ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. எடுத்துக்காட்டாக பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தைக் கவனிக்க. ‘எனினும், அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (க் கடைசி) முத்திரையாகவும், (இறுதி நபியாகவும்) இருக்கிறார்’. (அல் அஹ்ஜாப்: 40) இவ்வசனத்தில் தூதர்களில் இறுதியானவர் என்று கூறாமல் நபிமார்களில் இறுதியானவர் என்று கூறப்பட்டுள்ளது.
Read More »அச்சமூட்டும் இயற்கைச் சூழ்நிலை
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) டிசம்பர் 26 மறக்க முடியாத தினம்! இலட்சக்கணக்கான உயிர்களைக் குடித்துக் கோடிக்கணக்கான சொத்துகளைக் காவு கொண்ட தினம்! பூவுக்குள் பூகம்பம் போன்று நீருக்குள் இவ்வளவு ஆக்ரோஷமா? தண்ணீருக்கு இப்படியொரு சக்தியா? எனத் திறந்த விழிகளை மூடாமல் மக்களை அதிர வைத்த தினம்! ஆறு வருடங்கள் உருண்டோடி விட்டாலும் டிசம்பர் வரும் போது கடலோரப் பிரதேச மக்களைச் சுனாமி அச்சம் தொற்றிக்கொள்கின்றது.
Read More »அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-13)
– M.T.M.ஹிஷாம் மதனீ وَرُسُلِهِ விளக்கம்: (وَرُسُلِهِ) இவ்வாசகத்தின் மூலம் ‘அல்லாஹ்வின் தூதர்கள்’ நாடப்படுகின்றார்கள். அத்தகையவர்கள், மார்க்க சட்டதிட்டங்களைக் கொண்டு வஹி மூலம் தெரியப்படுத்தப்பட்டவர்களாகவும், அவற்றை மக்கள் மன்றத்தில் எத்திவைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டவர்களாகவும் இருப்பர். அவர்களில் முதலாமவராக நூஹ் (அலை) அவர்களும், இறுதியானவராக முஹம்மத் (ஸல்) அவர்களும் இருக்கின்றார்கள்.
Read More »