Featured Posts

நூல்கள்

[தொடர் 16] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

கப்று வணங்கிகளின் வாதங்களும் அவற்றிற்கான மறுப்பும்: வாதம் 3: وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. அவர்கள் தமக்கு அநீதி இழைத்ததும் உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோருவதுடன், இத்தூதரும் அவர்களுக்காக பாவமன்னிப்புக் …

Read More »

[தொடர் 15] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

கப்று வணங்கிகளின் வாதங்களும் அவற்றிற்கான மறுப்பும்: வாதம் 2: நபிமார்கள் மண்ணறைகளில் உயிருடன் இருக்கின்றனர். எனவே அவர்களிடமும், அவ்லியாக்களிடமும் தேவைகளை வேண்டிப் பிரார்த்திக்கலாம். மிஃராஜின் போது நபி மூஸா (அலை) அவர்கள் தொழுகையை குறைத்து வரும்படி முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் கூறியதால், அதை அவர்கள் குறைத்துக் கொண்டு வந்தது மரணித்தவர்களிடம் உதவி தேடலாம் என்பதைக் காட்டவில்லையா? மறுப்பு : மனிதர்கள் அனைவருக்கும் மரணம் பொதுவான விதியாகும். அதிலிருந்து நபிமார்கள், …

Read More »

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 08)

சூனியம் – தொகுப்புரை நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கூறும் ஆதாரபூர்வமான ஹதீஸை மறுப்பதற்காகச் சகோதரர் பீஜே முன்வைக்கும் வாதங்களுக்கான மறுப்பை இது வரை பார்த்தோம். இந்தத் தொடரின் இறுதி அங்கமாக அவரது ஆக்கத்தின் முடிவு குறித்தும், நமது கட்டுரையின் தொகுப்புக் குறித்தும் இத்தொடரில் நோக்குவோம்.

Read More »

[பாகம்-2] முஸ்லிமின் வழிமுறை.

நபித்தோழர்களை நேசிப்பது. நபித்தோழர்களையும், நபியின் குடும்பத்தார்களையும் நேசிப்பது கடமை என்றும், அவர்கள் மற்ற முஃமின்கள், முஸ்லிம்களை விட சிறந்தவர்கள் என்றும் ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். சிறப்பில் அவர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு உண்டு. இஸ்லாத்தை முதன் முதலில் ஏற்றுக் கொண்டதைப் பொருத்துத்தான் அவர்களுடைய உயர் அந்தஸ்து இருக்கும். அவர்களில் சிறந்தவர்கள் நேர்வழி பெற்ற கலீஃபாக்கள். அடுத்து சொர்க்கம் குறித்து நற்செய்தி கூறப்பட்ட பத்து பேர்கள். அவர்கள் நேர்வழி பெற்ற நான்கு கலீஃபாக்கள், …

Read More »

[தொடர் 14] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

கப்று வணங்கிகளின் வாதங்களும் அவற்றிற்கான மறுப்பும் வாதம்: 1) ‘எமது இரட்சகன் எங்களுக்கு வாக்களித்ததை நிதர்சனமாகவே நாம் பெற்றுக் கொண்டோம், உங்கள் இரட்சகன் உங்களுக்கு வாக்களித்ததை நீங்கள் உண்மையாகவே பெற்றுக் கொண்டீர்களா? என ‘பத்ர்’ போரில் கொல்லப்பட்டுக் கிடந்த குரைஷிக் காஃபிர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் பேசியுள்ளார்களே! இது மரணித்தவர்கள் செவிமடுப்பார்கள் என்பதைத்தானே காட்டுகின்றது. மறுப்பு: இது புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல ஹதீஸ்

Read More »

[தொடர் 13] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

கப்று வணங்கிகள் என்போர் யார்? சாதராண இந்திரியத்துளியில் இருந்து மனிதைனைப் படைத்து, பின்னர் அவனை மரணிக்கச் செய்து, அதன்பின்பும் அவனது விரல்ரேகைளில் கூட எவ்வித மாற்றமும் இல்லாது அதே அமைப்பில் அவனை எழுப்புவற்கு சக்தி பெற்ற அகலங்களின அதிபதியாகிய அல்லாஹ்வைவிட்டுவிட்டு, மரணித்த சிலருக்கு தாமாக சில சிறப்புக்களையும், கராமத்துக்களையும் வழங்கி அவர்கள் பேரில் கப்றுகளை கட்டி அவர்களின் மகிமைகளை எடுத்துக் கூறி அல்லாஹ்விடம் நேரடியாகப் பிரார்த்திப்பதை விட்டும் முஸ்லிம்களை தடுக்கின்ற …

Read More »

[தொடர் 12] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

கப்று வணங்கிகள் பற்றிய முன்னறிவிப்பு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது மரணத்தின் பின்னர் தோன்றவிருக்கும் வழிகெட்ட பிரிவுகள் பற்றியும், குழப்பங்கள் பற்றியும் முன்னறிவிப்புச் செய்திருந்தார்கள். அந்தப்பிரிவில் ஹவாரிஜ்கள் எனப்படும் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வோர் பற்றித் தெளிவாகவும், ஏனைய பிரிவுகளும் சூசகமாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்.

Read More »

[தொடர் 11] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

மக்காவாழ் காஃபிர்களின் நம்பிக்கையும், நபி (ஸல்) அவர்களும் இஸ்லாம் அல்லாஹ்வை மாத்திரம் வணங்குமாறு பணிக்கின்ற மார்க்கமாகும். அதற்காகவே மனித, மற்றும் ஜின் இனத்தினர் படைக்கப்பட்டுள்ளனர், உலகில் முதல் மனிதராக படைக்கப்பட்ட நபி ஆதம் (அலை) அவர்களின் காலம் முதல் கிட்டதட்ட பத்து நூற்றாண்டுகள் வரை மனிதர்கள் ஓரிறைக்கொள்கையிலேயே இருந்து வந்துள்ளனர் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். (இப்னு கஸீர்).

Read More »

தவ்பாவும் அதன் ஆன்மீக லௌஹீக பயன்களும்

மனிதன் மலக்குகள் போன்று தவறே செய்யாதவனாக வாழ முடியாது! ஆசாபாசங்களும், உலகியல் தேவைகளும் உணர்ச்சிகளும் நிறைந்த சமூகப் பிராணியான மனிதன் தெரிந்தோ தெரியாமலோ, திட்டமிட்டோ திட்டமிடாமலோ பல்வேறு தவறுகளைச் செய்யலாம். ஆதி பிதா ஆதம்(அலை) அவர்களும், முதல் தாய் ஹவ்வா(அலை) அவர்களும் ஷைத்தானின் தூண்டுதலால் அல்லாஹ்வின் கட்டளையை மீறியமையை குர்ஆன் மூலம் நாம் அறிகின்றோம்.

Read More »

[பாகம்-1] முஸ்லிமின் வழிமுறை.

அல்லாஹ்வை நம்புவது. ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை எவ்வாறு நம்ப வேண்டுமெனில், இறைவன் ஒருவன் இருக்கின்றான்,அவன் தான் வானங்களையும் பூமியையும் படைத்தவன்! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன். அனைத்துக்கும் இரட்சகனும், எஜமானனும் அவனே! வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் பரிபூரணமானவன்! என்று நம்ப வேண்டும். இதற்கு அறிவு பூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் சான்றுகள் உள்ளன. அவற்றுள் சில: அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான்; அவனே சகல படைப்பினங்களையும் படைத்து பரிபாலிப்பவன்; …

Read More »