Featured Posts

நூல்கள்

பலவந்த திருமணம், திருமணம் செய்ய தடுக்கப்பட்ட உறவுகள் | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-34 [சூறா அந்நிஸா–11]

பலவந்த திருமணம்: ‘நம்பிக்கை கொண்டோரே! பெண்களை பலவந்தமாக நீங்கள் உரித்தாக்கிக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. அவர்கள் பகிரங்கமான ஏதேனும் மானக் கேடான செயலைச் செய்தாலேயன்றி அவர்களுக்கு நீங்கள் வழங்கியவற்றில் சிலதைப் பறித்துக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள். அவர்களுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தாலும் (பொறுத்துக் கொள்ளுங்கள்.) ஏனெனில், நீங்கள் ஒன்றை வெறுக்க, அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருக்கக் கூடும்.” (4:19) ஆரம்ப காலத்தில் திருமணத்தில் …

Read More »

விபச்சாரக் குற்றமும் நான்கு சாட்சியமும் | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-33 [சூறா அந்நிஸா–10]

“உங்கள் பெண்களில் எவரேனும் மானக் கேடான செயலைச் செய்துவிட்டால் அவர்களின் மீது (அதை நிரூபிக்க) உங்களில் நான்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்கள் மரணிக்கும் வரை, அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.” (4:15) இந்த வசனத்தின் முதல் பகுதி விபச்சாரக் குற்றத்தை நிரூபிப்பதற்கு நான்கு சாட்சிகள் தேவை என்கின்றது. அந்நான்கு சாட்சிகளும் தவறை நேரடியாகக் கண்டவர்களாகவும் …

Read More »

குத்பாவின் ஒழுங்குகள் | ஜூம்ஆத் தொழுகை-6 [பிக்ஹுல் இஸ்லாம்-044]

குத்பாவின் ஒழுங்குகள் ஜும்ஆத் தொழுகை என்பது இரண்டு குத்பா உரைகளையும் இரண்டு ரக்அத்துத் தொழுகையையும் கொண்டது என்பதை முன்னரே குறிப்பிட்டோம். ஜும்ஆ தொழுகை நிறைவு பெற குத்பா என்பது ஷர்த்தாகும். நபி(ச) அவர்கள் தன் வாழ்நாளிலே எந்த ஜும்ஆத் தொழுகையையும் குத்பா இல்லாமல் நிகழ்த்தியதே இல்லை. அத்துடன், ‘நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமை தினத்தில் தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவு கூர்வதன்பால் நீங்கள் விரைந்து செல்லுங்கள். இன்னும், வியாபாரத்தையும் விட்டு …

Read More »

பீ.ஜே. யின் கருத்துக்களை மீளாய்வு செய்யுங்கள் (2)

– S.H.M. Ismail Salafi 2. குர்ஆனின் நேரடி அர்த்தத்திற்கு மாற்றமாகத் தனது விளக்கத்தை முற்படுத்துதல். இவரது தர்ஜுமா விளக்கக் குறிப்புக்களில் அநேகமாக இந்தத் தவறைச் செய்துள்ளார். உதாரணமாக: ஆதம், ஹவ்வா இருவரையும் அல்லாஹ் சுவர்க்கத்தில் நிர்வாணமாக விடவில்லை. ஆடையுடன்தான் விட்டான் என குர்ஆன் கூறுகின்றது. ‘நிச்சயமாக அதில் நீர் பசித்திருக்க மாட்டீர். மேலும், நீர் நிர்வாணமாக இருக்கவும்; மாட்டீர்.’ (20:118) ‘சுவர்க்கத்தில் நிர்வாணமாக மாட்டீர்கள்’ என அல்லாஹ் கூறுகின்றான். …

Read More »

இலங்கை அரசியல் குழப்பமும் உணர வேண்டிய உண்மைகளும்

ஆசிரியர் பக்கம் – டிசம்பர் 2018 S.H.M. இஸ்மாயில் ஸலபி உண்மை உதயம் மாதஇதழ் இலங்கை அரசியல் குழப்பமும் உணர வேண்டிய உண்மைகளும் இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது. இக்கட்டுரை வெளிவரும் போது இந்தப் பிரச்சினை ஒரு தீர்வுக்கு வந்திருக்கலாம் அல்லது இன்னொரு கட்டத்திற்கு மாறியிருக்கலாம். ஆனால், சில உண்மைகளை இவ்வாக்கத்தின் மூலம் உணர்த்த நாடுகின்றோம். பிரதமர் நீக்கமும் …

Read More »

ஜும்ஆப் பிரசங்கத்துக்கு முன் மஃஷர் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பு | ஜூம்ஆத் தொழுகை-5 [பிக்ஹுல் இஸ்லாம்-043]

மஃஷர் முஅத்தின் சுன்னத்துத் தொழச் சொல்லி மக்கள் எல்லாம் எழுந்து தொழுத பின்னர் முஅத்தின் அஸாவைப் பிடித்துக் கொண்டு அரபியிலும் தமிழிலும் ஒரு குட்டி குத்பா செய்வார். அதுதான் மஃஷர் ஓதுதல் என்று மக்களால் கூறப்படுகின்றது. அந்தக் குட்டிக் குத்பாவில் ‘யா மஃஷரில் முஸ்லிமீன்’ என அவர் ஆரம்பிப்பார். அதில் மஃஷரில்” என்று வருவதால் மக்கள் மஃஷர் ஓதுதல் என்று இதற்குக் கூறுகின்றனர். அதில் அவர் குத்பாவை காது தாழ்த்திக் …

Read More »

ஜும்ஆவின் முன் சுன்னத்து | ஜூம்ஆத் தொழுகை-4 [பிக்ஹுல் இஸ்லாம்-042]

ஜும்ஆவின் முன் சுன்னத்து முதல் அதான் கூறப்பட்ட பின்னர் முஅத்தின் ஜும்ஆவின் முன் சுன்னத்தை தொழுமாறு கூறுவார். அதன் பின் எல்லோரும் எழுந்து ஜும்ஆவின் முன் சுன்னத்துத் தொழுவர். இந்தப் பழக்கம் இலங்கையில் மட்டுமல்லாது மற்றும் பல நாடுகளிலும் உள்ளது. சென்ற இதழில் நபி(ச) அவர்கள் காலத்திலும் அபூபக்கர், உமர்(வ) இருவர் காலத்திலும் உஸ்மான்(வ) அவர்களின் ஆட்சியின் ஆரம்ப காலத்திலும் ஜும்ஆவுக்கு ஒரு அதான் மட்டுமே கூறப்பட்டு வந்தது. அந்த …

Read More »

கவாரிஜிய சிந்தனை – ஓர் அறிமுகம்

-எம்.ஐ அன்வர் (ஸலபி)- இஸ்லாமிய வரலாற்றில் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு உமர் (ரழி) அவர்களின் கொலையோடு அரசியல் மற்றும சமூகரீதியான கெடுபிடிகளுக்கான பித்னாவின் வாசல் திறக்கப்பட்டது. வரலாற்றில் “பித்னா” நிகழ்வு என்று குறிப்பிட்டு அழைக்கப்படும் உஸ்மான் (ரழி) அவர்களின் படுகொலை சம்பவத்தின் பின்னர் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்ட அரசியல் கருத்து முரண்பாடு இஸ்லாமிய உம்மத்தின் ஐக்கியத்தில் பிளவுகள் ஏற்படக் காரணமானது. அலி (ரழி) அவர்களின் ஆட்சியில் முஸ்லிம்கள் இரு …

Read More »

அஹ்லுல் பித்ஆ அடிப்படை அடையாளம்

நபி(ச) அவர்களது மரணத்திற்குப் பின்னர் இஸ்லாத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட சிந்தனைகள், செயல்கள், வார்த்தைகள் அனைத்தும் பித்அத்துக்கள் ஆகும். இந்த பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகளாகும். தனக்குப் பின்னர் இந்த உம்மத்தி;ல் பித்அத்துக்கள் தோன்றும் என்றும் அப்போது நபி(ச) அவர்களது சுன்னாவையும் நேர்வழி நடந்த கலீபாக்களின் வழிமுறைகளையும் இறுகப் பற்றிப் பிடிக்கும் படியும் நபி(ச) அவர்கள் எமக்கு வஸிய்யத் செய்துள்ளார்கள். ஒரு பித்அத்தான செயல் உருவாக்கப்பட்டால் அந்த பித்அத்தைச் செய்யும் பித்அத்வாதி சுன்னாவும் …

Read More »

அன்பான இறைவன் தண்டிக்கலாமா? [இஸ்லாம் விமர்சனங்களும் விளக்கங்களும் – 2]

அன்பான இறைவன் தண்டிக்கலாமா? முஸ்லிம்கள் அல்லாஹ்வை அளவற்ற அருளாளன்’ நிகரற்ற அன்புடையோன் என்று போற்றுகின்றனர். ஆனால், குற்றங்களுக்கு இஸ்லாம் விதிக்கும் தண்டனைகளைப் பார்த்தால் அந்த சட்டங்களைச் சொல்பவன் அன்பாளனாக இருக்க முடியாது. அத்துடன் நரகம் பற்றி குர்ஆன், ஹதீஸ் குறிப்பிடுகின்ற செய்திகளையும் பார்த்தால் அன்புள்ள இறைவன் எப்படி இப்படியெல்லாம் தண்டிப்பவனாக இருக்க முடியும் என்ற கேள்வியே எழுகின்றது என சிலர் விமர்சனம் செய்கின்றனர். இந்த விமர்சனங்களைச் செய்பவர்கள் இஸ்லாமிய குற்றவியல் …

Read More »