Featured Posts

உண்மை உதயம் மாத இதழ்

பித்அத்தின் வகைகள் (பகுதி-2)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) பித்அத் ஹகீகிய்யா; பித்ஆ இழாபிய்யா ‘பித்அத்’ என்பது மார்க்கத்தில் புதிதாக நுழைவிக்கப்பட்ட அம்சமாகும். நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் மார்க்கத்தின் பெயரில் உருவான ஆதாரமற்ற அனைத்து வழிபாடுகளும், கொள்கைகளும் பித்அத்துகளாகும். பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகள் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். எனினும் பித்அத்தில் அதன் தன்மைக்கு ஏற்பவும், அதன் பாரதூரத்திற்கு ஏற்பவும் பல வகைகள் உள்ளன. எத்தனை வகைகள் இருந்தாலும் அத்தனையும் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதில் …

Read More »

பித்அத்தின் வகைகள் (பகுதி-1)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) கொள்கை சார்ந்த பித்அத்துகள்: மார்க்கத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து பித்அத்துகளும் வழிகேடுகள் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை. இருப்பினும் பித்அத் பற்றிப் பேசும் எமது சகோதரர்கள் பித்அத் பற்றி விரிவான விளக்கத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

Read More »

அச்சமூட்டும் இயற்கைச் சூழ்நிலை

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) டிசம்பர் 26 மறக்க முடியாத தினம்! இலட்சக்கணக்கான உயிர்களைக் குடித்துக் கோடிக்கணக்கான சொத்துகளைக் காவு கொண்ட தினம்! பூவுக்குள் பூகம்பம் போன்று நீருக்குள் இவ்வளவு ஆக்ரோஷமா? தண்ணீருக்கு இப்படியொரு சக்தியா? எனத் திறந்த விழிகளை மூடாமல் மக்களை அதிர வைத்த தினம்! ஆறு வருடங்கள் உருண்டோடி விட்டாலும் டிசம்பர் வரும் போது கடலோரப் பிரதேச மக்களைச் சுனாமி அச்சம் தொற்றிக்கொள்கின்றது.

Read More »

பித்அத் தவிர்ப்போம்!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) “அஹ்லுஸ் ஸுன்னா”, “பிர்கதுன்னாஜியா” (வெற்றி பெற்ற பிரிவினர்), அத்தாயிபதுல் மன்ஸூரா (உதவி செய்யப்படும் குழுவினர்) என்றெல்லாம் சிறப்பித்துக் கூறப்படும் சுவனம் செல்லும் பிரிவினரின் பண்புகளில் பித்அத்தை விட்டும் விலகியிருப்பதும் ஒன்றாகும். பித்அத்தைத் தவிர்ப்பதும், அதை எதிர்ப்பதும் அஹ்லுஸ் ஸுன்னாவின் பண்பாகும்.

Read More »

ஹஜ்-உம்றா திக்ருகள்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) உம்றாவுக்குச் செல்பவர் குறித்த எல்லையில் இஹ்றாம் அணிந்து.. لَبَّيْكَ عُمْرَةً என்று கூறிக்கொள்ள வேண்டும். ஏதேனும் நோய் ஆபத்து நேரலாம் எனப் பயந்தால் اللَّهُمَّ مَحِلِّي حَيْثُ حَبَسْتَنِي என்று கூறிக்கொள்ள வேண்டும்.

Read More »

நபியவர்கள் செய்த ஹஜ் – ஓர் நேர்முக வர்ணனை

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) நபி(ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு முறையே ஹஜ் செய்துள்ளார்கள். “உங்களது ஹஜ்ஜை என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்!” என்று கூறிய நபியவர்கள், ஹஜ்ஜின் முன்மாதிரியாகத் தன்னையே எடுத்துக்கொள்ள வேண்டுமெனப் பணித்துள்ளார்கள். இந்த வகையில் நபியவர்களின் ஹஜ்ஜைக் கண்ணால் கண்ட ஸஹாபாக்கள் வர்ணிக்கும் ஹதீஸைக் கீழே தருகின்றோம்.

Read More »

கேள்வி-பதில் (ஹஜ் தொடர்பானவை)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) பயண அறிவிப்பு கேள்வி:- ஹஜ்-உம்றாச் செய்யும் ஒருவர் தனது பயணம் குறித்துப் பிறருக்கு அறிவிக்கலாமா? பதில்:- “அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்றாவையும் நிறைவு செய்யுங்கள்.” (2:196)

Read More »

ஹாஜிகளே!, இதயத்தில் இரக்கம் பிறக்கட்டும்! உள்ளத்தின் கதவுகள் திறக்கட்டும்!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) “ஹஜ் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். கலிமா, தொழுகை, நோன்பு என்பன உடலுடன் மட்டும் சம்பந்தப்பட்ட வணக்கங்களாகும். “ஸகாத்” பணத்துடன் மட்டும் சம்பந்தப்பட்ட இபாதத்தாகும். ஆனால் ஹஜ் பணத்தாலும், உடலாலும் செய்யப்படும் தியாகமாகும். எனவே ஹஜ் ஏனைய இபாதத்களை விடச் சற்று மாறுபட்ட தன்மையைக் கொண்டதாகும்.

Read More »

பித்அத் தோன்றி வளர வழிவகுக்கும் காரணிகள்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) மார்க்கத்தின் பெயரில் உருவான மார்க்க அங்கீகாரமில்லாத கொள்கைகள், வணக்க-வழிபாடுகள், சடங்கு-சம்பிரதாயங்களே “பித்அத்துக்கள்” எனப்படுகின்றன. இந்த பித்அத்தான கொள்கைகளுக்கும், நடைமுறைகளுக்கும் குர்ஆனிலோ, ஆதாரபூர்வமான ஸுன்னாவிலோ எத்தகைய அங்கீகாரமோ, வழிகாட்டல்களோ இருக்காது. மக்கள் இவற்றை நன்மையை நாடிச் செய்தாலும், இவை எந்த நன்மையையும் ஈட்டித் தரப் போவதில்லை!

Read More »

பைபிளில் நபித்தோழர்கள் – அல்குர்ஆன் விளக்கவுரை

அல்குர்ஆன் அற்புத இறை வேதமாகும். அதில் பல்வேறுபட்ட முன்னறிவிப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. அத்தகைய முன்னறிவிப்புகளில் விஞ்ஞான உண்மைகள், வரலாற்று உண்மைகள், தொல்பொருள் ஆய்வுகள் பற்றிய முன்னறிவிப்புகள் என்பன உள்ளடங்குகின்றன. அவ்வாறே முன்னைய வேதங்களில் இஸ்லாம் பற்றியும், நபி(ஸல்) அவர்கள் பற்றியும் அறிவித்தல்கள் உள்ளன என்ற அறிவிப்பையும் குர்ஆன் கூறுகின்றது.

Read More »