Featured Posts
Home » இஸ்லாம் (page 95)

இஸ்லாம்

இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்..!

ஷாபிஈ இமாமின் பெயரால் அல்லது ஷாபிஈ மத்ஹபின் பெயரால் இப்படி தான் செய்ய வேண்டும் என்று சொல்லக் கூடிய நல்லுள்ளம் படைத்தவர்களுக்கு இது ஒரு நற் செய்தியாக அமையட்டுமாக! குர்ஆன் அல்லது ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டினாலும், இல்லை நாங்கள் ஷாஃபி மத்ஹபு, அந்த மத்ஹபின் அடிப்படையில் தான் அமல்களை நடை முறைப்படுத்துவோம். என்று பிடிவாதம் பிடிக்க கூடியவர்கள் பின் வரும் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் சொற்களை நடைமுறைப்படுத்துவார்களா ? …

Read More »

அல்குர்ஆன் விளக்கக் குறிப்புகள்

தடம் புரளும் உள்ளங்கள் ‘எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நீ நேர்வழி காட்டிய பின்னர் எங்கள் உள்ளங்களை தடம்புறளச் செய்து விடாதே! மேலும், உன்னிட மிருந்து அருளை எமக்கு வழங்குவாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளனாவாய்.’ (3:8) முதஷாபிஹத்தான வசனங்களை வைத்து உள்ளத்தில் குழப்பமுள்ளவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்று எச்சரிக்கை செய்த பின்னர் இந்த துஆவை அல்லாஹ் எமக்குக் கற்றுத் தருகின்றான். நேர்வழி என்பது அல்லாஹ்வின் கையில் இருக்கின்றது. உள்ளத்தில் நோய் …

Read More »

நாற்பது வயதில் புரியும்..

‘மனிதன் தனது பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென, நாம் உபதேசித்தோம். அவனை அவனது தாய் சிரமத்துடனே சுமந்து, சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுத்தாள். அவனை(க் கர்ப்பத்தில்) சுமப்பதும், அவனுக்குப் பால் குடியை மறக்கடிக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும். அவன் தனது வாலிபத்தை முழுமையாக அடைந்து, நாற்பதாவது வயதை அடையும் போது, ‘என் இரட்சகனே! நீ எனக்கும் எனது பெற்றோருக்கும் செய்த அருட்கொடை களுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் …

Read More »

அல்குர்ஆன் விளக்கக்குறிப்புக்கள் – சூறா ஆலு இம்றான் தொடர் – 02

அல்லாஹ் மட்டும் அறிவான் முதஷாபிஹத்தான ஆயத்துக்களின் விளக்கத்தையும் இறுதி முடிவையும் அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று பொருள் செய்வதுதான் பொருத்தமானது என்பதைச் சென்ற இதழில் பார்த்தோம். அதற்கு மாற்றமாக பொருள் செய்யும் போது அனைத்தும் எமது இறைவனிடம் இருந்தே வந்தன என அல்லாஹ்வும் அறிவுடையோரும் கூறுவார்கள் என அர்த்தம் செய்ய நேரிடும். இது குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும் என்பதைக் கண்டோம். முஹ்கம், முதஷாபிஹாத் இரண்டுமே ஒன்றுபோன்றது என்றால் அல்லாஹ் இரண்டையும் வேறுபடுத்திக் …

Read More »

அடிபணிந்தால் அதிகாரம் வரும்

அல்லாஹ்வுக்கு இணை வைக்காமல் முறையாக அடிபணிந்தால் ஆட்சி அதிகாரம் வரும் என அல்லாஹ் அல்குர்ஆனில் வாக்களிக் கின்றான். ‘உங்களில் நம்பிக்கை கொண்டு, நல்லறங் களும் புரிந்தோருக்கு, இவர்களுக்கு முன்னுள் ளோர்களை பூமியில் அதிபதிகளாக்கியது போன்று இவர்களையும் ஆக்குவதாகவும், இவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட இவர்களது மார்க்கத்தை உறுதிப்படுத்துவதாகவும், இவர்களது அச்சத்திற்குப் பின்னர் நிச்சயமாக பாதுகாப்பை இவர்களுக்கு ஏற்படுத்துவதாகவும் அல்லாஹ் வாக்களிக்கின்றான். இவர்கள் எனக்கு எதனையும் இணையாக்காது என்னையே வணங்குவார்கள். இதன் …

Read More »

வரதட்சணை ஒரு வன்கொடுமை (eBook)

வரதட்சணை ஒரு வன்கொடுமை முன்னுரை திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடமிருந்து பெருந்தொகையை வரதட்சணையாகப் பெறுகின்றனர். இந்த கொடுமை இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலும் கேரள மாநிலத்திலும் அதிகமாக உள்ளது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு நம் நாட்டில் மட்டும் வரதட்சணைக் கொடுமை தலைவிரித்தாடுகின்றது. வரதட்சணையால் பெண் இனமும் பெண்ணைப் பெற்றவர்களும் படும் துன்பங்களை ஒவ்வொரு நாளும் கண்கூடாக பார்த்துவருகிறோம். இஸ்லாமில் வரதட்சணை வாங்குவதற்கு கடுகளவு கூட …

Read More »

நபிவழியில் குழந்தை வளர்ப்பு (eBook)

நபிவழியில் குழந்தை வளர்ப்பு ஆசிரியர். அப்பாஸ் அலீ MISC பொருளடக்கம் 1. குழந்தை பாக்கியத்தைக் கேட்க வேண்டும். 2. பெண் குழந்தைகளை வெறுக்கக் கூடாது. 3. குழந்தைகளைக் கொல்வது மாபெரும் குற்றம். 4. குடும்பக் கட்டுப்பாடு செய்யலாமா? 5. குழந்தையின் காதில் பாங்கு சொல்ல வேண்டுமா? 6. பெயர் சூட்டுதல். 7. அகீகா. 8. முடியின் எடைக்கு நிகரான வெள்ளியைக் கொடுக்க வேண்டுமா? 9. பால் புகட்டுதல். 10. கத்னா …

Read More »

ஜின்களும் ஷைத்தான்களும் (eBook)

ஜின்களும் ஷைத்தான்களும் ஆசிரியர்: எஸ். அப்பாஸ் அலீ MISc மின் புத்தகத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும். Size: 35 MB

Read More »

முதலில் கொள்கையில் தெளிவுபெறுவோம்!

நவீன உலகில் முஸ்லிம் பெருபாலானவர்கள், நாம் உண்டு நமது வேலையுண்டு என்று இயந்திர மயமான வாழ்வில் தமது பிள்ளைகளுக்கோ, தம்மை சார்ந்தவர்களுக்கு அல்லது தனது பொறுப்பிலுள்ளவர்களுக்கு இஸ்லாம் பற்றி போதிப்பது என்பது இல்லை என்று சொல்வதைவிட அதுபற்றிய சிந்திப்பது இல்லை என்று தான் கூற வேண்டும். ஒரு காலத்தில் பள்ளிவாசலில் அதிகாலையில் நடைபெறும் மக்தப் என்று சொல்லக்கூடிய சிறுவர் மதரஸாவில் போதிக்கபட்ட இஸ்லாமிய அடிப்படைகள் இன்றைய நிலைமை என்ன? எத்தனை …

Read More »