Featured Posts
Home » 2005 (page 11)

Yearly Archives: 2005

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 7

முஸ்லிம்களை தீயிட்டு கொளுத்திய கயவர்கள் எந்த வித சலனமும் இல்லாது அமைதியாக திரும்ப சென்றனர், தங்களுடைய வேலை முடிந்த திருப்தியில். எரிந்து கொண்டிருந்த முஸ்லிம்களின் கதறல் இவர்களை இம்மி அளவும் கரைத்திட வில்லை. மாறாக எரிவதை கண்டு ரசித்தார்கள். இவர்களின் கல் மனதுக்கு இன்னொரு சான்றாக அமைந்தது சாலியா பீவி என்ற பெண்ணுக்கு இவர்கள் செய்த கொடுமை. முஸ்லிம் பெண்களே முக்கிய இலக்கு சிலுவை போரின் போது, கிருஸ்தவ மதவெறியர்கள் …

Read More »

நினைவலைகள் (சிறுகதை)

பஷீர் அஹமது உள்ளே நுழையும் போது… “மிலிட்டரி லைன் ஜும்மா பள்ளிவாசல்” என்று பெரிய பலகையில் எழுதியிருந்தது. பள்ளிவாசலுக்கும் பஷீர் அஹமதுக்கும் உள்ள தொடர்பு மிக்க ஆழமானது. பள்ளியைச் சுற்றி கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு இருந்தனர். பள்ளிவாசலின் உள்ளே நுழைந்ததும் இடது கோடியில் “சிந்தா மதார்ஷா ஒலியுல்லா தர்ஹா” என்று பச்சை நிறப் பலகையில் எழுதப்பட்டிருந்தது. மண் வாசனையுடன் கூடிய ரம்யமான குளிர்ந்த காற்று. இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன.

Read More »

சுமைதாங்கி (சிறுகதை)

ஊசியால் குத்தும் குளிர் காற்றில் ஊரே அடங்கியிருந்தது. தலையில் மஃப்ளரை சுற்றி உடல் முழுவதையும் கம்பளிப் போர்வையால் போர்த்தி வாசலில் அமர்ந்திருந்தார் காவலாளி மம்முசாலி.

Read More »

அவர்கள் உங்கள் சகோதரர்கள்! (நீதிக்கதை)

நினைவு தெரிந்த நாள் முதல் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் நிறை வேற்றி வந்த அஹ்மது பாய் அன்று பத்து நிமிடம் தாமதமாகி வந்ததால், ஜமாஅத்தை தவற விட்டுவிட்டார். அந்த ஆதங்கத்தில் தொழுகை நேரம் முடிவதற்குள் ஃபஜ்ர் தொழுகையை தொழுது விட வேண்டுமே என பள்ளியை நோக்கி விரைகிறார்.

Read More »

கனாக் கண்டேன்(டி) [சிறுகதை]

“சும்மா இருங்கம்மா! இப்படி பணம். பணம்ன்னு அலையறவங்களுக்கு உறைக்கிறமாதிரி நாலு வார்த்தை கேட்டால்தான் புத்தி வரும். கல்யாணங்கறது ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். ஆனா, கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு லட்சம் வேணும் 100 பவுன் நகை வேணும்னு வியாபார ஒப்பந்தம் போட வந்துருக்காங்க”.

Read More »

இந்தியாவில் இஸ்லாம்-2

கவனக்குறைவால் அழிந்துப்போன விலைமதிப்பற்ற ஆவணங்கள் சங்க காலத்துக்குப் பின்னர் கி.பி. 6, 7, 8 நூற்றாண்டுகள் தமிழகத்தையும், கேரளாவையும் பொறுத்தவரையில் வரலாற்றில் இருண்ட காலமாகும்(?) “சங்க காலத்தைப் பின்தொடருவது வரலாற்று ரீதியாகப் பார்ப்பின் விடியாத இரவு. தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகளுக்கு அதிகமான காலத்தைப் பற்றி நமக்கு எதுவும் அறிய வாய்ப்பில்லை” என்று திரு. கே.ஏ. நீககண்ட சாஸ்திரி தனது தென்னிந்திய வரலாறு (மலையாள மொழிபெயர்ப்பு) நூலில் பக்கம் 159-ல் குறிப்பிடுகிறார். …

Read More »

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 6

2002க்கு முன் நடந்த கலவரங்களினால் பெரும்பாலான முஸ்லிம்கள் இப்பவும் தலை நிமிர முடியாமல், அடிமைகளை போல வாழ்கின்றனர். மீதமுள்ளவர்களையும் அழித்து அவர்களின் சொத்துகளையும் அழித்து அடிமையின் நிலைக்கு கொண்டு செல்ல மீண்டும் ஒரு கலவரம் வெடித்தது. அது தான் 2002 கலவரம். இந்த கலவரத்தில், இதற்கு முன் எப்போதும் நடந்திராத அளவுக்கு கொலைகளும், கொள்ளைகளும், கற்பழிப்புகளும் நடந்தது. மதவெறிபிடித்த இந்துக்கள் வெறிபிடித்த மிருகத்தை விட மிகமோசமாக நடந்து கொண்டனர். ‘இவர்களெல்லாம் …

Read More »

87] யுத்தம்தான் என்று தீர்மானமாகிவிட்டது

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 87 பாலஸ்தீன் அரேபியர்களின் ஒரே அரசியல் பிரதிநிதியாக, யாசர் அராஃபத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதற்கான அரசியல் காரணங்களை விளக்க அவசியமே இல்லை. முன்பே பார்த்ததுபோல், அராஃபத்தும் சரி, அவரது இயக்கமும் சரி… மதத்தை முன்வைத்து யுத்தம் மேற்கொண்டதில்லை என்பது ஒன்று. இரண்டாவது, ஹமாஸ் போன்ற இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இடைக்கால, தாற்காலிக ஒப்பந்தங்கள் செய்துகொள்வது என்பது சாத்தியமில்லாத விஷயம். உட்கார்ந்து பேசுவதற்கு, ஏதேனும் ஓர் …

Read More »

அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 2

அமானுடக் கேள்விகளும் அரைகுறை ஞானிகளும் தொடரின் முதல் பகுதி பற்றியும் பின்னூட்டங்கள் பற்றியும் சில கருத்துக்களை குறிப்பிட விரும்புகிறேன். முதல் பகுதி தமிழோவியத்தில் வெளியானதும், தனி மனித விமர்சனத்தை தவிர்க்க வேண்டுகோள் வைத்த திரு.நேசகுமார் படிப்படியாக தன் நிதானம் இழந்து நாகூர் ரூமியின் மேலுள்ள வெருப்பை இஸ்லாத்தின் மீதான வெருப்பாக பின்னூட்டங்கள் மூலமும் தனிப்பதிவாகவும் கொட்டினார். தானும் ஆரோக்கியமும் இஸ்லாத்தின்பால் கொண்டுள்ள துவேசத்தை பாகிஸ்தானில் இந்துக்கள் கொடுமைப்படுத்தப் பட்டதுடனும், குஜராத்தில் …

Read More »

இந்தியாவில் இஸ்லாம்-1

புதிய வரலாற்றுத் தொடர் – தோப்பில் முஹம்மது மீரான் தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் நாடறிந்த நல்ல சிறந்த எழுத்தாளர், பிரபல நாவலாசிரியர். தோப்பில் மீரான் எழுதிய நாவல்கள்-புதினங்கள், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான வாசகர்களால் பாராட்டப்பட்டவைகளாகும். ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ ‘கூனன் தோப்பு’ ‘தங்கராசு’ இவைகள் மீரானின் சிறந்த படைப்புகள். தோப்பில் மீரான் தனது எழுத்துப்பணிகளை நாவலாசிரியர் என்ற அளவில் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர் வரலாற்று கட்டுரைகளையும் …

Read More »