Featured Posts
Home » 2006 (page 21)

Yearly Archives: 2006

குரங்கு விசாவில்.. (நீதிக்கதை)

ஓர் அரபுநாட்டு வனவிலங்குக் காட்சியகத்தில் பல்வகை விலங்குகள் இருந்தன. இல்லாத விலங்குகளில் சிங்கமும் ஒன்று. காட்சியகத்துக்காக வெளிநாட்டிலிருந்து சிங்கம் ஒன்றை வாங்குவது என்று A.R.D. முடிவு செய்தது. சிங்கத்தை வாங்கும் பொறுப்பு, கொள்முதல்துறை நிர்வாகியான மிஸ்ரியிடம் விடப் பட்டது.

Read More »

கடவுளின் பெயரால் (சிறுகதை)

ஊரிலிருந்து ஒதுக்குப்புறமாக உள்ள காட்டில் எப்படி வந்தது செம்பருத்திச் செடி என்று தெரியவில்லை. ஒரு ஆள் கத்தியில் செம்பருத்திப்பூவை தேய்த்து உலரவைப்பதும் பிறகு மீண்டும் தேய்ப்பதுமாக இருந்தான்.

Read More »

நபி(ஸல்)அவர்கள் செய்த உளு…

136- அம்ர் பின் அபீ ஹஸன், அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி) இடம் நபி (ஸல்) அவர்களுடைய உளூவைப் பற்றிக் கேட்டார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்று உளூ செய்து காட்டினார்கள். பாத்திரத்திலிருந்து தண்ணீரை தமது கையில் ஊற்றி முன் இரு கைகளையும் மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தமது கையைப் பாத்திரத்தில் …

Read More »

பொய்யர்களின் கடைசிப் புகலிடம்.

இஸ்லாம் மார்க்கத்தைக் களங்கப்படுத்திட களமிறங்கிய இஸ்லாத்தின் எதிரிகளின் ஆய்வறிவற்றப் பொய்ப் பிரச்சாரங்கள் பிரமிக்க வைக்கிறது. இஸ்லாத்தை விமர்சிக்கவென்றே, இஸ்லாத்தைப் படிக்கும் இந்தப் பக்கத்துக் காஃபிர்கள், என்னதான் வாசிக்கிறார்கள்? இருப்பதை இல்லையெனவும், இல்லாததை இருப்பதாகவும் சொல்வதற்கா..? இஸ்லாத்தின் மீது விஷத்தைத் துவிடக் கிளம்பிய வெஷ குமார் – அபு லபு என்று அடித்துக் கொண்ட இவரை, நேசம், வெஷம் என்று எழுத எமக்கு உரிமையுண்டு என்றாலும், வேண்டாம் நேசகுமார் என்றே குறிப்பிடுவோம். …

Read More »

உளுச் செய்யும் முறை………

135-உதுமான் பின் அஃப்பான் (ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். தமது இருகைகளையும் மூட்டு வரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தமது கால்களையும் …

Read More »

தொழுகைக்கு உளு அவசியம் என்பது பற்றி…

பாடம் – 2 சுத்தம் 134- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு சிறுதுடக்கு ஏற்பட்டால் நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்து கொள்ளாதவரை உங்கள் தொழுகையை அல்லாஹ் ஏற்கமாட்டான். புகாரி- 6954:அபூஹூரைரா (ரலி)

Read More »

கிறிஸ்தவர்களின் பார்வையில் இஸ்லாம்

கத்தோலிக்க மதகுரு புனிதபோப் பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் கடந்த செப்டம்பர்-12 அன்று ஜெர்மனியில் ஒரு பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் போது, பதினான்காம் நூற்றாண்டில் துருக்கியை ஆண்ட பைசாந்திய மன்னன் மானுவேல் இரண்டாம் பாலியோலோகஸ் (Manuel II Paleologus)க்கும்,மன்னனுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன ஒரு பார்ஸிய அறிஞருக்கும் நடந்த உரையாடலின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டிப் பேசியதால் பெரும் கண்டனத்திற்கு ஆளாகி மன்னிப்புக் கேட்டுள்ளார் . பதினான்காம் நூற்றாண்டு உரையாடலை மேற்கோள் காட்டிய …

Read More »

கொள்கையால் வேறுபட்டவர்கள்.

மனதால் கொள்கையில் மாறுபட்டவர்கள் மண வாழ்க்கையில் இணைந்தால்..? அனைத்திற்கும் ஒரே, ஒரு இறைவன் மட்டுமே இருக்கிறான் என்பதே இஸ்லாம் மார்க்கத்தின் இறைக் கொள்கை. இந்தக் கொள்கையால் மற்ற மதங்களிலிருந்து இஸ்லாம் வேறுபடுகிறது. மட்டுமல்ல, சட்ட திட்டங்கள், வணக்க வழிபாடுகள், கொள்கைகள் என எல்லா விஷயங்களிலும், பிற மதங்களிலிருந்து இஸ்லாம் தனிவழி கொண்டிருக்கிறது. இல்லறத் துணை என்பது மனித வாழ்வில் மிக முக்கியத் தேவை. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஆண், பெண் …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (19)

மேலே விவரிக்கப்பட்ட நிகழ்ச்சிப்போக்கு, சில மாற்றங்களுடன் மேனாடுகளின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடி விடுதலையடைந்த எல்லா முஸ்லிம் நாடுகளிலும் இடம் பெற்றது. அல்ஜீரியாவில் பெரும் இடர்பாடுகளுக்கிடையே நீண்ட காலமாக மக்கள் கடுமையாகப் போராடினார்கள்.ஈவிரக்கமற்ற பிரெஞ்சு ஆட்சியாளர்கள் அவர்களைத் துன்புறுத்தியது மட்டுமன்றி சித்திரவதையும் செய்தனர். ஆனால் இக்கொடுமைகள் எதனாலும் அம்மக்களின் திடசங்கற்பத்தைக் குலைக்க முடியவில்லை. அவர்கள் தம் நீண்டகால தீவிரப் போராட்டத்தின் முடிவில் வெற்றியீட்டியபொழுது, அவர்கள் உயிரைப் பயணம் வைத்துப் போராடிப் பெற்ற …

Read More »