பாகம் 2, அத்தியாயம் 32, எண் 2014 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பாகம் 2, அத்தியாயம் 32, எண் 2015 இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் …
Read More »Daily Archives: May 19, 2007
31.தராவீஹ் தொழுகை
பாகம் 2, அத்தியாயம் 31, எண் 2008-2009 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளான் (மாதத்தின் சிறப்பு) பற்றி கூறினார்கள். “ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையைய் எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். “(ரமளானின் இரவுத் தொழுகையை அவரவர் தனியாகத் தொழுது கொள்ளும்) இந்நிலையில் மக்கள் இருக்கும்பொழுது நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் …
Read More »30.நோன்பு
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1891 தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒரு கிராமவாசி பரட்டைத் தலையுடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்; ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் என் மீது கடமையாக்கிய தொழுகை எது என்று சொல்லுங்கள்! என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஐந்து நேரத் தொழுகைகள்! அவற்றைத் தவிர! (கடமையான தொழுகை வேறெதுவுமில்லை; உபரியாக) நீயாக விரும்பித் தொழுதால் மட்டுமே உண்டு!” என்று பதிலளித்தார்கள். அவர் ‘அல்லாஹ் என் …
Read More »29.மதீனாவின் சிறப்புகள்
பாகம் 2, அத்தியாயம் 29, எண் 1867 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “மதீனா நகர் இங்கிருந்து இதுவரை புனிதமானதாகும்! இங்குள்ள மரங்கள் வெட்டப்படக் கூடாது; இங்கே (மார்க்கத்தின் பெயரால்) புதியது எதுவும் உருவாக்கப்படக் கூடாது! (மார்க்கத்தின் பெயரால்) புதிய (செயல் அல்லது கொள்கை) ஒன்றை ஏற்படுத்துகிறவர் மீது அல்லாஹ்வின்.. வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்!” என அனஸ்(ரலி) அறிவித்தார். பாகம் 2, அத்தியாயம் 29, எண் 1868 …
Read More »28.(இஹ்ராம் அணிந்த நிலையில் தவறுதலாக) வேட்டையாடியதற்குரிய பரிகாரம்
பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1821 அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நான் ஹுதைபிய்யா ஆண்டில் (மக்காவுக்குப்) புறப்பட்டேன். என்னுடைய தோழர்கள் இஹ்ராம் அணிந்தனர்; நான் இஹ்ராம் அணியவில்லை. எதிரிகள் நபி(ஸல்) அவர்களின் மீது படையெடுத்து வரவிருக்கிறார்கள் என்ற செய்தி நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது. நபி(ஸல்) அவர்கள் அந்தப் படையை எதிர்கொள்ள முன்னே புறப்பட்டார்கள். நான் மற்ற நபித்தோழர்களுடன் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரிக்கலாயினர். “அப்போது நான் …
Read More »27.(ஹஜ் செய்வதிலிருந்து) தடுக்கப்படுதல்
பாகம் 2, அத்தியாயம் 27, எண் 1806 நாஃபிவு(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) குழப்பம் நிறைந்த காலத்தில் உம்ராவிற்காக மக்கவிற்குப் புறப்பட்டார்கள். ‘நான் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டால் நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் (சென்று தடுக்கப்பட்ட போது) செய்தது போல் செய்வேன்!” என்று கூறிவிட்டு உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா ஆண்டில் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்ததே இதற்குக் காரணமாகும்.
Read More »26.உம்ரா
பாகம் 2, அத்தியாயம் 26, எண் 1773 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பாகம் 2, அத்தியாயம் 26, எண் 1774 இப்னு ஜுரைஜ் அறிவித்தார். இக்ரிமா இப்னு காலித் ஹஜ்ஜுக்கு முன் உம்ரா செய்வது பற்றி இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டதற்குவர் ‘குற்றமில்லை’ …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library