Featured Posts

பெருநாளின் ஒழுக்கங்கள், சட்டங்கள் குறித்த 55 பயனுள்ள குறிப்புகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.

மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரைப் பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றுமு் உண்டாவதாக!

பெருநாளின் ஒழுக்கங்கள், சட்டங்கள் குறித்த 55 பயனுள்ள குறிப்புகள்” Click here to download the ebook” எனும் இச்சிறு நூல், கண்ணியத்திற்குரிய அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்-முனஜ்ஜித் (ஹபிழஹுல்லாஹ்) அவர்களால் தொகுக்கப்பட்ட அரபு மூலத்தின் தமிழாக்கமாகும். இது அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (http://ow.ly/wauL50ujFtu)வெளியிடப்பட்டிருந்தது.

அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்-முனஜ்ஜித் அவர்கள், ஒரு விரிவான தலைப்பை மிகச் சில குறிப்புகளுக்குள் அடக்கி, அதன் சாராம்சம் குறையாமல் அழகாக வழங்கக்கூடியவர். அந்த வகையில், ஏற்கனவே எமது தளத்தின் வழியாக:

1. “ரமழானின் இறுதிப் பத்து நாட்கள் மற்றும் லைலதுல் கத்ர் குறித்த 38 பயனுள்ள தகவல்கள்

2. “ஸகாதுல் ஃபித்ர் குறித்த 50 பயனுள்ள தகவல்கள்

ஆகிய கையேடுகள் தமிழில் மொழியாக்கத்தின் தொடர்ச்சியாகவே, பெருநாளின் சட்டதிட்டங்களை விளக்கும் இக்கையேடு தற்போது மொழியாக்கம் செய்யப்படுகின்றது.

இஸ்லாத்தின் நிழலில் இரு பெருநாள் தினங்களையும் எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களை இத்தொகுப்பு வழங்குகின்றது. குறிப்பாக:

• பெருநாள் தொழுகை எங்கே, எப்பொழுது நடத்தப்பட வேண்டும்?

• தொழுகைக்குச் செல்லும் போது ஆண்களும் பெண்களும் பேண வேண்டிய நடைமுறைகள் யாவை?

• பெருநாள் தொழுகையின் தக்பீர்கள் மற்றும் ஓதல்கள் எவை?

• பெருநாள் தினத்தில் தவிர்ந்து கொள்ள வேண்டிய தவறான நடைமுறைகள் எவை?

• வெள்ளிக்கிழமை தினத்தில் பெருநாள் வந்தால் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் என்ன?

• அண்டைவீட்டார், உற்றார் – உறவினர்களுடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்.

போன்ற பல முக்கிய விடயங்களை 55 குறிப்புகளாக ஆசிரியர் இதில் தொகுத்துள்ளார்.

ஆண்டுக்கு ஒருமுறை வரும் எமது பெருநாட்களை அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த வழியில் அமைத்துக்கொள்ளவும், விலக்கப்பட்ட காரியங்களிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக!

இவ்வண்ணம்,

உங்கள் சசோதரன்,

றஸீன் அக்பர் (மதனி)

19-03-2026 

29 ரமழான் 1447

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *