இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும்… – 13
இயேசு மனித குலத்தின் பிறவிப் பாவத்தைப் போக்க சிலுவையில் தனதுயிரை அர்ப்பணித்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையை உறுதிப் படுத்த கூறப்படும் இயேசுவின் சிலுவை மரணத்தில், பைபிள் ஏராளமான முரண்பாடான தகவல்களைக் கூறுகின்றது என்பது குறித்து நாம் பார்த்து வருகின்றோம்.
உயிர்த்தெழுந்த பின்னர் பூமியில் வாழ்ந்த காலம்:
இயேசு உயிர்த்தெழுந்த பின்னர் எவ்வளவு காலம் பூமியில் இருந்தார் என்பது குறித்தும் பைபிள் முரண்பட்ட தகவல்களைத் தருகின்றது.
‘இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்.’
(மாற்கு 16:19)
(இயேசு உயிர்த்தெழுந்த அன்றே இது நடந்ததாக மாற்கு கூறுகின்றார். விரிவாக அறிய மாற்கு 16:9-19 வரையான வசனங்களைப் பார்க்கவும்.)
இந்தத் தகவலின் படி இயேசு மரணித்தபின் உயிர்த்தெழுந்த அன்றே வானுக்கு உயர்த்தப்பட்டுவிட்டார் என்றாகின்றது. இதே கருத்தையே லூக்கா 24 ஆம் அதிகாரமும் கூறுகின்றது.
ஆனால், அப்போஸ்தவர் அதிகாரம் ஒன்றில் அவர் மரித்து எழுந்த பின்பு 40 நாட்கள் பூமியில் இருந்ததாகக் கூறப்படுகின்றது.
‘அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.’ (அப்போஸ்தலர் 1:3)
இதில் எது உண்மை? எது பொய்? இரண்டுமே உண்மையாக இருக்க முடியாது. இரண்டில் ஒன்று நிச்சயமாகப் பொய்யாகத்தான் இருக்க வேண்டும்.
வேதம் எப்படிப் பொய்யாக முடியும்? இஸ்லாம் இயேசு மரணித்ததை மறுக்கின்றது. அவர் வானுக்கு உயர்த்தப்பட்டார் என்கின்றது. மீண்டும் பூமிக்கு அனுப்பப்படுவார் என்கின்றது. இயேசுவின் சிலுவை மரணம் என்பது சோடிக்கப்பட்டது என்பதை இந்த முரண்பாடுகள் தெளிவாகவே உணர்த்துகின்றன.
இது அல்லாமல் சிலுவை சம்பவத்தில் நான்கு சுவிசேசங்களும் மிக முக்கியமான செய்திகளைத் தனித்துப் பேசுகின்றன. ஒன்றில் இருப்பது மற்றைய மூன்றில் இல்லாமல் இருக்கின்றது. இப்படி நோக்கும் போது சிலுவை சம்பவமே போலியானது என்பதை உணரலாம்.
கிறிஸ்தவ நண்பர்களே! இஸ்லாம் இயேசுவை இறைத்தூதர் என்கின்றது. அவர் அற்புதமாகப் பிறந்தவர் என்கின்றது. அவரது தாயை கற்புக்கரசி என்றும் விசுவாசிகளுக்கு முன்னுதாரணம் என்றும் கூறுகின்றது. இயேசு பல்வேறுபட்ட அற்புதங்களை நிகழ்த்தியவர் என்கின்றது.
அல்லாஹ்வின் அனுமதி கொண்டு இறந்தவர்களை உயிர்ப்பித்ததாகவும், பார்வை இழந்தவர்களை பார்வையடையச் செய்ததாகவும், குஷ்டரோகிகளை குணப்படுத்தியதாகவும் கூறுகின்றது.
யூதர்கள் அவரைக் கொலை செய்யத் தேடியதாகவும். அல்லாஹ் அவரை அவர்களது பிடியிலிருந்து காப்பாற்றியதாகவும் கூறுகின்றது.
யூதர்கள் அவரைக் கொல்லவும் இல்லை, சிலுவையில் அறையவும் இல்லை. அவருக்கு வேறு ஒருவர் ஒப்பாக்கப்பட்டார் என்றும் கூறுகின்றது. சிலுவை சம்பவத்தில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் முரண்பாட்டிலேயே இருப்பதாகக் கூறுகின்றது.
இயேசு கடவுளும் அல்லர், கடவுளின் குமாரனும் அல்லர். இயேசு இறைத்தூதர் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.
இயேசு பற்றி குர்ஆன், பைபிள் இரண்டும் கூறும் கருத்துக்களை முறையாக ஆராய்ந்தால் குர்ஆன் கூறும் கருத்துத்தான் நீதியானவை, நியாயமானவை, இயேசுவின் போதனைக்கே ஏற்றவை என்பது தெளிவாகப் புரியும்.
குர்ஆனும், பைபிளும் இயேசு பற்றிக் கூறும் கருத்துக்களைத் தொகுத்து நோக்கும் போது பைபிள் கூறும் சில தகவல்கள் இயேசுவை இழிவுபடுத்துவதாக அமைந்திருப்பதைக் காணலாம். குர்ஆன் கூறும் கருத்துக்கள் இயேசுவை கண்ணியப்படுத்துவதையும் காணலாம்.
எனவே, இயேசுவை விரும்பும் உண்மையான கிறிஸ்தவ நண்பர்களே! இயேசு பற்றி குர்ஆன் குறிப்பிடும் உண்மையான கருத்துக்களை ஏற்று இயேசுவை கண்ணியப்படுத்த வாருங்கள் என அன்பாக அழைக்கின்றோம்.
பைபிள் கூறும் சில கருத்துக்களும் கதைகளும் இயேசுவை இழிவுபடுத்துவதால் அந்தக் கருத்துக்களையும் கதைகளையும் புறக்கணித்து இயேசுவின் கண்ணியம் காக்க வாருங்கள்!
அல்குர்ஆனைப் படித்து உண்மையை அறிந்து இயேசுவை உரிய முறையில் கண்ணியப் படுத்த வருமாறு கிறிஸ்தவ நண்பர்களை அன்புடன் அழைக்கின்றோம்!
அல்குர்ஆனின் பார்வையில் இயேசுவும் அவரது தாயாரும்:
இயேசுவின் தாயார் இறை விசுவாசி-களுக்கு முன்னுதாரணமாவார்.
‘அல்லாஹ் நம்பிக்கை கொண்டோருக்கு பிர்அவ்னின் மனைவியை உதாரணமாகக் கூறுகின்றான். அவர், ‘என் இரட்சகனே! உன்னிடத்தில் எனக்காக சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுவாயாக! மேலும், பிர்அவ்னை விட்டும் அவனது (கொடிய) செயலை விட்டும் என்னைப் பாதுகாப்பாயாக! இன்னும், அநியாயக்கார இக்கூட்டத்தாரை விட்டும் என்னை பாதுகாப்பாயாக!’ என்று கூறியதை (எண்ணிப்பாருங்கள்).’
‘இன்னும் இம்ரானின் மகள் மர்யமையும் (உதாரணமாகக் கூறுகின்றான்.) அவள் தனது கற்பைக் காத்துக் கொண்டாள். எமது ‘ரூஹி’ல் இருந்து அதில் நாம் ஊதினோம். அவள் தனது இரட்சகனின் வார்த்தை களையும், அவனது வேதங்களையும் உண்மைப் படுத்தினாள். மேலும், அவள் வழிப்பட்டு நடப்போரில் ஒருவராகவும் இருந்தாள்.’ (66:11-12)
அவர் உண்மையாளராவார்,
”மர்யமின் மகன் மஸீஹ்’ ஒரு தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் பல தூதர்கள் சென்றுவிட்டனர். அவரின் தாயோ உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்பவர்களாகவே இருந்தனர். அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் எவ்வாறு தெளிவுபடுத்துகின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! பின்னர் இவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? என்பதையும் கவனிப்பீராக!’
(5:75)
ஆண் தொடர்பின்றி அற்புதமாக குழந்தை இயேசுவைப் பெற்றெடுத்தார்.
‘(நபியே!) இவ்வேதத்தில் மர்யம் குறித்தும் நினைவு கூர்வீராக! அவர் தனது குடும்பத்தை விட்டும் கிழக்குப் பக்கமுள்ள ஓரிடத்தில் தனித்தபோது. அவர் அவர்களை விட்டும் (தன்னை மறைத்துக் கொள்ள) ஒரு திரையை எடுத்துக் கொண்டார். அப்போது (ஜிப்ரீல் ஆகிய) நமது ரூஹை அவரிடம் அனுப்பினோம். அவர் அவளிடம் நேர்த்தியான ஒரு மனிதராகத் தோற்றமளித்தார்.’
‘நீர் பயபக்தியாளராக இருந்தால் உம்மை விட்டும் அர்ரஹ்மானிடம் நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகின்றேன் என (மர்யம்) கூறினார்.’
”பரிசுத்தமான ஒரு மகனை உமக்கு நான் கொடையாக வழங்குவதற்காக (அனுப்பப்பட்ட) உமது இரட்சகனின் தூதராவேன்’, என்று அவர் கூறினார்.’
”எந்த ஆடவரும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எவ்வாறு எனக்கு ஒரு மகன் உண்டாக முடியும்?’ என (மர்யம்) கேட்டார்.’
”அது அவ்வாறுதான். அது எனக்கு இலகுவானதாகும் என உமது இரட்சகன் கூறுகின்றான். அவரை மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், எம்மிடமிருந்துள்ள அருளாகவும் நாம் ஆக்குவதற்காகவுமே (இவ்வாறு செய்துள்ளோம்.) இது விதிக்கப்பட்டுவிட்ட ஒரு காரியமாகிவிட்டது’ என்று (ஜிப்ரீல்) கூறினார்.’
‘பின்னர் (மர்யம்) அவரைக் கருவுற்று, அதனுடன் தூரமான ஓர் இடத்திற்குத் தனித்துச் சென்றார்.’
இயேசு குழந்தைப் பருவத்தில் பேசியவர்
‘பிரசவ வேதனை, அவரை ஒரு பேரீத்த மரத்தடியின் பால் கொண்டுவந்து சேர்த்தது. (அப்போது) அவர், ‘நான் இதற்கு முன்னரே மரணித்து, முற்றிலும் மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?’ எனக் கூறினார்.’
‘அப்போது அவருக்குக் கீழ்ப் புறத்திலிருந்து (ஜிப்ரீல் ஆகிய) அவர் (மர்யமே! என) அவரை அழைத்து, ‘நீர் கவலை கொள்ளாதீர். உமக்குக் கீழே உமது இரட்சகன் ஒரு நீரூற்றை ஏற்படுத்தியுள்ளான்’ என்று கூறினார்.’
‘பேரீத்த மரத்தின் அடிப்பாகத்தைப் பலமாக உம்பக்கம் உசுப்புவீராக! அது கனிந்த பேரீத்தம் பழங்களை உம்மீது சொரியும்.’
‘நீர் உண்டு, குடித்து, கண்குளிர்ச்சி அடைவீராக! எந்த ஒரு மனிதனை நீர் கண்டாலும் ‘நான் அர்ரஹ்மானுக்காக மௌனம் அனுஷ்டிக்க நேர்ச்சை வைத் திருக்கின்றேன். எனவே, இன்றைய தினம் எந்த மனிதனுடனும் நான் பேசமாட்டேன்’ என (சைகை மூலம்) கூறுவீராக! (என்றும் அவர் கூறினார்).’ (19:16-26)
‘(ஈஸாவாகிய) அவரைச் சுமந்தவராக தனது கூட்டத்தாரிடம் (மர்யம்) அவரைக் கொண்டு வந்தபோது, ‘மர்யமே! விபரீதமான ஒரு செயலைச் செய்து விட்டாயே!’ எனக் கூறினர்.’
‘ஹாரூனின் சகோதரியே! உமது தந்தை கெட்ட மனிதராக இருக்கவும் இல்லை. உமது தாயும் நடத்தை கெட்டவளாக இருக்கவில்லையே! (எனவும் கூறினர்.)
‘அப்போது (தன் குழந்தையாகிய) அவர் பக்கம் சுட்டிக் காட்டினார். ‘தொட்டிலில் குழந்தையாக இருப்பவரிடம் நாம் எப்படிப் பேச முடியும்?’ என அவர்கள் கேட்டனர்.’
”நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமையாவேன். அவன் எனக்கு வேதத்தை வழங்கி, என்னை நபியாகவும் ஆக்கியுள்ளான்’ என்று (அக்குழந்தை) கூறியது.’
‘இன்னும் நான் எங்கிருந்த போதிலும் பாக்கியமளிக்கப்பட்டவனாக என்னை அவன் ஆக்கியுள்ளான். மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஸகாத்தையும் கொண்டு எனக்கு அவன் கட்டளையிட்டுள்ளான்.’
‘எனது தாய்க்கு நன்மை செய்பவனாகவும் என்னை அவன் ஆக்கியுள்ளான். மேலும், கர்வம் கொண்டவராகவும், துர்ப்பாக்கியமுடையவராகவும் என்னை அவன் ஆக்கவில்லை.’
‘நான் பிறந்த தினத்திலும், மரணிக்கும் தினத்திலும் உயிருடன் எழுப்பப்படும் தினத் திலும் என்மீது சாந்தி உண்டாகட்டும் (என்று கூறினார்.)’
(19:16-33)
அற்புதங்கள் புரிந்தவர்.
‘(அதற்கு மர்யம்) ‘என் இரட்சகனே! எந்த ஆடவரும் என்னைத் தீண்டாத நிலையில் எனக்கு எவ்வாறு குழந்தை உண்டாகும்!’ என்று கேட்டார். ‘அவ்வாறே அது’ (நடக்கும்) என்று அவன் கூறினான். அல்லாஹ், தான் நாடுவதைப் படைப்பான். அவன் ஒரு விடயத்தைத் தீர்மானித்து விட்டால் அதற்கு ‘குன்’ (ஆகுக!) என்று கூறுவதுதான், உடனே அது ஆகிவிடும்.
மேலும், அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் அவன் கற்றுக் கொடுப்பான்.
இஸ்ராயீலின் சந்ததியினருக்கு ஒரு தூதராகவும் (அவரை ஆக்குவான். அவர் அவர்களிடம்) ‘நிச்சயமாக நான் உங்களுக்கு, உங்கள் இரட்சகனிடமிருந்து ஒரு அத்தாட்சியைக் கொண்டு வந்துள்ளேன்’. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் தோற்றத்தைப் போல் உருவாக்கி, பின்னர் அதில் ஊதுவேன். உடனே அல்லாஹ் வின் உத்தரவினால் அது (உயிருள்ள) பறவையாக ஆகிவிடும். அல்லாஹ்வின் உத்தரவுப் பிரகாரம் பிறவிக் குருடரையும் குஷ்டரோகியையும் குணப்படுத்துவதுடன் மரணித் தோரையும் உயிர்ப்பிப்பேன். இன்னும், நீங்கள் உண்ணுபவற்றையும் உங்கள் இல்லங்களில் நீங்கள் சேமித்து வைப்பவற்றையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், நிச்சயமாக இதில் உங்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது’ (எனக் கூறினார்.)
எனக்கு முன் இருக்கும் தவ்றாத்தை உண்மைப்படுத்துபவனாகவும் உங்களுக்குத் தடுக்கப் பட்டிருந்த சிலவற்றை உங்களுக்கு ஆகுமாக்குவதற் காகவும் (உங்களிடம் நான் வந்துள்ளேன்.) இன்னும், ஓர் அத்தாட்சியையும் உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்குக் கொண்டு வந்துள்ளேன். எனவே, அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், எனக்கும் கட்டுப்படுங்கள்.
நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இரட்சகனும் உங்கள் இரட்சகனுமாவான். எனவே, அவனையே வணங்குங்கள்ளூ இதுவே நேரான வழியாகும் (என்றும் கூறினார்). ‘ (3:47-51)
இயேசு சிலுவையில் அறையப்பட வில்லை.
‘மேலும் அல்லாஹ்வின் தூதராகிய மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹை நாமே கொலை செய்தோம் என்று அவர்கள் கூறிய தினாலும் (சபிக்கப்பட்டனர்.) அவர்கள் அவரைக் கொலை செய்யவும் இல்லைளூ அவரைச் சிலுவையில் அறையவும் இல்லை. மாறாக அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான். நிச்சயமாக அவர் விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டோர் அவர் பற்றி சந்தேகத்திலேயே இருக்கின்றனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவரைப் பற்றி எவ்வித அறிவும் அவர்களுக்கு இல்லை. உண்மையாக அவர்கள் அவரைக் கொலை செய்யவில்லை.’ (4:157)
இயேசு இறைவன் அல்ல.
”மர்யமின் மகன் மஸீஹ்’ ஒரு தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் பல தூதர்கள் சென்றுவிட்டனர். அவரின் தாயோ உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்பவர்களாகவே இருந்தனர். அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் எவ்வாறு தெளிவுபடுத்துகின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! பின்னர் இவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? என்பதையும் கவனிப்பீராக!’
(5:75)
திரித்துவம் தவறானது.
‘வேதத்தையுடையோரே! உங்கள் மார்க்கத்தில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள். அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர வேறு எதனையும் கூறாதீர்கள். மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது வார்த்தையுமாவார். அவன் அதை மர்யமுக்கு (ஜிப்ரீல் மூலமாக) போட்டான். இன்னும் (அவர்) அவனிடமிருந்து வந்த ஓர் ஆன்மாதான். எனவே, அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுளை) மூவர் என்று கூறாதீர்கள். அதை விட்டு விடுங்கள். (அது) உங்களுக்கு நல்லதாகும். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியான வன் அல்லாஹ் ஒருவனே. அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூய்மையானவன். வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. பொறுப்பேற்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.’
‘மஸீஹோ, நெருக்கமான மலக்குகளோ அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதைத் தரக் குறைவாகக் கருதமாட்டார்கள். யார் அவனுக்கு (அடிமையாய்) வழிபடுதலை தரக் குறைவாகக் கருதி, பெருமையடிக் கின்றார்களோ அவர்கள் அனைவரையும் அல்லாஹ் (மறுமையில்) தன்னிடம் ஒன்று திரட்டுவான்.’
(4:171-172)
இயேசு வானுக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
‘மாறாக அவரை அல்லாஹ் தன்பக்கம் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான்.’ (4:158)
”ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும், என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும், நிராகரிப்பாளர்களை விட்டும் உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும் உம்மைப் பின்பற்றுவோரை, நிராகரித்தோரை விட மறுமை நாள் வரை உயர்வாக ஆக்குபவனாகவும் இருக்கின்றேன். பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே யாகும். அப்போது நீங்கள் எளிதில் கருத்து முரண்பட்டுக் கொண்டிருந் தீர்களோ அதில் நான் உங்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப் பேன்’ என அல்லாஹ் கூறியதை (எண்ணிப் பாருங்கள்.)’ (3:55)
மீண்டும் இறுதி நாளின் அடையாளமாக பூமிக்கு வருவார்.
‘நிச்சயமாக (ஈஸாவாகிய) அவர் மறுமைக்கான அடையாளமாவார். அது குறித்து நீங்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம். நீங்கள் என்னையே பின்பற்றுங்கள். இதுவே நேரான வழியாகும்.’ (43:61)
‘வேதத்தையுடையோரில் எவரும் (அவர் மீண்டும் பூமிக்கு வந்து) அவர் மரணிப் பதற்கு முன்னரே அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார். மறுமை நாளிலோ அவர் (வேதமுடைய) அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.’ (4:159)
யூத கிறிஸ்தவர்களே! குர்ஆன் அழைக்கிறது.
‘வேதத்தையுடையோரே! உங்கள் மார்க்கத்தில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள். அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர வேறு எதனையும் கூறாதீர்கள். மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது வார்த்தையுமாவார். அவன் அதை மர்யமுக்கு (ஜிப்ரீல் மூலமாக) போட்டான். இன்னும் (அவர்) அவனிடமிருந்து வந்த ஓர் ஆன்மாதான். எனவே, அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுளை) மூவர் என்று கூறாதீர்கள். அதை விட்டு விடுங்கள். (அது) உங்களுக்கு நல்லதாகும். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியான வன் அல்லாஹ் ஒருவனே. அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூய்மையானவன். வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. பொறுப்பேற்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.’ (4:171)
”வேதத்தையுடையோரே! உண்மைக்கு மாற்றமாக நீங்கள் உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீPர்கள். இன்னும், இதற்கு முன்னர் வழிகெட்டுப்போன கூட்டத்தாரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். அவர்கள் அதிகமானோரை வழிகெடுத்து, தாமும் சரியான வழியை விட்டும் தவறி விட்டனர்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக!’ (5:77)
சகோதரர்களே! இயேசு மரித்து உயிர்த்தார்! அதன் பின்பு எத்தனையோ இரத்த சாட்சிகள் இவ்வுலகத்தில் வந்து விட்டன!