கேள்வி – பதில்
கேள்வி:
2. ஜமாஅத்துடன் தொழும் போது இமாம் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறும் போது மஃமூம்களும் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூற வேண்டுமா?
முஸ்தாக் மர்சூக்
(பண்டாரபொத்தான)
பதில்:
ருகூஃவில் இருந்து சிறு நிலைக்கு வரும் போது இமாமும் தனியாகத் தொழுபவர்களும் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி அல்லாஹ்வைப் புகழ வேண்டும். ஆனால், மஃமூமாகத் தொழுபவர்கள் இமாம் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதாஎன்று கூறும் போது அதைக் கூறாமல் ரப்பனா லகல் ஹம்து என்ற துஆவை ஓத வேண்டும். இதுதான் சுன்னாவாகும்.
‘இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார் கள். ‘பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு முரண்படாதீர்கள்! அவர் ருகூவு செய்யும் போது நீங்களும் ருகூவு செய்யுங்கள்! அவர் ‘ஸமிஅல் லாஹுலிமன் ஹமிதா’ என்று கூறும் போது நீங்கள் ‘ரப்பனாலகல்ஹம்து’ எனக் கூறுங்கள்! அவர் ஸஜ்தாச் செய்யும் போது நீங்களும் ஸஜ்தாச் செய்யுங்கள்! அவர் உட்கார்ந்து தொழும் போது நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்! தொழுகையில் வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்! ஏனெனில், வரிசையை ஒழுங்கு படுத்துவது தொழுகையை அழகுறச் செய்வதாகும்’ என அபூ ஹுரைரா(வ) அறிவித்தார். ‘
(புஹாரி: 722)
இமாம் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறினால் நீங்கள் ரப்பனா லகல் ஹம்து என்று கூறுங்கள் என்றே நபியவர்கள் கூறியுள்ளார்கள். எனவே, மஃமூமாகத் தொழுபவர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறக்கூடாது.
ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்றால் அல்லாஹ்வைப் புகழ்பவருக்கு அல்லாஹ் செவிசாய்ப்பானாக என்பது அர்த்தமாகும். அப்போது பின்னால் தொழுபவர்கள் அல்லாஹ்வைப் புகழ வேண்டும். இதன் மூலம் இமாமின் துஆவை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். இதுவே சரியான வழிமுறையாகும்.
10.4*