Featured Posts

இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 03

“ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா”
(“இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும்”)

அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள்

தமிழ் மொழியில்: அபூ அபதிர்ரஹ்மான் அப்துர்ரஸ்ஸாக் இப்னு முஹம்மத் நஸார் அஸ்ஸைலானீ

நான் அல்லாஹ்வின் நேர்வழியை வேண்டியவனாகக் கூறுகின்றேன்:

இதுவே எமது அழைப்புப்பணியும்; மேலும் எங்களுடைய கொள்கை கோட்பாடும்.

1. அல்லாஹ்வைக் கொண்டும் மேலும் அவனுடைய பெயர்களைக் கொண்டும் மேலும் அவனுடைய பண்புகளைக் கொண்டும், அல்லாஹ்வுடைய வேதத்திலும் (குர்ஆனிலும்) மேலும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னாவிலும் எவ்வாறு அவைகள் வந்திருக்கின்றனவோ! அவ்வாறே, அதனுடைய சொற்களில் எந்த ஒரு திருப்பு முனையைச் செய்யாமலும் மேலும் அதனுடைய கருத்துக்களில் எந்த ஒரு பொய்யான வியாக்கியானங்களை செய்யாமலும் மேலும் அதற்கு உதாரணம் கற்பிக்காமலும் மேலும் அவைகளுக்கு ஒப்புவமை காட்டாமலும் மேலும் அதனை மறுத்துவிடாமலும், நாம் விசுவாசங்கொள்கின்றோம்.

2. அல்லாஹ்வை அன்றி வேறு எவரும் சக்தி பெறாத விடயங்களில், (அவைகளை அவர்களுக்கு செய்து தருமாறு) மரணித்தவர்களையும்; அதே போன்றே உயிருள்ளவர்களையும் அழைப்பதும் மேலும் அவர்களிடத்தில் (அது விடயத்தில்) உதவி தேடுவதும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் ஒரு விடயமாகும்.

3. மேலும் அவ்வாறே குப்பிகளிலும்; (மார்க்கம் தடுத்த) ஓதிப்பார்த்தல்களிலும், நிச்சயமாக அவைகள் அல்லாஹ்வுடன் சேர்ந்தோ அல்லது அல்லாஹ்வையன்றி (அவைகள் மாத்திரம்) பிரயோசனமளிக்கும் என்று நம்பிக்கைக் கொள்வதும் இணைவைப்பாகும். மேலும் (இவ்வாறான) நம்பிக்கைகளைக் கொள்ளாமல் அவ்வாறான விடயங்களில் ஈடுபடுவது, மார்க்கத்தில் ஏற்படுத்தப்பட்ட பொய்யான நூதன அனுஷ்டானமாகும்.

4. வேதத்தையும் (அல் குர்ஆனையும்) மேலும் அஸ்ஸுன்னாவையும் வெளிரங்கமாகவே (அவைகளுடைய வெளிரங்கமான கருத்துக்களையே) நாம் எடுத்துக்கொள்வோம்.

மேலும் அல் குர்ஆனிலிருந்தும்; ஸுன்னாவிலிருந்தும், அவைகளின் வெளிரங்கமான கருத்திற்கு மாறுபட்ட ஒரு கருத்தை வேண்டி நிற்கக்கூடிய ஒரு ஆதாரத்தைக் கொண்டே அன்றி, நாம் வெளிரங்கமான கருத்திற்கு மாறுபட்ட கருத்தைச் சொல்ல மாட்டோம்.

5. மறுமை நாளிலே, எந்தவொரு முறை கற்பித்தலுமின்றி நிச்சயமாக முஃமின்கள் அவர்களுடைய இரட்சகனை காண்பார்கள் என்று நாம் விசுவாசங்கொள்கின்றோம். மேலும் பரிந்துரை (ஷபாஅத்) என்பது இருக்கின்றது என்பதைக்கொண்டும்; நரகத்திலிருந்து ஏகத்துவவாதிகள் (தவ்ஹீத்வாதிகள்) வெளியேறி விடுவார்கள் என்பதைக்கொண்டும் நாம் விசுவாசங்கொள்கின்றோம்.

6. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களை நாம் விரும்புகின்றோம். அவர்களுக்கு எதிராக பேசக்கூடியவர்களை நாம் வெறுக்கின்றோம்.

மேலும் அவர்களுடைய விடயத்தில் குறைக்கூறுவது மார்க்கத்தில் குறைக்கூறுவதாகும் என்று நாம் நம்பிக்கை கொள்கின்றோம். ஏனென்றால் அவர்களே அதனை எமக்கு சுமந்துவரக்கூடியவர்களாக இருந்தனர். மேலும் நபித்துவத்தின் குடும்பத்தை மார்க்கம் எவ்வாறு விரும்புமாறு கூறியிருக்கின்றதோ அவ்வாறே நாம் விரும்புகின்றோம்.

7. மேலும் அஹ்லுஸ்ஸுன்னாவைச் சார்ந்த ஹதீஸ் கலை வல்லுனர்களையும் மேலும் ஏனைய இந்த உம்மத்தினுடைய ஸலபுகளையும் (முன்னோர்களையும்) விரும்புகின்றோம்.

இன்ஷாஅல்லாஹ்

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *