இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 07 (இறுதி தொடர்)
بسم الله الرحمن الرحيم
“ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா”
(“இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும்”)
அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ்.
27. எங்களுடைய அழைப்புப்பணியும், மேலும் கொள்கைக் கோட்பாடும் எமது ஆத்மாக்களை விடவும், சொத்துச் செல்வங்களை விடவும், பிள்ளைகளை விடவும் எமக்கு மிகவும் விருப்பமானதாகும். தங்க நாணயத்தைக்கொண்டும், வெள்ளி நாணயத்தைக்கொண்டும் அதை நாம் விற்றுவிடுவதற்கு தயாரானவர்களாக இல்லை. எந்த ஒரு ஆசை வைக்கக்கூடியவரும் எமது அழைப்புப்பணியிலே, அதனை வாங்கி விடுவதற்கு ஆசை வைத்து விடக்கூடாது என்பதற்காகவும், அவர் தங்க, வெள்ளி நாணயத்தைக் கொண்டும் எங்களை வளைத்து விட சக்தி பெற்று விடுவார் என்று அவர் எண்ணாமல் இருப்பதற்காகவுமே நாம் இதனைக் கூறுகின்றோம். நிச்சயமாக அரசியல் வாதிகள் எங்களைத் தொட்டும் இந்த விடயத்தை அறிந்து வைத்திருக்கின்றனர். இக்காரணத்தினால் தான் அவர்கள் பட்டம் பதவிகளைக்கொண்டோ அல்லது சொத்து செல்வங்களைக் கொண்டோ எங்களுக்கு ஆசை ஊட்டுவதை விட்டும் நிராசையடைந்தவர்களாக இருக்கின்றனர்.
28. இஸ்லாமிய அரசாங்கங்களை; அதிலே எந்த அளவுக்கு நலவு இருக்கின்றதோ அந்த அளவுக்கு நாம் அவைகளை விரும்புவோம். அவைகளில் கெடுதி இருப்பதற்காக வேண்டி நாம் அவைகளை வெறுக்கின்றோம். மேலும் இது தெளிவாகவே இறை நிராகரிப்புத்தான் என்பதை நாம் கண்டுகொண்டால்; அல்லாஹ்விடமிருந்து அதை தெளிவு படுத்தக்கூடிய ஒரு ஆதாரம் எங்களிடம் இருந்தாலே அன்றி அரசாங்கங்களுக்கு எதிராக வெளிக்கிளம்பிச் செல்வதை நாம் ஆகுமாக்க மாட்டோம். (தெளிவான இறை நிராகரிப்பை அவர்களிடமிருந்து நாம் கண்டால்; அவர்களுக்கு எதிராக வெளிக்கிளம்புவதற்கு முன்னால்) ஒரு நிபந்தனையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அது என்னவென்றால், அவர்களுக்கு எதிராக வெளிக்கிளம்பி செல்வதற்கு சக்தி பெற்றவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் போர் புரியும் போது அப்போரில் இரு தரப்பினரும் முஸ்லிம்களாக இருக்கக் கூடாது. ஏனெனில் நிச்சயமாக ஆட்சியாளர்கள் அவர்களுக்கு எதிராக வெளிக்கிளம்புபவர்களை நாட்டை சேதப்படுத்தக்கூடியவர்கள் என்றும், சீர்க்குலைக்கக்கூடியவர்கள் என்றும் படம்பிடித்துக்காட்டுகின்றனர். மேலும் இதனுடன் தொடர்புபட்ட இன்னும் சில நிபந்தனைகள் எமது வேறு சில புத்தகங்களிலிருந்து மீட்டிக்கொள்ளப்பட வேண்டும்.
29. எங்களுக்கு எவர் நல்ல விடயங்களின் பக்கம் வழிகாட்டி, நல்லுபதேசமும் செய்கின்றாரோ; அவைகளை நாம் அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்வோம். நிச்சயமாக நாங்கள் அறிவை படிக்கின்ற மாணவர்கள். நாம் சரியாகவும் சொல்வோம், (சிலவேளைகளில்) பிழை விட்டும் விடுவோம். நாம் அறிவுடையவர்களாகவும் இருக்கின்றோம், (சில விடயங்களில்) அறிவற்றவர்களாகவும் இருப்போம் என்பதையும் நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.
30. தற்காலத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற சுன்னாவைப் பின்பற்றக்கூடிய அறிஞர்களை நாம் விரும்புகின்றோம். அவர்களிடமிருந்து பிரயோசனங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் நாம் ஆசை வைக்கின்றோம். அதிகமானவர்கள் அவர்களிடமிருந்து பிரயோசனம் பெறாது அவர்களைத் துண்டித்து நடப்பதைப் பார்த்து நாம் கவலைப்படுகின்றோம்.
31. அல்லாஹ்வினுடைய வேதத்திலிருந்தும், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உறுதியான சுன்னாவிலிருந்தும் இருக்கின்ற ஒரு ஆதாரத்தைக் கொண்டே அன்றி நாம் மார்க்கத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
32. நாஸ்த்தீகக் கொள்கையின் தலைவர்களில் ஒருவனான லெனினினுடையவும், மேலும் (அவர்களைச் சார்ந்த) அவனல்லாத வேறு மனிதர்களுடையவும் கப்ருஸ்த்தானத்தை மகத்துவப்படுத்துவதற்காக வேண்டி சந்திக்கச் செல்கின்ற இவ்விடயத்தில் (முஸ்லிம்களாக இருக்கின்ற) பொறுப்பாளர்களின் மீதும் மேலும் அவர்களல்லாதவர்களின் மீதும் நாம் மறுப்புத்தெரிவிக்கின்றோம்.
33. முஸ்லிம்களை ஆட்சி செய்யக்கூடிய ஆட்சியாளர்கள் இஸ்லாத்தினுடைய எதிரிகளுடன், (அவர்கள் அமெரிக்கா நாட்டைச் சார்ந்தவர்களாக, கம்யூனிஸ்ட் வாதிகளாக அல்லது யாராக இருந்தாலும் சரி அவர்களுடன்) ஒற்றுமையாக இருப்பதற்கு எதிராக நாம் மறுப்புத்தெரிவிக்கின்றோம்.
34. ஒரு கூட்டத்திற்கு; எல்லை மீறி (அளவு கடந்து) பற்றுக்கொள்வது, அதாவது அரபு வம்சாவளியைச் சார்ந்த சிலருக்கு அவர்கள் அசத்தியத்தைக் கூறினாலும் கூட அவர்களே சரியான கொள்கையில் உள்ளனர் என்று அவர்களுடைய விடயத்தில் அளவு கடந்து செல்வது போன்ற மடமைக்கால அழைப்புக்களை நாம் மறுக்கின்றோம். மேலும் அவைகளை மடமைக்கால அழைப்புக்களாகவும், முஸ்லிம்களை பின்தள்ளிய காரணங்களில் ஒன்றாகவும் இருக்கின்றன என்று நாம் கணிக்கின்றோம்.
35. அல்லாஹ் இந்த மார்க்கத்தை எவரைக் கொண்டு புதுப்பிப்பானோ அப்படியான மார்க்கத்தை புதுப்பிக்கக்கூடிய ஒருவரை நாம் எதிர்ப்பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். அபூ தாவூத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய ஸுனன் என்ற நூலிலே, அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ஒவ்வொரு நூறு வருடத்தின் ஆரம்பத்திலும் இந்த உம்மத்திற்கு அதனுடைய மார்க்கத்தைப் புதுப்பிற்கக்கூடிய ஒருவரை நிச்சயமாக அல்லாஹ் அனுப்பி வைப்பான்.”
மேலும் இஸ்லாமிய எழுச்சி அவருக்கு விரித்துக்கொடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் நாம் ஆசை வைக்கின்றோம்.
36. மஹ்தீ மற்றும் தஜ்ஜாலின் வருகை, மேலும் ஈஸா இப்னு மர்யம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் இறங்குவது சம்பந்தமாக வரக்கூடிய ஹதீஸ்களை மறுக்கின்றவன் வழிகேட்டிலே இருக்கின்றான் என்று நாம் நம்பிக்கை கொள்கின்றோம். (மஹ்தீ என்று நாம் கூறியதைக்கொண்டு ராபிழாக்களுடைய மஹ்தியை நாம் நாடவில்லை); மாற்றமாக அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்திலிருந்து உள்ள ஒருவராக இருப்பார். இன்னும் அவர் அஹ்லுஸ்ஸுன்னாவிலிருந்து உள்ள ஒருவராகவும் இருப்பார். இப்பூமி (அவர் வருவதற்கு முன்னால்) அனியாயத்தைக் கொண்டு நிறைந்திருந்ததைப் போல் (அவர் வந்ததன் பின்பு) நீதியைக்கொண்டும், நேர்மையைக்கொண்டும் இப்பூமியை அவர் நிறைப்பார். மேலும் அவர் அஹ்லுஸ்ஸுன்னாவைச் சார்ந்தவராக இருப்பார் என்று நாம் கூறினோம். ஏனெனில் சிறப்புக்குறிய ஸஹாபாக்களை ஏசுவது நேர்மையிலிருந்தும் உள்ள ஒரு விடயமல்ல.
37. இவைகளே எங்களுடைய கொள்கைக் கோட்பாடுகள். மேலும் எமது அழைப்புப்பணியைப் பற்றிப் பேசக்கூடிய மூச்சுக்களுமாகும். இவைகளை இதனுடைய ஆதாரங்களுடன் கூறுவதானால், இப்புத்தகம் நீண்டதாக ஆகிவிடும்.
(எனவே தான் இவைகளுக்குறிய ஆதாரங்களை இமாமவர்கள் இப்புத்தகத்திலே குறிப்பிடவில்லை.)
மேலும் இவ்விடயங்களின் அதிகமான ஆதாரங்களை “அல் மஹ்ரஜ் மினல் பித்னா” என்ற புத்தகத்திலே நான் குறிப்பிட்டிருக்கின்றேன். எவரிடத்தில் இப்புத்தகத்திற்கு முரணான கருத்து இருக்கின்றதோ, அவர் சத்தியத்தைக் கூறுபவராக இருந்தால், உபதேசத்தை ஏற்றுக்கொள்வதற்கும், அவர் பிழையாகக் கூறக்கூடியவராக இருந்தால் அவருடன் விவாதம் செய்வதற்கும், மேலும் அவன் பிடிவாதக்காரனாக இருந்தால், அவனை விட்டும் புரக்கணித்துச் செல்வதற்கும் நாம் தயாரானவர்களாக இருக்கின்றோம்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
இவைகளேயே இச்சிறிய நூலிலே நாம் உங்களுக்கு முன்வைக்கின்றோம். மேலும் அவசியமாக அறியப்பட வேண்டிய ஒன்று தான் இப்புத்தகம் எங்களுடை அழைப்புப்பணியுடை மற்றும் எமது கொள்கை கோட்பாடுகளுடைய அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக இல்லை. ஏனெனில் எங்களுடைய அழைப்புப்பணி அல் குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரைக்கும் காணப்படுகின்றது.
அல்லாஹ்வே எங்களுக்கு போதுமானவனாவான். அவனே பொறுப்பாளர்களில் சிறந்தவனாக இருக்கின்றான். மேலும் எந்த ஒரு சூழ்ச்சியும் இன்னும் சக்தியும் அல்லாஹ்வுக்கே அன்றி வேறில்லை.
முற்றும் .
அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் .